RSS

எனக்கு மட்டும் அஞ்சாறு வருஷம் முன்னாடி ஃபேஸ்புக் ஐடி இருந்திருந்தா..

20 Jun

ராஜா ஒரு வேலையில்லாத பட்டதாரி. அம்பத்தூரில் இருந்த ஒரு கால்சென்டருக்கு நம்பிக்கையோடு இண்டர்வியூக்கு சென்றான். இவனை நேர்முகம் செய்தவருக்கு ராஜா மீது முழு திருப்தி.

“உன்னை கால்சென்டர் எக்ஸிக்யூட்டிவ்வாக வேலையில் சேர்த்துக் கொள்கிறேன். ஃபேஸ்புக் ஐடி சொல்ல முடியுமா. நீ யார் எப்படிப்பட்டவன் என்று ரெஃபர் செய்ய வசதியாக இருக்கும்” என்றார்.

“என்னிடம் கம்ப்யூட்டர் இல்லை. இண்டர்நெட்டும் பயன்படுத்துவதில்லை. எனவே எனக்கு ஃபேஸ்புக் என்றாலே என்னவென்று தெரியாது” என்று பதிலளித்தான் ராஜா.

“ம்ஹூம். சமூகத்தோடு எந்த தொடர்புமில்லாத உனக்கு கால்சென்டரில் எப்படி வேலை கொடுக்க முடியும்? இந்த ஒரு காரணத்துக்காகவே உனக்கு வேலை இல்லை” என்றார் இண்டர்வியூ செய்த எச்.ஆர்.மேனேஜர்.

 • மனம் வெறுத்துப்போய் திரும்பினான் ராஜா. அவனுடைய பாக்கெட்டில் முன்னூறு ரூபாய் மட்டுமே இருந்தது. மனம் போன போக்கில் கோயம்பேடு பக்கமாக சுற்றிக் கொண்டிருந்தான். மார்க்கெட் பக்கம் போனபோது தக்காளி மூட்டை மூட்டையாக இறங்கிக் கொண்டிருந்தது. முன்னூறு ரூபாய்க்கு தக்காளி வாங்கினான். அருகிலிருந்த பெரிய அப்பார்ட்மெண்ட் ஒன்றுக்குள் நுழைந்தான். ஒவ்வொரு கதவாக தட்டினான்.

  “சீஃப் ரேட்டுலே தக்காளி வேணுமா ஆண்ட்டி. தோட்டத்துலே இருந்து இப்போதான் பறிச்சிக்கிட்டு வர்றேன்” – பேண்ட், சட்டை போட்டு இன் செய்து மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் மாதிரி ஒரு காய்கறிக்காரனை அவர்கள் முன்பு பார்த்ததே இல்லை. அவனது தோற்றத்துக்காகவே அவனிடம் தக்காளி வாங்கினார்கள். மூன்று மணி நேரம் கழித்து அப்பார்ட்மெண்டில் இருந்து வெளியே வரும்போது ராஜாவின் பாக்கெட்டில் அறுநூறு ரூபாய்க்கும் மேலே இருந்தது. சம்பாதிக்கும் வழி எதுவென்று ராஜாவுக்கு தெரிந்துவிட்டது. தன்னுடைய வேலை இதுதானென்று அடையாளம் கண்டுகொண்டான்.

  அடுத்த சில ஆண்டுகளில் ராஜா சென்னையின் முக்கியப்புள்ளி. பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ப்ரெஷ்ஷான காய்கறிகளை விற்கக்கூடிய சூப்பர் மார்க்கெட் செயினின் முதலாளி. பிசினஸ் விஷயமான மீட்டிங்குக்காக ஒரு முறை ஹைதராபாத் போயிருந்தான். அங்கே இவனை சந்தித்தவர் மொபைலை நோண்டிக்கொண்டே கேட்டார். “உங்க ஃபேஸ்புக் ஐடி சொல்லுங்களேன். பிரெண்டா ’ஆட்’ பண்ணிக்கறேன்”

  ”எனக்கு ஃபேஸ்புக் ஐடியெல்லாம் இல்லீங்க. ஆக்சுவலா ஈமெயில் கூட கிடையாது. கம்ப்யூட்டரை யூஸ் பண்ணவும் பெருசா தெரியாது”

  “ஒரு ஈமெயில் ஐடி கூட இல்லாம இவ்வளவு பெரிய பிசினஸ் மேக்னட்டா ஆயிருக்கீங்களே? நீங்க மட்டும் ஈமெயில் எல்லாம் யூஸ் பண்ணி இருந்தீங்கன்னா பில்கேட்ஸை எல்லாம் மிஞ்சிட்டிருப்பீங்க” பாராட்டும் தொனியில் அவர் சொன்னார்.

  “நீங்க வேற. எனக்கு மட்டும் அஞ்சாறு வருஷம் முன்னாடி ஃபேஸ்புக் ஐடி இருந்திருந்தா, நான் இன்னேரம் ஒரு கால்சென்டர் எக்ஸிக்யூட்டிவாதாங்க இருந்திருப்பேன்”

  கதையின் நீதி : நீச்சல்குளத்தில்தான் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை

  yuvakrishnaதகவல் தந்தவர்

  ஆளப்பிறந்தவர் -ஆத்திரப்பட மாட்டார் !

  Yuva Krishna யுவகிருஷ்ணாவைப் பற்றி அறிய கீழ் உள்ள லிங்கை சொடுக்குங்கள்
 • http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE

 

Advertisements
 
Leave a comment

Posted by on June 20, 2013 in 1

 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: