RSS

தம்பதியர்களே ! ப்ளீஸ் தூங்கிடாதீங்க !?

23 Jun

masha_Allahமாநிடவியலில் எத்தனை உறவுகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமானவை. தத்தா பாட்டி, அப்பா அம்மா, அண்ணன் தம்பி, அக்கா தக்கை, மாமா அத்தை, மச்சான் மச்சி,  பெரியப்பா சித்தப்பா, பெரியம்மா சின்னம்மா, இன்னும் அநேக உறவு வட்டங்கள் நம் மத்தியில் வட்டமடித்துக் கொண்டு இருந்தாலும் அதையும் தாண்டி உள்ள ஒரு உறவுதான் கணவன் மனைவி உறவு.

நம் தமிழ் நாட்டை பொறுத்தவரை கணவன்மார்கள் பொருள் ஈட்டுவதற்காக குடும்பத்தை பிரிந்து வெளி ஊர்களிலும், வெளி நாடுகளிலும் வசித்து வருகின்றனர். உள்நாடுகளில் இருப்பவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தை பார்த்துவிட்டு போவது வழக்கம், வெளிநாட்டில் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ, இரு வருடத்திற்கு ஒரு முறையோ, மூன்று வருடத்திற்கு ஒரு முறையோ குடும்பத்தை வந்து பார்த்து விட்டு மீண்டும் திரும்பிச் செல்வது வழக்கம் இன்னும் சிலர் குடும்பத்தோடு அங்கு இருப்பதும் உண்டு,  இன்னும் சிலர் இதையும் கடந்து ஊருக்கே வராமல் உடம்பில் இருக்கின்ற பலம் குன்றும் அளவுக்கு சம்பாத்தித்து, தலை முடியெல்லாம் வெழுத்து, பற்களெல்லாம் பழுதாகி, முகத்தோற்றம் உருமாறி, அடையாளம் சிதைந்து குழைந்து ஊர் வருவதும் உண்டு, இன்னும் சிலர் ஊர் வராமலேயே அப்படியே போய்விடுவதும் உண்டு, இதையும் கடந்து வேறு தகாத உறவுகளோடு திருட்டுத்தனமாக வாழ்வதும் உண்டு, இப்படி பல சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றது.

இவைகளுக்கு மத்தியில் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் குடும்பத் தலைவியாகிய மனைவிகளே கவனித்து கொள்ள வேண்டும்.
அன்று கணவன், குடும்ப நலம் மற்றும் சூழ்நிலைகளை அறிய மனைவிக்கு கடிதம் எழுதுவார், கடிதம் மனைவியின் கைக்கு கிடைக்க தொலை தூரத்திற்கு ஏற்ப கடிதம் இரண்டு நாட்கள் முதல் பதினைந்து நாட்கள் ஆகிவிடும்.

மனைவின் பதில் கடிதமும் கணவனுக்கு மேலே சொல்லப்பட்ட நாட்களில் சென்று விடும், வீட்டில் வேலையாக இருந்தாலும் கணவனின் கடிதம் வரும் நாள் நெருங்க நெருங்க கடிதத்திற்காக காலை பத்து மணி முதல் தபால் காரரின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்த மனைவிகளும் உண்டு, தபால் காரர் வீட்டு வாசலில் கிர்ர்ர்ரிங்-டிர்ர்ர்ன்-கிர்ர்ர்ரிங்-டிர்ர்ர்ன் என்று சைக்கிள் மணியை அடித்து விட்டு கதவின் இடைவெளியில் கடிதத்தை போட்டுவிட்டு சென்று விடுவார், ஓடோடிப்போய் அந்த கடிதத்தை எடுத்து அவரசர அவசரமாக பிரித்து படிப்பார்கள், ஒரு முறை அல்ல மீண்டும் மீண்டும் அந்த கடிதத்தை பிரித்து படித்து படித்து பதில் எழுதுவதுவார்கள், தபால் காரர் சைக்கிள் மணி அடிக்காமல் சென்று விட்டால் அன்றைய தினம் பைத்தியம் பிடித்தார் போல் இருப்பார்கள். அன்று கணவனும் மனைவியும் தங்கள் எண்ணங்களை இப்படித்தான் எழுத்து வடிவில் பரிமாறிக் கொண்டனர். அந்த நாட்களில் மட்டுமல்ல இன்றுகூட நாம் கடிதங்களையும், தபால் பெட்டியையும் மறக்க முடியாது.

இடைப்பட்ட காலத்தில் தொலை தொடர்பு துறையில் எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி., போன்ற வசதிகள் லேன்ட் லைனில் வரவே கடிதத் தொடர்பு என்பது நின்று போய், நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலை வந்து விட்டது. இப்படியாகப்பட்ட காலத்தில் கணவனிடம் இருந்து எந்த நேரத்திலும் தொலைபேசி அழைப்பு வரும் என்று இருந்த மனைவிகளுக்கு வெளியில் வேலைகள் ஏதும் இருந்தால் வேலைகளை முடித்துவிட்டு விறு விறுவென்று வீடு வந்த மனைவிகளும் உண்டு, இப்படித்தான் இடைப்பட்ட காலத்தில் கணவனும் மனைவியும் தங்கள் எண்ணங்களை குரல் வடிவில் பரிமாறிக் கொண்டனர். இவ்வளவு நவீன வளர்ச்சியிலும் பழைய மாடல்களில் உள்ள தொலைபேசி கருவிகளை உபயோகிப்போர்கள் இன்றும் உண்டு, அதையும் மக்கள் மறந்து விட வில்லை.

இன்று நவீனங்களின் அபார வளர்ச்சியினால், மொபைல் போன், இணையம், மேசை கணினி என்று அழைக்கப்படும் டெஸ்க் டாப், மடிகணினி என்று அழைக்கப்படும் லேப்டாப், கையடக்க கணினி என்று அழைக்கப்படும் டேப்லெட், ஐபோன், கேமரா போன், இன்டர்நெட் வசதி உள்ள போன், வெப் கேமரா, ஸ்கைப்பே, கோகுல் டாக், கேபிள் உள்ள இன்டர்நெட், கேபிள் இல்லாத ஒயர்லெஸ் இன்டர்நெட், இன்னும் அனேக புதுப் புது வசதிகள் நம் அனைவரையும் தினம் தினம் மாறி மாறி சுற்றி வந்து நம் எல்லோரையும் ஆட்கொண்டுவிட்டாலும், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இருந்து கொண்டு தொடர்பு கொண்டு குரலோடு முகத்தோடு முகம்பார்த்து உடல் அனைத்தையும் பார்த்துக்கொண்டு எண்ணங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகி விட்டது.

கணவனிடம் இருந்து எந்த நேரத்திலும் அழைப்பு வரும் என்ற நிலையில் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அப்படியொரு அழைப்பு வந்தால் தான் செய்து கொண்டிருந்த வேலைகளை அப்படியே போட்டு விட்டு  அழைப்பில் போய் உட்கார்ந்து விடுகின்றனர். வீட்டில் உள்ள மற்றவர்கள் டிவி சீரியல்களில் படு உற்சாகமாக அதிலே மனதை பறிகொடுத்து வாயை ஆஆவென்று பிளந்து கொண்டு தன்னை மறந்து விடுகின்றனர். இதினாலே பல நேரங்களில் நடக்கும் சம்பவங்களை பாருங்கள்.

அடுப்பில் ஏதாவது கொதித்துக் கொண்டு இருக்கும் அது பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து எரிவாயு சமையல் அறை முழுவதும் பரவக்கூடிய சந்தர்ப்பம் உண்டு, மின் அடுப்பாக இருந்தால் மின்சாரம் கசிந்து பாத்திரம் முழுதும் மின்சாரம் பாய்ந்து இருக்க சந்தர்ப்பம் உண்டு, கிரைண்டரில் ஏதாவது தானியங்களை அரைத்துக் கொண்டு இருந்தால் அதுவும் வழிந்து வீணாகக் கூடிய சந்தர்ப்பம் உண்டு, தண்ணீர் ஏற்றுவதற்காக மின் மோட்டார் இயங்கிக் கொண்டிருந்தால் அதுவும் வழிந்து நீரும் மின்சாரமும் விரயமாக சந்தர்ப்பம் உண்டு, இன்னும் ஏகப்பட்ட சம்பவங்கள் அசம்பாவிதமாக நடக்க சந்தர்ப்பம் உண்டு. இதற்கெல்லாம் காரணம் குடும்பத்தார்களின் அலட்ச்சியப் போக்கு. இது மாதிரி அலட்ச்சியப் போக்கினால் நடக்கும் சம்பவங்களை பல ஊடகங்களின் மூலமாக நாம் அறிகின்றோம்.

மனைவிக்கு அழைப்பு கொடுக்கும் கணவன், மறு முனையில் மாணவியின் குரல் ஹலோ என்று கேட்டதும் கொஞ்சுவதற்கு முன், எரிவாயு அடுப்பு, மின் அடுப்பு, கேஸ் சிலிண்டர், மின் மோட்டார், கிரைண்டர், வீட்டின் கதவு, மின் விளக்குகள், எமர்ஜென்சி விளக்குகள், சாவிகள் இது மாதிரி சாதனங்களை முதலில் விசாரித்து அவைகள் முறையாக இருகின்றனவா என்று வினவ வேண்டும், அப்படி வினவும் பட்ச்சத்தில் மனைவி உஷாராகி கொஞ்சம் லைனில் இருங்கங்க பார்த்துட்டு வந்துடறேன் என்று சொல்வார்கள், திரும்பி வந்ததும் உங்கள் நேரம் தானே, இஷ்டம்போல் பேசலாம்.

அன்பான பொறுப்பான கணவர்களே, பொருள் ஈட்ட வீட்டை விட்டு வெளியில் செல்லும் நீங்கள் பொறுப்புடன் வீட்டு சாதனங்களைக் குறித்து ஒரு பட்டியல் போட்டு உங்கள் மனைவி இடத்தில் கொடுத்து தினமும் கவனிக்கும்படி சொல்லுங்கள். மனையின் ஒய்வு நேரம் அறிந்து போன் பண்ணுங்கள், சமையல் நேரங்களில், பிள்ளைகளை பள்ளிக்கு தயார் படுத்தும் நேரங்களில், இறை வழிபாட்டில் இருக்கும் நேரங்களில் போன்ற நேரங்களை அறிந்து போன் பண்ணும் நேரங்களை சரி செய்து கொள்ளுங்கள், வீட்டு சாவிகளை ஒரே இடத்தில் வைத்து பழக வேண்டு, பல இடங்களில் வைத்து பழகினால் அவசரமான நேரங்களில் சாவியை தேடுவதில் சங்கடப்படவேண்டிவரும், நீங்கள் வீட்டுக்கு போன் பண்ணும் நேரமெல்லாம் இது குறித்து விசாரிக்க மறக்க வேண்டாம். மனைவிமார்களும் கணவனோடு எல்லா விஷயத்திலும் ஒத்துழைத்துப் போக வேண்டும்.

JAMAL-002‘மனித உரிமை ஆர்வலர்’
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
Source : http://nijampage.blogspot.in/2013/06/blog-post_11.html?utm_source=BP_recent

Advertisements
 

Tags: , ,

One response to “தம்பதியர்களே ! ப்ளீஸ் தூங்கிடாதீங்க !?

  1. திண்டுக்கல் தனபாலன்

    June 23, 2013 at 3:07 pm

    தொடர்பு கொள்ளும் நேரத்தை இருவரும் கலந்து ஒரு முடிவு செய்யலாம்… அவசரத் தொடர்பின் போது நீங்கள் சொல்வதெல்லாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்…

    நன்றி ஐயா… வாழ்த்துக்கள்…

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: