RSS

அரசியல் சதுரங்கத்தில் சிக்கிய கமல்: குறி வைத்தது யார்?

03 Feb

kamalஅரசியல் சதுரங்கத்தில் சிக்கிய கமல்: குறி வைத்தது யார்?விஸ்வரூபம் திரைப் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்சிகள் வைக்கப் பட்டுள்ளன என 24 முஸ்லிம் அமைப்புகள் காவல்துறை ஆணையரிடம் முறையிட, தமிழக அரசு உடனடியாக விஸ்வரூபம் திரைப் படத்துக்குத் தடை விதித்தது.

தடையை மீறி நீதிமன்றப் படியேறிய கமலுக்கு, உயர்நீதிமன்ற தனி நீதிபதி சாதகமான தீர்ப்பை வழங்கிய போதும் மாண்பமை நீதிபதிகள் எலிப்பி தர்மா ராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய அமர்வு படத்துக்கு மீண்டும் தடை விதித்தது.

படத்துக்கான தடைக்கு முஸ்லிம் அமைப்புகள் மட்டும் தாம் காரணமா என்று சந்தேகம் கிளம்பிய நிலையில் விஸ்வரூபம் திரைப் படத்தின் தொலைக் காட்சி உரிமை கை மாறியதும் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை நடிகர் கமல் ஹாசன் புகழ்ந்து பேசியதும் கூட அரசின் கோபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி சில காரணங்களை விளக்கினார்.மேலும் விக்ரம் திரைப் படத்தின் நிதி சேகரிப்பு விழாவுக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரை அழைத்து உரிய விளம்பரம் செய்யாத காரணத்தால் கமலை முதல்வர் ஜெயலலிதா ஒருமையில் திட்டி எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதியதாகவும் அந்தக் கடிதம் எழுதப் பட்ட காலத்தில் இருந்தே ஜெயலலிதாவுக்கும் கமலுக்குமான உரசல் ஆரம்பித்து விட்டது என்றும் கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

 • கருணாநிதியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்த தமிழக முதல்வர் ”ஜெயலலிதா எனக்கு கமல் எதிரி அல்ல; ஜெயா தொலைக் காட்சி அதிமுக ஆதரவுத் தொலைக் காட்சியே தவிர ஜெயா டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை. வேட்டி கட்டிய தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்பது கமல் விருப்பம். ஆனால் கமல் மட்டுமே பிரதமரைத் தீர்மானிக்க முடியாது. விஸ்வரூபம் படம் சம்பந்தமாக மோதிக்கொள்ளும் இரு தரப்பும் பேசித் தீர்த்துக் கொள்ள முன் வந்தால் அரசு உதவி செய்யும்” என்றும் விளக்கம் அளித்தார்.

  அன்று மாலையே மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல் படம் வெளியாக அரசு உதவி செய்யும் என்று தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்ததோடு ”எனக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு மத ரீதியிலானது அல்ல; அரசியல் ரீதியிலானது. இஸ்லாம் ஒரு போதும் வன்முறையைக் கற்று தரவே இல்லை” என்று தெரிவித்தார்.

  ஆக மொத்தத்தில் விஸ்வரூபம் திரைப் பட விவகாரத்தில் அரசியல் முக்கியப் பங்கு வகித்துள்ளது. நாம் அறிந்த வரை விஸ்வரூபம் திரைப் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில நெருடல் காட்சிகளைத் தவிர படத்தைத் தடை செய்யும் அளவுக்கு மோசமான காட்சிகள் கொண்ட படம் இல்லை அது என்றே தெரிகிறது.

  ஜனவரி 21 அன்று முஸ்லிம் அமைப்புகளுக்கு நடிகர் கமல் படத்தைப் போட்டுக் காண்பித்தார் என்று சொல்லப் படுகிறது படத்தைப் பார்த்த முஸ்லிம் அமைப்புப் பிரதி நிதிகள் காவல்துறை ஆணையர் மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்துப் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி மனு கொடுத்ததால் 24 அன்று மாலை படத்தைத் தடை செய்து அரசு உத்தரவிடுகிறது.

  இங்கு நமக்கு எழும் சந்தேகம், படத்தில் உள்ள காட்சிகள் முஸ்லிம் அமைப்புகளைக் காயப் படுத்தி இருந்தால் கமலிடம் திருத்தங்கள் செய்யச் சொல்லி, பிரச்னை சுமுகமாக முடிய முயற்சி செய்து இருக்கலாம். கமலிடம் சொல்லி கமல் மறுத்தாரா? அவ்வாறு கமல் மறுக்கும் நிலையில் முஸ்லிம் அமைப்புகள் அரசிடம் முறையிட்டு இருக்கலாம். இங்கு முஸ்லிம் அமைப்புகள் அதைச் செய்தனவா என்பது குறித்து பெரும் சந்தேகம் உண்டு.

  ஒரு நோக்கத்துக்காக ஒன்று பட்டுள்ள 24 முஸ்லிம் அமைப்புகள், 24 அமைப்புகளாகப் பிளவு பட்டதற்கு என்ன காரணம் என்பது இங்கு தேவையற்ற ஒன்று என்ற போதிலும் 24 முஸ்லிம் அமைப்புகளுக்குப் பின்னால் எதுவும் அரசியல் சக்தி விளையாடியதா என்பதும் அறிந்து கொள்ளப் பட வேண்டிய ஒன்று. நடிகர் கமலும் தமது அறிக்கை ஒன்றில் ”முஸ்லீம் அமைப்புகள் முதுகில் குத்தி விட்டனர்” என்று தெரிவித்து இருந்தார்.

  கமலுக்குத் தொந்தரவு கொடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டது என எடுத்துக் கொண்டாலும் கமலை இழுக்கும் முயற்சியில் வேறு கட்சிகள் ஈடுபட்டதன் பின்னணி என்ன? முஸ்லீம் அமைப்புகளுடன் உட்கார்ந்து பேசி சுமூகத் தீர்வு எட்டப் பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்த இஸ்லாமியர்களின் பாதுகாவலன் எனக் கூறிக் கொள்ளும் கருணாநிதியும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையைச் சரியாகச் செய்தார்.

  பிரச்னையின் நேரம் காலம் புரியாமல் கமலுக்கு எதிராக அரசைச் சீண்டும் வேலையைச் சரியாகவே செய்து முடித்தார் கருணாநிதி. ஜெயலலிதா கமலை ஒருமையில் திட்டிக் கடிதம் எழுதி இருந்தாலும் அது குறித்துக் கவலைப் பட வேண்டியது கமல் தானே தவிர கருணாநிதி அல்லவே.

  விரக்தியில் பேசும் கமல் ஒரு விவகாரத்தில் விவேகமாகச் செயல் பட வில்லை. தனி நீதிபதி வெங்கட் ராமன் தடையை நீக்கித் தீர்ப்பு அளிப்பதற்கு முன்னர் பிரச்னைக்கு சுமூகத் தீர்வை எட்டக் கொடுத்த ஒரு நாள் அவகாசத்தைக் கமல் தரப்பு சரியாகப் பயன்படுத்த வில்லை. அதிலும் சில அரசியல் சக்திகள் அவருக்குத் தவறாக வழி காட்டி விட்டனவோ என்ற சந்தேகமும் உண்டு. இன்று கமல் தரப்பு எடுத்த முடிவை அன்றே எடுத்து இருந்தால் பிரச்னை தீர்ந்து விஸ்வரூபம் எப்போதோ வெளியாகி இருக்கும்.

  ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் சதுரங்க விளையாட்டில் சிக்கியுள்ள கமல் சேலை மேல் விழுந்த முள்ளை மெதுவாக எடுக்க வேண்டும். பிரச்னை என்னவோ கமலுக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் தாம். அறுவடை செய்ததோ அரசியல் சக்திகள். பாவம் கமலுடன் சேர்ந்து நஷ்டப் பட்டது முஸ்லிம் அமைப்புகளும் தாம்!

  தியேட்டர்கள் சூறையாடப் பட்டதில் வன்முறையாளர்கள் என்ற பெயர் தான் முஸ்லிம்களுக்கு மிச்சம். வேகம் இருந்தால் மட்டுமே போதாது; கொஞ்சம் விவேகமும் வேண்டும். ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பார்கள். ஆனால் கமலும் முஸ்லிம் அமைப்புகளும் ரெண்டு பட்டுப் போனதில் அரசியல் சக்திகளுக்கே கொண்டாட்டம்.

  அரசியலைப் பற்றி இன்றைய நடிகர்களுக்கு தெளிவான பார்வை தேவை. தங்களுக்கு தேவைப் படும் நேரங்களில் அரசியல் தலைவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் நடிகர்கள் போன்றே, தேர்தல் நேரங்களில் நடிகர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்ள எண்ணுகின்றனர்.

  அவர்களுக்கு ஒத்து ஊதும் வரை உங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. இல்லையேல் உங்கள் கல்யாண மண்டபங்கள் இடிக்கப் படும். உங்களின் பட வாய்ப்புகள் பறிக்கப் படும். வாய்ப்பு கிடைத்தால் உங்கள் படத்துக்கு தடையும் விதிக்கப் படும்.

  விஸ்வரூபம் தடை பின்னணியில் அரசியல் உள்ளது என்று தெரிவித்துள்ள கமல், தம் வாய் திறந்து திரை மறைவு உண்மைகளை உலகுக்கு உணர்த்துவது காலத்தின் கட்டாயம்.

  http://www.inneram.com/opinion/politics/kamal-in-politics-play-8661.html

  Advertisements
   
 • Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: