RSS

சாரு நிவேதிதாவின் விஸ்வரூபம்

03 Feb

Saru(Saruவிஸ்வரூபம் பற்றி பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா எழுதிய கட்டுரை.இப்படி எழுதிய இவரும் இன்றுமுதல் ஒருவேளை கலாசாரதீவிரவாதி என்று அழைக்கப்படலாம்….)

விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன்.

அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது. என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

 • ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும். தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன். விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது. நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது. அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்? அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்? அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள். ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்? கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை. பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.

  இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன். அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது. வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது. சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில். ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை. ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

  விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன. ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

  முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம். மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது…

  தகவல் :http://charuonline.com/blog/?p=167
  Source: http://niduri.com/?p=4713

  Advertisements
   
 • Tags: ,

  2 responses to “சாரு நிவேதிதாவின் விஸ்வரூபம்

  1. KAYAL SHAMS

   February 9, 2013 at 1:05 pm

   GOOD ARTICLE BY THE NON-MUSLIM BROTHER………..

    
  2. zaidh

   February 20, 2013 at 6:56 pm

   உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக,
   உங்களது கட்டுரையை படித்த பின்பு எங்களை போன்ற இஸ்லாமியர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் ஒரு மனிதர் இருக்கிறார் என சந்தோஷமாக உள்ளது. உண்மையில் நானும் கமலின் ரசிகனாகத்தான் இருந்தேன். தற்போது அவரது ரசிகர்கள் சினிமா பசிக்காகத்தான் அவரது விஸ்வரூபத்தை வரவேற்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை வெகு நாட்களுக்கு பிறகு வெளிவரும் கமலென்ற கலைஞனின் ஒரு படைப்பை முஸ்லிம்கள் தடை செய்துவிட்டார்களே, கமலை காயப்படுத்தி விட்டார்களே என்ற கோபம் மட்டுமே உள்ளது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அவர்களது சக்திக்கேற்ப அனைத்து துறைகளிலும் தியாகம் செய்து நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றை அங்கீகரிகாமல் மறைத்து இன்னும் முஸ்லிம்கள் பற்றி வெறுப்பை உள்ளத்தில் விதைக்கும் முயற்சியாகத்தான் விஸ்வரூபம் படம் இருந்தது. உலக அரசியலுக்காகவும் , உள் நாட்டு அரசியலுக்காகவும் தங்களின் வாழ்வையும் உயிரையும் இழந்து கொண்டிருப்பவர்கள் தான் முஸ்லிம்கள். ஆனால் அவர்களது வாழ்க்கையின் மறுபக்கத்தை இதுவரை யாரும், குறிப்பாக இந்திய சினிமாதுறையில் பெரிதாக பதிவு செய்யவில்லை. முஸ்லிம்களுக்கென்று ஒரு இறை நம்பிக்கை , கலாச்சாரம் பண்பாடு உண்டு என்று அறிந்து அதை மதிக்கிறவர்களையும் , வரேவற்பவர்களையும் மிக குறைவாகவே காணுகிறோம். விஸ்வரூபம் படத்தை பொறுத்து உங்களை போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கள் மூலம் எங்களைப் போன்ற முஸ்லிம்கள் மனதுக்கு ஒரு ஆறுதல் அளித்தது மட்டுமல்லாது நாங்கள் இந்தப்படத்தை பொறுத்து சரியான முடிவெடுத்துள்ளோம் என்பதை உணர வைத்ததற்கு . நன்றி.

    

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: