RSS

யார் நம் நாட்டுக்கு ஆபத்தானவர்கள்

07 Feb

kural983
நம் நாட்டுக்கு சீனாவோ, பாக்கிஸ்தானோ மற்ற எந்த நாடும் ஆபத்தை தந்து விட முடியாது. ஆனால் நாம் பாராமுகமாக இருந்தால் நாமே நமக்கு ஆபத்தை விளைவித்துக் கொள்ள முடியும். . மத,இன, ஜாதி விரோதத்தை தூண்டுபவர்கள் தான் நம் நாட்டுக்கு ஆபத்தானவர்கள் .எந்த மதமும்,மார்க்கமும் விரோதத்தை வளர்க்கவில்லை அதனை ஆதரிக்கவுமில்லை.அனைத்து மார்க்கமும் மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகின்றன நன்மையான காரியங்களுக்குத்தான் அது வழி வகுக்கின்றது. ஏதோ ஒரு சிலர் விரோதத்தை தூண்டுபவர்களாக இருக்க அப்பாவி மக்கள் அதற்கு துணை போய் விடுகிரார்கள். அதனை பெரிதுபடுத்தி எழுதவும் பேசவும் செய்கின்றார்கள் . ஒரு சில செய்தித் தாள்களும் .தொலைகாட்சியும் மற்றும் வலைதளங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதிலும் விவாத மேடை என்ற போர்வையில் சிலரால் நச்சுக் கருத்துகள் எடுத்து வைக்கப் படுகின்றன.

பல நிற, இன, மத, ஜாதி, மொழி கொண்ட நம் நாட்டுக்கு ஒற்றுமையே மிகவும் சிறப்பானது . நம் நாடு இத்தனை வேறுபாடுகள் இருந்தும் ஒரு மக்களாட்சியாக, சுதந்திர நாடாக இருப்பது நமக்கு ஒரு சிறப்பு . அதிக மக்கள் தொகை கொண்ட இந்த பெரிய நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வது மிகவும் உயர்வானது. உலகில் எங்கும் பார்க்க முடியாத மக்களாட்சியை சிறப்பாக செய்து வரும் நாடு நம் நாடு. நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோர் மிகவும் அருமையான அடித்தளத்தை தந்து விட்டார்கள் நமது அரசியல் சட்டப் புத்தகமும் முறைபடுத்தப் பட்டுள்ளது .

அன்பை வளர்ப்போம், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கீழ் பட்டு சிறப்புடன் ஒற்றுமையாய் வாழ்வோம்

 

Tags: , ,

2 responses to “யார் நம் நாட்டுக்கு ஆபத்தானவர்கள்

  1. thumbi

    February 8, 2013 at 12:46 am

    மிக நல்ல பதிவு.
    ஒவ்வொரு சொல்லும் கோடி ரூபாய் பெறும்.
    இந்த அமைதியுடனும் சகிப்புத்தன்மையுடனும் கூடி வாழ்வோம் என்ற முழக்கமே
    வலைத் தளங்களில், தொலைக் காட்சிகளில், செய்திப் பத்திரிகைகளில், சமயப் பேரவைகளில் ஒலிக்க வேண்டும்.
    நெற்குப்பை தும்பி : மா.சேகர்.

     
  2. S.E.A.Mohamed Ali. "nidurali"

    February 8, 2013 at 7:12 pm

    மிக்க நன்றி தும்பி : மா.சேகர்.அவர்களுக்கு

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: