RSS

மகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தோர்

08 Mar

மகளைப் பெற்றோர் கொடுத்து வைத்தோர்

மகள் என்றால் நம் நினைவுக்கு வருவது நாம் பெற்ற மகள்கள்தான்
ஒரு தாய்க்கு தன் மகளுக்கு செய்யும் பணி எளிமையாக இருக்க முடியாது. தாய் மகளை அன்பு காட்டி நேசமாக வளர்ப்பதால் இருவருக்கும் நட்பு மனப்பான்மை உயர்ந்து நிற்கும்.இந்த நிலை தாய்க்கும் அவளது மகனுக்கும் இருப்பதில்லை. தாய்க்கு பணிவிடை செய்வதிலும் மகளே உயர்ந்து நிற்கின்றாள். பெண் பிள்ளை இல்லாத தாய் தனது இறுதிக் காலத்தில் படும் அவதி பரிதாபத்திற்குரியது.

MotherPrintingFormatநபி மொழி
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

மருத்துவர் வைத்தியம் பார்க்கும் போது அறுவை சிகிழ்சை செய்யும் போது அவருக்கு ஒரு உடலாகத்தான் தெரியும்.அந்த உடலை பாதுகாப்பதில் தன கவனம் முழுதும் இருக்கும் .மருத்துவர் தன் மருத்துவ ஆடையை கழட்டி வீட்டுக்கு வந்து விட்டால் உறவுகள் அந்த உடலில் ஒளிந்திருப்பது தெரியும் . மருத்துவர் சேவையில் இருக்கும்போது உறவுகள் நினவு வருவது சேவை செய்வது சிறப்பாக அமைய முடியாது.

 • சேவை மனம் கொண்டோர் உறவை விட தனது பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்

  சேவை செய்பதற்கென்றே பிறந்தோர் மகளிர்களுக்கு காலம் முழுதும் மரியாதை கொடுப்பதும் அன்பு பாராட்டுவதும் அவசியம். அது மகளிர் தினம் என்று குறிப்பிட்ட நாளோடு முடிந்து விடாது .masha_Allah

  தெளிவான வழிகாட்டி நூல்கள் பல இருந்தும், உலகின் பல பகுதிகளில் உள்ள ஒரு கணிசமான பகுதி இன்னும் பெண்கள்,சரியான முறையில் வளர்க்கப் படாமல் உள்ளார்கள். ஆனால் பெண்களின் திருமணத்திற்கு மட்டும் வீண் செலவு செய்கின்றார்கள்.பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னிலை வராது.

  “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
  “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
  அறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்”
  “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
  பேணி வளர்த்திடும் ஈசன்;
  மண்ணுக்குள் ளேசிலமூடர் – நல்ல
  மாதர றிவைக் கெடுத்தார்.
  கண்க ளிரண்டினி லொன்றைக் – குத்திக்
  காட்சி கெடுத்திடலாமோ?
  பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
  பேதமை யற்றிடுங் காணீர்”.
  பாரதியாரின் பாடிய மறக்க முடியாத வரிகள்
  ” நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது” காந்தி கூறினார்:

  தாய் இன்றேல் நாமில்லை

  காமுகனுக்கும், குடித்து போதை மிகுந்து நிற்பவனுக்கு உடல் தெரியும் ஆனால் அந்த உடலின் மகிமையும் தெரியாது அதன் உறவும் தெரியாது.அவனையும் பெற்றது ஒரு தாய்தான்.அவனை தாயன்போடு திருத்த வேண்டியது அவசியமாகின்றது.அவனுக்காகத்தான் இந்த மகளிர் தினம்

  ஏந்தலை சுமந்து ஈன்றடுத்த இதயத் தாயே !
  தாயே! இஸ்லாத்தை சொல்லி தாலாட்டு…
  தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ!

  Advertisements
   
 • Tags: ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: