RSS

அடிப்படையான job ethics

13 May

நான் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் நிறுவனம் எனக்கு எட்டாவது நிறுவனம். முந்தைய ஏழு நிறுவனங்களிலும் கூட இனிப்பும், கசப்பும் கலந்த நிறைய அனுபவங்கள். அவற்றில் மூன்று நிறுவனங்களில் சம்பளப் பாக்கி கூட உண்டு. கடைசியாக வெளிவந்த நிறுவனம் எனக்கு அறுபதாயிரம் தரவேண்டும். சில நிறுவனங்களின் நிர்வாகம் எனக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. சில ஊழியர்களோடு கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. ஏழு நிறுவனங்களில் இருந்தும் விலகியபோது ஏழுவிதமான காரணங்கள் இருந்திருக்கிறது. இரண்டே நிறுவனங்களில்தான் அவர்களிடமிருந்து விடைகொடுத்து மகிழ்ச்சியாக வெளியேற முடிந்தது.

ஏன் சொல்கிறேன் என்றால் இந்த நிறுவனங்களைப் பற்றியோ, இங்கு பணியாற்றிய சகப்பணியாளர்களைப் பற்றியோ எங்குமே பொதுவெளியில் தவறான முறையில் எதையும் பேசமாட்டேன். வேண்டுமானால் இனிமையான விஷயங்களை பெருமையாக பகிர்ந்துக் கொள்வதுண்டு. இந்த தன்மையை அடிப்படையான job ethics என்றும் நம்புகிறேன்.

ஒரு நிறுவனத்தில் நமக்கு வேலை போய்விட்டால், அடுத்த நிறுவனம் நம் திறமையை மதித்து அழைத்து வேலை கொடுக்க வேண்டும். அப்படியில்லாமல் ஜால்ரா அடித்தோ, பழைய நிறுவனத்தை இகழ்வதின் மூலம் புதிய நிறுவனத்தை அசத்தியோ வேலைக்கு சேருவோமேயானால் அந்த வேலைக்கு பெயரே வேறு. எவ்வகையிலும் நம்பகத்தன்மையே இல்லாத ஒரு மனிதரை யாரும் மனமுவந்து மதிப்பதில்லை.

காசு எப்போ வேணும்னாலும், எவ்வளவு வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் பாஸ். நாம மண்டையைப் போட்டப்பிறகு ‘நல்ல மனுஷன் போய் சேர்ந்துட்டானே’ என்கிற ஃபீலிங்கை நாலு பேரிடமாவது ஏற்படுத்தறதுதான் லைஃப்லேயே டஃப் டாஸ்க்கு

yuvakrishna by Yuva Krishna

 
Leave a comment

Posted by on May 13, 2013 in 1

 

Tags: , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: