RSS

வென்றிடுவோம் புத்துலகை!

11 Mar

வென்றிடுவோம் புத்துலகை!
(கலிவெண்பா (அ) பஃறொடை வெண்பா
=======================================

தேனமுதத் தெள்ளுதமிழ்த் தீஞ்சுவையைத் தோய்த்திங்கே
வானளக்கும் வார்த்தைகளால் வாய்ப்பந்தற் றோரணமாய்க்
கானலெனும் காட்சிகளைக் காஞ்சனமாய்க் கவிதையெனத்
தானளந்து சொல்லடுக்கும் சந்தமிழை பாவலரே!

  • விண்ணளக்கக் காதலதன் மேன்மையினைப் பாடுகையில்;
    பெண்மகவை வேரறுக்கும் பேதமையும் சாடுங்கள்!
    பண்ணழகை, பாவலரை, பாவையரைப் பாடுகையில்
    மண்ணுலகின் போதையெனும் வாதையதும் சாடுங்கள்!

    அன்றலர்ந்த ஆம்பலினை ஆசையுடன் பாடுகையில்;
    வன்முறையே வாழ்வென்போர் வஞ்சகமும் சாடுங்கள்!
    தென்றலிழை பூங்காவைச் செந்தமிழிற் பாடுகையில்;
    பெண்மையினைச் சீய்க்கின்ற புல்லரையும் சாடுங்கள்!

    நந்தமிழின் மண்ணழகும் நாமணக்கும் பண்ணழகும்
    சிந்தனையைக் கீறுகின்ற சீரியதோர் சொல்லழகும்
    புந்தியிலே வைத்திங்கு போர்க்களத்தில் வென்றிடுவோம்
    செந்தழலின் பாட்டெடுத்தே சென்று!

    இராஜ. தியாகராஜன்
    15439_105074882841796_6802279_n
    About தியாகராஜன்
    பாவலன் என்றெண்ணிக் கொண்டு மரபுப்பாக்களை எழுதும் ஒரு மொழிப் பயிற்சியாளன். புதுச்சேரி அரசில் பணிபுரிகிறேன். இப்புவியில் இருக்கின்ற நல்லிதயங்களின் நட்பாயினும் சரி நேரடியான உறவுகளாயினும் சரி என்றுமே நம் தாய்மொழியே முதல் என்பதை உணர்ந்து செயல்படுகிறேன். நம்முடன் இருக்கும் ஒரு சில உறவுகளையே தாய் மொழியின் உயர்வை என்னால் உணரச் செய்ய இயலாத போது ஊருக்கு உபதேசம் செய்வது போலிருக்கிறது என் நிலை!! இருப்பினும் என்கடன் பணி செய்து கிடப்பதே!

    Advertisements
     
  • Tags: ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: