RSS

என்னடா காதல் இது ?

15 May

என்னடா காதல் இது ?
——————————-

என்ன இது காதல் ?

மகரந்தச் சேர்க்கைக்காய்
மலர்கள் மீது
வந்தமரும்
வண்ணத்துப் பூச்சிகளாய்,

ஹார்மோன்களின்
காட்டுக் கத்தலில்,
பூவுக்குள்
பூட்டிக் கொள்ளும் மோகத்தில்,
இருட்டுக் கதவுகளை
நோக்கிய
குருட்டு ஓட்டம் தானே இது !

மறுப்பீர்களா ?

சீண்டல்களை
சிரச்சேதம் செய்துவிட்ட
ஒரு காதல் ஜோடியைக்
கைகாட்ட இயலுமா
உங்களால் ?

முத்தங்களைப் பற்றிய
கவிதை கிறுக்காத,
கன்னங்களில்
கள் குடிக்காத,
விரல்களில்
விண்மீன் பொறுக்காத
கவிதைக் காதலர்களை
கடலலைகள் கண்டிருக்குமா ?

ரயில்வே நிலையத்தில்
சந்துகளில்,
கன்னிமேராக்களின்
கடைசி புத்தக வரிசைகளில்,
திரையரங்குகளின்
பழுதடைந்த
விளக்கு மூலைகளில்
இங்கெல்லாம்
நடக்கும் முனகல் சாகுபடிக்கு
காதலென பெயரிட முடியுமா ?

மெய்மீது கொண்ட
மெய்யான தாபத்தை
காதல் தாகமென்று
இதமாய்ச் சொல்லிப்
பழகிவிட்டோம்.

பூவும் வண்டும்
என
கவிதைகள் பேசும் !
எந்த வண்டு தான்
பூவுடன் குடும்பம் நடத்துகிறது ?

கலவியை நோக்கிய
சிந்தனைகளை
காதல் என்னும் குட்டிச் சாத்தான்
தன்
சுருக்குப் பைக்குள்
சொருகி நடக்கிறது.

கவனம் தேவை.

பிரியப்பட்டே
பதறி எழுவீர்கள்.

விருப்பப் பட்டே
இடறி விழுவீர்கள்.

அதெல்லாம் உங்கள்
விருப்பம்.

கடைசியில்
புலம்பல் எழுதி
தமிழை அழுக்காக்காதீர்
என்பது
என் விண்ணப்பம்.


by சேவியர்
578558_521293627901662_45723309_n

 

Joseph Xavier Dasaian

சேவியர்

 

Tags: , , ,

2 responses to “என்னடா காதல் இது ?

  1. திண்டுக்கல் தனபாலன்

    May 15, 2013 at 3:50 pm

    /// கலவியை நோக்கிய
    சிந்தனைகளை
    காதல் என்னும் குட்டிச் சாத்தான்
    தன்
    சுருக்குப் பைக்குள்
    சொருகி நடக்கிறது. ///

    கல்வியையும் தான்…

     
  2. ratnibbles

    May 15, 2013 at 4:54 pm

    very nice read🙂

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: