RSS

உதவியும் உபகாரமும்

25 Apr

p13_24522033 உதவியும் உபகாரமும் தனது பெற்றோர், மனைவி, உடன் பிறந்தார் ,சுற்றத்தார் என  சுருங்கிவிடாமல் அனைத்து மக்களுடன் மட்டுமல்லாது இறைவனது படைப்பினங்கள் அனைத்திலும்   உதவியும் உபகாரமும்  விரிவாக்கப் படவேண்டும்.   உதவியும் உபகாரமும் நல்லுறவும் எங்கும் இருந்தால் வாழ்வு மகிழ்வடையும் .உதவியும் உபகாரமும்
பிரதியுபகாரம் அல்லது நன்றியை எதிர்நோக்கி செயல்பட்டதாக இருக்கக் கூடாது.

“நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
‘என்று தருங்கொல்?’ எனவேண்டாம் “- ஔவை.
எதிர்பார்த்தது கிடைக்காமல் போக அத்தகைய எண்ணம் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தரக் கூடியதாக அமைந்து விடும். செய்யும்  நற்காரியங்கள் அனைத்தும் இறைவன் அருள் நாடியும் நம் மன திருப்திக்காகவும் இருக்க வேண்டும் .அதனை இறைவன் விரும்புகிறான் அதனால் அது நம் கடமையும் உள்ளடக்கியதாக உள்ளது என்ற நோக்கம் இருக்க வேண்டும்.
.
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று. நீர் கூறும்; “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”  (சுரத்  அல் -பகராஹ்  (பசு )2:215-அல்-குர்ஆன்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”இரத்த பந்துத்துவத்தை துண்டிப்பவன் சுவனம் புகமாட்டான்.” (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) அது மட்டுமல்ல. அத்தீயவன் இருக்கும் சபைகளுக்குக் கூட அல்லாஹ்வின் அருள் கிட்டாது.

பந்துக்களுக்கும், எழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்துவரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம். (அல்குர்அன் 17:26)

 

Tags: , , ,

One response to “உதவியும் உபகாரமும்

  1. திண்டுக்கல் தனபாலன்

    April 25, 2013 at 7:38 am

    அருமையான கருத்துக்கள்…

    தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்…

    (மிஞ்சி = தேவையானது போக)

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: