RSS

ஏங்கி நின்றான்..! ஏக்கம் தொடர்கிறது…

02 Feb

1111111111அடுத்த வீட்டுக்கல்யாணத்தில்
ஆடம்பரமாய் பகல் உணவு
வாரித்திரண்டு மக்கள் வர
வரவேற்க வந்தனர் பலர்
வயசான ஒரு கிழவர்
வந்து நின்றார் வயிற்றுப்பசியில்
வந்தவரை தூர விரட்டி
வயிறு நிறைத்த மனிதனை கண்டு
ஏங்கி நின்றான்…!

மீதி உணவை கழிவாய் எறிந்து
மிகைப்புடனே சொல்லிப்புகழ்ந்து
மார்தட்டி நடந்து வந்த
மாப்பிள்ளை வீட்டார்
மனதை எண்ணி
ஏங்கி நின்றான்…!

  • கன்னி அவளை கரை சேர்க்க
    கடும் உழைப்பில் சேர்த்த பணம்
    வரதட்சணை எனும் முதலை வாயில்
    வாரி இறைத்து கொடுத்து விட்டு
    வானம் பார்த்த பூமியாக
    வயிறு காய்ந்த சோகமெண்ணி
    ஏங்கி நின்றான்…!

    வயிறெரிய வாங்கிய பணம்
    வருவோரை மகிழ வைக்க
    வகை வகையாய் உணவு கொடுத்து
    ஆடம்பரத்தில் தீர்த்து முடித்து
    அரசனாய் வாழ்ந்த அவன்
    ஆண்டியாகிப்போனது கண்டு
    ஏங்கி நின்றான்…!

    பணமில்லாமல் நடை பிணமாய்
    பெண் பெற்றவன் பகல் கனவாய்
    முடிவில்லாத இக்கொடுமை
    முழுவதுமே முடிவுபெற
    முற்றுப்புள்ளி வைக்கும்
    நன் மக்கள் வரும் நாளை எண்ணி
    ஏங்கி நின்றான்..!

    வெறுப்புற்ற இவ்வாழ்வில்
    வேதனையால் அவன் வாட
    வெகுமதிகள் பல கேட்கும்
    வெட்கம் கெட்ட சொந்தம் நினைத்து
    ஏங்கி நின்றான்…!

    சிறப்புடனே வாழ்வைத்துவக்க
    சீராட்டி உரைத்து விட்டு
    நடிப்புடனே புகழ் பேசி
    நகைப்புடனே புறம்பேசும்
    நயவஞ்சக மனிதனை கண்டு
    ஏங்கி நின்றான்..!

    51mmx51mmஅதிரை மெய்சா
    http://nijampage.blogspot.in/2013/02/8.html

     
  • One response to “ஏங்கி நின்றான்..! ஏக்கம் தொடர்கிறது…

    1. சேக்கனா M. நிஜாம்

      February 2, 2013 at 5:56 pm

      // நடிப்புடனே புகழ் பேசி
      நகைப்புடனே புறம்பேசும்
      நயவஞ்சக மனிதனை கண்டு //

      கவியின் அருமை வரிகள்

      தொடர வாழ்த்துகள்…

       

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: