RSS

மக்களோடு பகிர்ந்துக் கொள்ளும் நேர்மையான உதவிக் கரம் நம்மை உயர்த்தி வைக்கும்.

06 Mar

61400_308607025909776_1319756926_nஇறைவனது ஆணைக்கு கட்டுப்படுதல் மற்றும் அவன் காட்டிய வழியில் வாழ்பவனே இறைவனால் நேசிக்கப்பட தகுதியை அடைய முடியும் . கல்வியை உயர்வாகப் பெற்று விட்டதாலோ அல்லது அங்க அடையாளங்களை பேணுதல் முறையாக உடல் ஆடையில் மற்றும் உடல் தோற்றத்தாலோ இறைவனது நேசத்தை பெற்று விட முடியாது

கல்வியைப் பெற்றவர்கள் மனதில் தவறான எண்ணங்கள் ஊடுருவல் செய்து மக்களுக்கு பாதிப்பு உண்டாக்கியாவது தான் தவறான முறையில் பலன்களை அடைய முயல்கிறார்கள் . கற்ற கல்விக்கும் வாழும் முறைக்கும் மாறுபட்டதாக சுயநலம் ஒன்றையே முக்கியம் கொடுத்து வாழ்கிறார்கள் . இவர்கள் இறைவனுக்கும் மாறு செய்வதோடு இறை அச்சம் போய் அரசியல் சட்டத்தினையும் மதியாமல் தவறு செய்கிறார்கள் .
மன உறுதி இதய தூய்மை பெற கல்லூரியில் படித்துத்தான் அறிய வேண்டுமென்ற அவசியமுமில்லை. இறை நேசர்களுக்கும் உளத் தூய்மையை நேசிபவர்களுக்கும் மன உறுதி இருந்தால் போதும்.சமுதாயத்தின் மீது அக்கறையும் தானாக வந்துவிடும்.

  • மார்க்கத்தில் தன்னை தாங்கள்தான் மிகவும் மார்க்கம் சொல்லியபடி வாழ்வை இணைத்துக் கொண்டதாக வறட்டு சடங்குகளில் வாழ்நாளை கழித்துக்கொண்டிருப்பார்கள். பெரிய ஞானம் பெற்றவர்களாக பெருமையடைவார்கள் அவ்விதம் மற்றவர்களும் நினைக்க வேண்டுமென்று அரும்பாடு பெற்று ஆதாயம் தேட முயல்வார்கள்.
    தன்னலம் ,மார்க்கம் ,ஆத்மீகம் ,சுவனம் பற்றி சிந்திப்போர் உடன் வாழும் மக்களை அறிவோர் இல்லை.அவர்களுக்கு உதவுவதுமில்லை. மார்கத்தோடு தம் வாழ்கையை குறுக்கிக் கொள்கின்றார்கள்.இறைவனை அறிந்துக் கொள்ளும் ஞானம் வேத நூல்கலைப் படிப்பதனால் அதனை மற்றவருக்கு எடுத்து சொல்வதால் மட்டும் வருவதில்லை.தினசரி நாம் மக்களோடு பகிர்ந்துக் கொள்ளும் நேர்மையான உதவிக் கரம் நம்மை உயர்த்தி வைக்கும். எளிமையான வாழ்கை, அனுசரித்துப் போதல் ,தம்மால் முடிந்ததை மட்டும் செயல் படுத்த முயலவேண்டும். இல்லையெனில் விரக்தி வர ஆத்மீகம் அகன்றுவிடும் . ஆத்மாவை நேசித்து அடுத்தவர்களுக்காகவும் நாம் விடும் மூச்சு இருக்க வேண்டும். ஆத்மீகம் எளிய சேவை மற்றும் பக்தியிலிருந்துதான் துவங்க வேண்டும்

     
  • Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: