RSS

தெரிந்து கொள்வோம் வாங்க

14 Mar

شسي*பெங்குவின் நின்ற நிலையிலிருந்தே முட்டையிடும். உப்பு நீரிலிருந்து நல்ல நீரைப் பிரிக்கும் அமைப்பு பெங்குவினின் மூக்கில் அமைந்திருக்கிறது. பெங்குவின் பறவை இனத்தைச் சேர்ந்தது. மேலும் அதனால் பறக்க முடியாது. ஆனால் நன்றாக நீந்தும்.
*கண்கள் காதுகளை போல பத்து மடங்கு உணர்வும், மூக்கைப் போல் முப்பது மடங்கு உணர்வும் கொண்டவை. பார்க்கும் பொருளின் ஒளியில் நூறில் ஒரு பங்கு கூடினாலும், குறைந்தாலும் அந்த வேறுபாட்டை கண்கள் உணர்ந்து விடும்.

*தென் அமெரிக்க பாலை வனங்களில் காணப்படும் ஒரு செடியில் நீளமான கிளை மட்டுமே இருக்கும். கிளையின் உச்சியில் பூக்கள் பூக்கும். இந்த நீளமான தண்டு எப்போதும் வடக்கு திசை பக்கமே சாய்ந்து நிற்கும்.இதனைப் பார்த்துதான் பாலை வனப் பயணிகள் திசையை அறிந்து பயணத்தை தொடர்கிறார்கள்.

 • *பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி. ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்து கோடி பாக்டீரியாக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.

  *இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும்.

  *ரீங்காரப்பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை அதன் எடை சுமார் 0.24 கிராம்.

  * *சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல் மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர். அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் அவர்கள் தங்கள் முதலை இழக்க நேரிடும். இதனால், சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் வங்கிகளையே பெரும் பகுதி சாரும்.

  * இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம் என்று பொருள். இமயமலையின் மொத்த பரப்பளவு 5,00,000 சதுர கி.மீட்டர்.

  * ஹோலி பண்டிகையின் இன்னொரு பெயர் வண்ணங்களின் பண்டிகை. இந்த வண்ணப் பொடி தேசு என்ற மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.

  * 25.1.1944-ம் தேதி மாஸ்கோவுக்குத் தூது என்ற ஆங்கில சினிமாப் படம் காந்தி அடிகளுக்கு விசேஷமாகத் திரையிடப்பட்டது. பாபுஜி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே திரைப்படம் இது தான்.

  * காந்திஜி இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சையில் தேறிய பிறகு 10.6.1891-ம் தேதி பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்க்கப்பட்டார். லண்டன் உயர்நீதிமன்றத்தில் 11.6.1891-ம் தேதி தன்னை பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டு 12.6.1891-ம் தேதி இந்தியாவுக்கு கப்பலில் புறப்பட்டார்.

  * விண்வெளி ஆய்வைத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை வானில் பறக்கவிடப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 4,700-க்கும் மேல் ஆகும்.

  * ஜெர்மன் சர்வாதிகாரி இட்லரை சந்தித்த ஒரே தமிழர் மறைந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு தான்.

  எலிக்காது வவ்வால்கள் அதிகம் காணப்படுவது ஐரோப்பா கண்டத்தில். குட்டிகள் பிறந்து சில நாட்கள் வரை தாய் இரை தேடச் செல்லும்போது குட்டியை சுமந்து செல்கின்றன. குட்டி வளர்ச்சியடைந்ததும் தாய், தனது இருப்பிடத்திலேயே தலை கீழாக தொங்கவிட்டுச் சென்றுவிடும். அதன் பிறகு குட்டிதான் இரைக்காக தனியே பறக்கவேண்டும்.

  *********************

  *வரிக்குதிரையானது தனது பலம் வாய்ந்த பின்னங்கால்களினால் தன்னைத் தாக்க வரும் சிங்கத்தை உதைத்து தள்ளிவிடும். ஆப்பிரிக்க மானும் காட்டு எருமையும் கூட தங்களது கூரிய கொம்புகளால் சிங்கத்தை தாக்கும். ஒட்டகச் சிவிங்கியும் சிங்கத்தை தனது பின்னங்கால்களால் உதைத்து தாக்கும்.

  *********************

  *ஆண் சிறுத்தைக்கும் பெண் சிங்கத்திற்கும் பிறக்கும் குட்டிக்குப் பெயர் `லியோன்பான்’. ஆண் சிங்கத்திற்கும் பெண் சிறுத்தைக்கும் பிறக்கும் குட்டிக்கு `லிபார்ட்’ என்று பெயர். ஒரு பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறப்பது கோவேறுக் கழுதை.

  ********************

  நன்றி: யாழ் இணையம்

  Engr.Sulthan

  Advertisements
   
 • Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: