RSS

MRG:இங்கே இருவருக்கும் வெற்றி!

12 May

by: mansoor

Asset-300x99நீங்கள் ஒரு வரிசையில் (queue) நிற்கிறீர்கள். மெதுவாக நகர்கிறது அந்த வரிசை. இப்போது உங்கள் முறை. திடீரென்று ஒருவர் உங்களுக்கு முன்னால் குறுக்கே புகுந்து விடுகிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒன்று – நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மென்மையானவர்(?). குறுக்கே புகுந்தவர் தன் காரியத்தை கன கச்சிதமாக முடித்துக் கொண்டு போய் விடுகிறார். இதற்குப் பெயர் மென்மை அல்ல! இது கையாலாகாத் தனம். Passiveness.

அல்லது – நீங்கள், “ஏய், முட்டாள்! என்னாச்சு உனக்கு? நாங்கள்ளாம் வரிசையிலே நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா?” என்று கேட்கிறீர்கள். இதுவும் தவறு. அது முரட்டுத் தனம். Aggressiveness.

அப்படியானால் எப்படி நடந்து கொள்வது சிறப்பு என்கிறீர்களா?

நீங்கள் குறுக்கே புகுந்தவரிடம் அவருடைய முகத்தை நோக்கி உறுதியான ஒரு பார்வையுடன், “மன்னிக்கவும்! இப்போது எனது முறை!” என்று கூறுகிறீர்கள். அவ்வளவு தான். அவர் நகர்ந்து விடுகிறார். வார்த்தைகளில் கடுகடுப்பு தேவை இல்லை. குரல் உயர்த்திடத் தேவையில்லை. கொஞ்சம் Seriousness. அவ்வளவு தான். இந்த அணுகு முறையைத் தான் assertive communication என்கிறார்கள். அதாவது தன் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டு பேசிடும் முறை.

கணவன், மனைவி, மூன்று குழந்தைகளைக் கொண்டதொரு குடும்பம் அது. கணவன் மது அருந்துகிறான். மனைவியைப் போட்டு அடிக்கிறான். குழந்தைகளைக் கன்னா பின்னாவென்று திட்டுகிறான். இது ஒரு தொடர்கதை.

மனைவி என்ன செய்வாள்? இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது அவள் எங்கேயும் படித்துக் கொள்ளவில்லையே! ஏதோ அவளுக்குத் தெரிந்தவரையில் கணவனைத் திருத்த முயற்சி செய்கிறாள். கணவன் திருந்திடத் தயாராக இல்லை. மனைவி தன் குழந்தைகளுடன் தற்கொலையை நாடுகிறாள். இதுவே இங்கே அன்றாட நடப்பாகி விட்டது.

சில மனைவிமார்கள், கணவன் எப்படியும் போகட்டும் என்று விதியின் மீது பழியைப் போட்டு விட்டு கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்கிறாள். இது தான் நாம் முன்பு குறிப்பிட்ட கையாலாகாத் தனம். இங்கே கணவனுக்கு வெற்றி(?). மனைவிக்குத் தோல்வி! (I lose – You win).

ஆனால் இதே போன்ற சூழ்நிலையில் வேறொரு மனைவி எப்படி நடக்கிறாள் பாருங்கள். பொறுமையாகப் பல தடவை சொல்லிப் பார்த்தும் கணவன் திருந்துவதாகக் காணோம்.

ஒரு நாள் கணவன் நிதானமாக இருக்கும் சமயமொன்றைத் தேர்வு செய்து அவன் அருகில் வந்து, “இங்கே பாருங்கள், நான் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு எப்படிப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் அதற்காக நீங்கள் குடித்து விட்டு வந்து, அந்த போதையில் என்னிடமும், குழந்தைகளிடமும் நடந்து கொள்ளும் முறையை இனியும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு நாம் என்ன எதிர்காலத்தைக் கொடுக்கப் போகிறோம்? எப்படிப்பட்ட குழந்தைகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? அவர்கள் பெரியவர்கள் ஆனால் அவர்களும் உங்களைப் போன்று ஆகி விடுவதை நான் அனுமதிக்க முடியாது. நீங்கள் குடிப்பதை நிறுத்தவில்லையென்றால், என்னையும் குழந்தைகளையும் திட்டுவதையும் அடிப்பதையும் நிறுத்தவில்லை என்றால் – அடுத்து நான் காவல் துறையைத் தான் அணுகிட வேண்டியிருக்கும் என்றால் அதற்கும் கூட நான் தயங்கிட மாட்டேன்”.

உறுதியாகச் சொல்லி விடுகிறாள் மனைவி. குரலை உயர்த்தி கத்திப் பேசி ஊரைக் கூட்டிடவில்லை! திட்டவில்லை; கணவனை மிரட்டிடவில்லை. கணவன் மீது தான் வைத்திருக்கும் அன்பையும் வெளிப் படுத்தத் தவறிடவில்லை. இங்கே கணவன் திகைத்துப் போய் விடுகிறான். ஒரு கணம் சிந்திக்கின்றான். மனைவியை உற்றுப் பார்க்கிறான். அவள் முகத்தில் கோபம் தெரியவில்லை. ஆனால் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள் என்பது புரிகிறது. கணவனை அதே நிலையில் விட்டு விட்டு நகர்கிறாள் மனைவி.

அன்று திருந்தியவன் தான் அவன்! அல்ஹம்து லில்லாஹ்! இங்கே இருவரும் வெற்றி பெற்று விடுகிறார்கள் (I win – You also win).

தன் நிலையில் உறுதியுடன் பேச வேண்டிய சமயத்தில் பேச வேண்டிய முறையில் பேசுபவர்கள் – தன்னம்பிக்கை உடையவர்களாகத் திகழ்கிறார்கள். தன் உரிமைகளை யாருக்கும் அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. மற்றவர்களால் மதிக்கப் படுகின்றார்கள். வாழ்வில் வெற்றியும் பெறுகின்றார்கள்.

இந்த assertiveness பயிற்சி குழந்தைப் பருவத்திலேயே கொடுக்கப் படுதல் சாலச் சிறந்தது.

உங்கள் பெண் குழந்தை. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். மதிய உணவு தயாரித்துக் கொடுத்து அனுப்புகிறீர்கள். ஆனால் மாலையில் வீட்டுக்கு வரும் உங்கள் மகள், “நான் சாப்பிடத் துவங்கும் போது, மற்ற மாணவர்கள் ஓடி வந்து என் உணவை எடுத்துச் சாப்பிட்டு விடுகிறார்கள்; எனக்கு ஒன்றையுமே அவர்கள் விட்டு வைப்பதில்லை அம்மா!” என்கிறாள். இதுவும் ஒரு தொடர்கதை! பெற்றோர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள்?

அன்பு மாணவியரே! நீங்கள் கல்லூரி ஒன்றில் படிக்கிறீர்கள். சக மாணவன் ஒருவன் உங்களைச் சீண்டுகின்றான். அவனிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?

இந்தத் திறமை கைவரப் பெற தொடர் பயிற்சியும் முயற்சியும் தேவை. ஆனால் முயற்சித்துப் பார்த்து விட்டு இடையில் விட்டு விடுபவர்களே நம்மில் அதிகம்! ஆனால் எந்த அளவுக்கு முயற்சிக்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றியும் நிச்சயம்!

by : SA மன்சூர் அலி M.A., B.Ed.,

Source http://www.thegardenacademy.in/?p=2634
manoreநீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர். மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)Please visit :http://www.thegardenacademy.in/ எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் (Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.

 

நீடூர். S.A.மன்சூர் அலியுடன் நேர்காணல்.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா Jazakkallahu Hairan

 

Tags: , , , ,

2 responses to “MRG:இங்கே இருவருக்கும் வெற்றி!

  1. திண்டுக்கல் தனபாலன்

    May 12, 2013 at 5:17 am

    இது போல் அன்பாக, நியாயமாக, உறுதியாக துணைவி இருந்தால்… இருக்க வேண்டும்…

    சிந்திக்க வேண்டிய பல அருமையான கேள்விகள்…

    தொடர வாழ்த்துக்கள்…

     
  2. S.E.A.Mohamed Ali. "nidurali"

    May 12, 2013 at 5:40 am

    @ திண்டுக்கல் தனபாலன் தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி
    நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் எனது அண்ணன் நீடூர் வக்கீல் சயீத் மருமகன்

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: