RSS

Monthly Archives: August 2013

முறிவு

imagesமணமுறிவு ஏற்படுதற் காரணம்
….மனமுறிவு உண்டாதல் ஆகுமே
குணமறிந்து விட்டுக்கொ டுத்தலே
…குடும்பத்தில் இன்பத்தை வளர்க்குமே
பணம்பறிக்கும் எண்ணமெலாம் இல்லறம்
…பாழ்பட்டுப் போவதற்கு அறிகுறி
உணர்வறிந்தப் பாலியலில் இன்பமே
…உதட்டளவில் பழகுவதால் துன்பமே!

இணைகோடு இணையாது போயினும்
….இணைபிரியா உறவுகளில் இரயிலின்
இணைசேரா தண்டவாளம் மீதினில்
…இரயிலும்தான் செல்லுதலைப் போலவே
துணையோடு ஒத்துபோகும் நீயுமே
….துன்பமிலாப் பயணத்தில் வெல்லுக
வீணையோடு இணைகின்ற பாடலும்
….வெற்றியான தாம்பத்யம் போலவே!

 • முதலாளி தொழிலாளி உறவினில்
  ……முறிவும்தான் ஏற்படுதற் காரணம்
  முதலில்நீ ஒப்பந்த நிபந்தனை
  …முறித்துவிட்டு விருப்பம்போல் நடப்பதே
  உதவாத காரணங்கள் சொல்லியே
  ..ஒதுங்குகின்றாய்ப் பணிநேர கடமையில்
  அதனாலே உங்கட்குள் முறிவுகள்
  ….அனுதினமும் வருவதையும் காண்பீரே!

  சந்தேகம் கொண்டாலே நட்பினில்
  …சந்தோசம் முறிந்துவிடும் விரைவுடன்
  உந்தேகம் அவன்தேகம் வேறுதான்
  ….உயிருக்குள் உயிராகப் பழகினால்
  உந்தேசம் அவன்தேசம் மாறியும்
  …உள்ளன்பில் வென்றிடுவாய் யாரையும்
  வந்தாரை வாழவைக்கும் தமிழகம்
  …வண்டமிழ்போல் போற்றுவது நட்பையே!

  kalamKalam Kader
  இலண்டன் தமிழ் வானொலியில் என் கவிதை; தலைப்பு: முறிவு
  From: Abulkalam bin Shaick Abdul Kader <kalaamkathir7@gmail.com>

  https://www.youtube.com/watch?feature=player_embedded&v=bRh5gXtfm3U#t=2590

  Advertisements
   
 • Tags: , , ,

  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ ! [ பகுதி 3 ]

  adirai news - nijam pageஒப்பந்தம் அடிப்படையில் வேலைக்கு சென்ற நம்மவர்களில்… கம்பெனியின் நிலவரம், நிர்வாகிகளின் மனநிலை அறிந்து நல்ல முறையில் வேலை பார்ப்பவர்களும் உண்டு. அதிகமானோர் வெள்ளாந்தியாய் காலம் செல்ல செல்ல ஊர் சென்று குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரே சிந்தையில் நிர்வாகத்திடம் ஊர் செல்வதை பற்றி தகவல் கூறாமல் தானே முடிவெடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் பொருள் சேர்த்து அத்துடன் ஊர் செல்ல வேண்டும் என்ற ஆவலையும் சேர்த்து தனது முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள்.

  இந்த நிலை நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாக செலவினம் பற்றிய சிந்தனையில் தந்திரமான நிபந்தனைகள் வைப்பார்கள். மூன்று வருடம் ஒப்பந்தந்தம் முடிந்து விட்டது இப்போதே ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் உனக்கு திரும்பி வரும் விசா கிடையாது. இன்னும் ஒரு வருடம் காத்திருந்தால் விசா புதுப்பித்து தருகிறோம் என்பார்கள்.

 • நம்மவரின் மனநிலை நன்றாக அறிந்தே இந்த நிபந்தனை. ஆசையாய் வாங்கி வைத்த பொருள் அது மனைவி மக்களிடம் கொடுத்து அவர்கள் மகிழ நாம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

  இப்படி ஊருக்கு செல்ல முற்படும் அப்பாவி ! ஒரு பயணி எவ்வளவு கிலோ கொண்டு செல்ல வேண்டும் என்பதை அறியா அவர்கள் புறப்படும் போது விமான நிலையத்தில் விலை மதிப்பற்ற பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் கட்டி சோகமாய் ஊருக்கு பயணம் மேற்கொள்வார்கள். நேரடியாக பம்பாய் வந்து இறங்கிய அவர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகளால் கொடுக்கப்படும் தொல்லை மிகவும் பரிதாபமானது.

  சுங்க பரிசோதனை என்ற பெயரில் நீண்ட தூர பயணத்தில் வந்த பயணியை குற்றவாளியை நிறுத்தி விசாரிப்பது போல என்ன கொண்டு வந்துள்ளாய் என கேட்டு அவர் கொண்டு வந்த உடமைகளை தனி தனியாய் சோதனை செய்து அதில் தனக்கு பிடித்த பொருளை அடாவடியாக எடுத்து கொண்டு உனது பொருளுக்கு சுங்க தீர்வையாக பத்தாயிரம் போடுகிறேன் என்பார் ! அப்பாவி தொழிலாளி செய்வது அறியாது திகைப்பார். அவ்வளவு பணத்திற்கு எங்கு செல்வேன் என்பார் உடனே இரக்கம் காட்டுவது போல் சரி சரி என்னிடம் ஆயிரம் தந்து விட்டு அங்கு ஆயிரம் கட்டி விட்டுச்செல் என்பார்.

  அப்பாடா ! தப்பித்தோம் !? என்ற மன நிலையில் அப்படியே செய்வார் நம்மவர் பிறகு பம்பாயிலிருந்து உள்நாட்டு விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து அவர் தம் வீட்டிற்குச்செல்வார்.

  ஊர் வந்த அவர் ஒரு மஹாராஜாவை போல கவனிக்கப்படுவார். காலாறா நடப்போம் என்று வீதி உலா, புது உடை, கையில் பல பலக்கும் கடிகாரம், ஊட்டமாக உணவுண்டு குளிரூட்டப்பட்ட அறையில் உறங்கியதால் பார்க்க நிறமாக காட்சி அளிப்பார். அரபு நாட்டு வாழ்க்கை பற்றி கேட்க சுற்றி வாலிபக்கூட்டம்.

  வளைகுடா வாழ்கை பற்றிய முதல் தகவல் அறிக்கை ! அடுத்த தலை முறையினரின் ஆவலை தூண்டும் தகவலாய் அமைந்தது. நன்றாக படித்தவரின் நிலை காணாமல் கிணற்று தவளையாய் இருந்து ஊர்வந்த அப்பாவி பளபளக்கும் நிலை பல அப்பாவிகளை உசுப்பேற்றிய தகவலாய் அமைந்ததின் விளைவு பல ஆயிரக்கனக்கான் நம்மவர்கள் பாஸ்போர்ட் எடுத்ததும் வளைகுடா !

  செல்ல எத்தனித்தும் அதில் பலர் வெற்றி கண்டதை பற்றி அடுத்த வாரம் காண்போம்.

  குறிப்பு :
  * 1972..களில் ..சுதேசி கொள்கை காரணமாக வெளி நாட்டு பொருகள் அதிகம் கொண்டு வர கட்டுபாடு இருந்தது அது சுங்க துறை அதிகாரிகளுக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தந்தது.

  * ஒரு ஒப்பந்த தொழிலாளி ஒன்வே விசா கொடுத்து ஊருக்கு அனுப்பப்பட்டால், மீண்டும் ஒரு நபர் தேவைப்படுவார் அதற்கு விசா விண்ணப்பித்து இந்தியாவில் விசாவை விற்று பணம் பார்த்து விடுவர்.

  * வளைகுடாவில் வேலை பார்ப்பவர்களின் பணங்கள் பொருளாகி பணம் விரயமாகுவதும் மன உளைச்சலினை எற்படுத்துவதுமாய் அமைகிறது. பணம் சம்பாதிக்க வந்தவர்கள் பணத்தினை ஊருக்கு அனுப்புவதில் கவனமாக இருத்தல் நலம்.

  * ஊருக்கு செல்வதில் நாட்டம் கொள்வதை, கொஞ்சம் தாமதப்படுத்தினால் நலம்
  [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]

  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  source : http://nijampage.blogspot.in/2013/07/3.html

   
 • Tags: , , , ,

  சிரியா : சிரிப்பை துறந்த தேசம்

  1சிரியாவின் உள்நாட்டுப் போர் ‘சீரியஸாகி’
  போர்ப்பதட்டம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அச்சுறுத்துகிறது.

  கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிரியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பாதி பேர் அப்பாவி சிவிலியன்கள். முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. நாற்பது லட்சம் பேர் குடும்பம், வீடு, ஊரையெல்லாம் இழந்து உயிர்பிழைக்க நாட்டுக்குள் ஆங்காங்கே சிதறிப்போயிருக்கிறார்கள். ஓரளவுக்கு வசதி படைத்த பதினெட்டு லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டார்கள்.

  2010ல் தொடங்கி, அரபுநாடுகளை புரட்டிப்போட்ட ‘அராபிய வசந்தம்’ எனப்படுகிற மக்களிடையே ஏற்பட்ட புரட்சியுணர்வு இப்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் இன்னமும் சிரியாவில் மட்டும் வசந்தம் பெரும்புயலாக வீசிக்கொண்டிருக்கிறது.

  மத்திய கிழக்கில் சிரியாவை சுற்றி இஸ்ரேல், ஜோர்தான், ஈராக், துருக்கி ஆகிய ‘எப்போதும் பிரச்சினை’ நாடுகள் அமைந்திருக்கின்றன. நெருப்புக்கு நடுவில் எரியாத கற்பூரமாய் சிரியா மட்டும் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

  மக்கள் தொகை கிட்டத்தட்ட இரண்டு கோடி. தொண்ணூறு சதவிகிதம் முஸ்லிம்கள். பத்து சதவிகிதம் கிறிஸ்தவர்கள். ஜனநாயகத்தின் வாசனையே சிரியாவில் அரைநூற்றாண்டாக கிடையாது. 1963ல் ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகளாக அராப் சோசலிஸ்டு பாத் கட்சியின் ஆட்சிதான். 1971ல் தொடங்கி, தற்போதைய அதிபர் பஸார் அல் ஆஸாத்தின் குடும்பம்தான் அதிபர் பதவியை தொடர்ச்சியாக தக்கவைத்திருக்கிறது.

 • அராபிய வசந்தம் காரணமாக அரபுநாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களைத் தொடந்து கடந்த 2011 மார்ச் வாக்கில் சிரியாவிலும் போராட்டங்கள் தொடங்கின. தொடர்ந்து ஒரே குடும்பம் சிரியாவில் ஆட்சியதிகாரம் செய்வதை மறுத்து, அதிபரை ராஜினாமா செய்யக்கோரி பேரணிகள் நடந்தன. அதிபருக்கு இவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணடிப்பது பிடிக்கவில்லை. இராணுவத்தை அனுப்பி ‘என்ன செய்தாவது’ அடக்கச் சொன்னார். துப்பாக்கி முனையில் போராட்டக்காரர்களை இராணுவம் அணுக, கொடி பிடித்துக் கொண்டிருந்த போராட்டக்கார்கள் கொடியை கீழே போட்டுவிட்டு பதிலுக்கு துப்பாக்கி ஏந்தத் தொடங்கிவிட்டார்கள். இதுதான் சிரியப் பிரச்சினை.

  சிரிய இராணுவத்தை ஆங்காங்கே நடந்த சண்டைகளில் துப்பாக்கி ஏந்திய போராட்டக்காரர்கள் போட்டுத்தள்ளிக் கொண்டிருக்க, நாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிபர் அல் ஆஸாத்தின் கையை விட்டு நழுவிக்கொண்டிருக்கிறது. அரசை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இதுவரை பொதுவான தலைமை ஒன்று உருவாகவே இல்லை. முஜாகிதீன் அமைப்பான ஜபாத் அல் நுஸ்ரா என்கிற மத அமைப்புக்கு அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களிடையே நல்ல மதிப்பு இருக்கிறது. எனவே அரசுக்கு ஆதரவாகவும் ஹிஸ்புல்லாவினர் (அரபுநாடுகளில் இயங்கும் இராணுவக் கட்டுமானம் கொண்ட மத அரசியல் கட்சி) களமிறங்கியிருக்கிறார்கள். நாட்டின் முப்பதிலிருந்து நாற்பது சதவிகிதம் நிலப்பரப்புதான் இப்போதைக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீதி இடங்களை கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.

  சிரிய அரசாங்கத்துக்கு ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் இராணுவரீதியாக உதவி வருகின்றன. போராட்டக்காரர்களுக்கு கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஆயுதங்களை தருகின்றன. போராட்டக்காரர்களை நியாயமே இன்றி அடக்குவதாகக் கூறி அரபுக் கூட்டமைப்பு சிரியாவை தங்கள் அமைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டது. ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்றவையும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான போக்கையே கடைப்பிடிக்கிறார்கள்.

  அதிபர் ஆஸாத் இஸ்லாமியக் குழுக்களில் மைனாரிட்டியான அலாவிட் குழுவைச் சேர்ந்தவர். மைனாரிட்டியினர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மெஜாரிட்டியினரை அடக்கி ஆளுவதா என்கிற குமுறல் ஏற்கனவே இருந்தது. ஆஸாத்தின் உறவினர்களும், அவரது குழுவைச் சேர்ந்தவர்களும்தான் சிரிய இராணுவத்தின் முக்கியமானப் பதவிகளைப் பிடித்திருந்தார்கள். மேலும் சிரியாவில் வாழும் குர்திஸ் இனமக்களும் தங்களுடைய கலாச்சாரம், மொழி, இனத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஏற்கனவே குமைந்துக் கொண்டிருந்தார்கள். 2011ன் தொடக்கத்தில் சிரிய கிராமப்புறங்களில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம். அதன் காரணமாக ஏற்கனவே ஏழைகளாக இருந்தவர்கள் பரம ஏழைகளானது. புதிய பொருளாதாரக் கொள்கைகளால் மக்களிடையே சமத்துவத்துக்கான இடைவெளி அதிகரித்தது. இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலைவிரித்து ஆடுவது என்று ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ நிறைய காரணங்கள் இருக்கிறது.

  கொல்லப்பட்டவர்கள்உலகிலேயே அதிகளவில் இரசாயன ஆயுதங்களை ‘ஸ்டாக்’ வைத்திருக்கும் நாடுகளில் மூன்றாவது பெரிய நாடாக சிரியா கருதப்படுகிறது. போராட்டக்காரர்களை அடக்க சிரிய இராணுவம் இவற்றை பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்ஜசீரா தொலைக்காட்சி சந்தேகப்பட்டது. அப்போதிலிருந்தே தொடர்ச்சியாக ஆங்காங்கே இரசாயன ஆயுதங்களால் மக்கள் தாக்கப்படுவதாக ஊடகங்கள் அலறிக்கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் நடத்தப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலில் சுமார் 635 பேர் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல். இதை உறுதிப்படுத்த வந்த ஐ.நா. விசாரணை அதிகாரிகளை, அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து அரசு வெளியேற்றியிருக்கிறது.

  இந்நிலையில் அமெரிக்கா இனியும் பொறுக்கமுடியாது என்று தன்னுடைய போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடலுக்கு அனுப்பியிருக்கிறது. ஏற்கனவே அங்கே நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஹாரி ட்ரூமான் என்கிற விமானந்தாங்கி கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு விரைந்திருக்கிறது. அங்கிருந்து சிரியா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. ஏவுகனை தாங்கி கப்பல் ஒன்றும் மத்திய தரைக்கடலுக்கு விரைந்தது. அமெரிக்காவுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் படைகளும் தயார்நிலையில் இருக்கின்றன.

  “எங்கள் பிரச்சினையில் யார் தலையிட்டாலும், அது எண்ணெயில் தீயை வைப்பதற்கு ஒப்பாகும். அந்த தீ சிரியாவை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் எரித்துவிடும்” என்று சிரியாவின் தகவல்துறை அமைச்சர் அமெரிக்காவின் தலையீட்டை எச்சரித்து மிரட்டியிருக்கிறார்.

  “அபாயக்கோட்டை அமெரிக்கா தாண்டுகிறது. இதன் விளைவுகளை வெள்ளை மாளிகை சந்திக்கும்” என்று சிரியாவின் ராணுவ துணைத்தலைவர் மசூத் ஜஸாயரியும் சவால் விட்டிருக்கிறார்.

  சிரியாவுக்கு ஆதரவாக ஈரானும் தொடை தட்டி களமிறங்கியிருக்கிறது. ரஷ்யாவும் நேரடியாக களமிறங்கும் பட்சத்தில் மத்திய தரைக்கடல் இரத்தக்கடல் ஆகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அரபு நாடுகள் கவலையோடு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

  உலகம் இன்னொரு போரை சந்திக்க தயார் ஆகிவிட்டது.

  yuvakrishna(நன்றி : புதிய தலைமுறை)
  எழுதியவர் யுவகிருஷ்ணா
  Source:http://www.luckylookonline.com/2013/08/blog-post_30.html

   
 • எத்தனை கோலங்கள் இத்தைகைய இடையறா விபத்தால்.

  எத்தனை கோலங்கள் இத்தைகைய இடையறா விபத்தால்.
  குடித்துவிட்டு ஓட்டும் வாகன ஊர்தியர் அறிவாரோ இந்நிலை !
  ———————————————————————————–

  “ஏம்மா! அழறே”

  “ஒண்ணுமில்லேடா கண்ணு!

  தான் அழுவதைக் குழந்தை பார்த்துவிட்டதைக் கண்டு புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

  “அழாதேம்மா… எனக்கும் அழ வருது…” குழந்தையின் கண்கள் கலங்கின.

  “இல்லேடா கண்ணு. நான் அழமாட்டேன்”.

  குழந்தை தனது அரும்பு விரலை தாயின் கண்ணீரைத் துடைக்க நீட்டியது.

 • ATT21103573
  குழந்தையை அள்ளி அணைத்து கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.
  இன்று அவள் முழு உரிமையுடன் தன் குழந்தைக்கு முத்தமிடுகிறாள். ஆனால் அவள் கணவன் இருந்தபோது அவர்களுக்குள் அடிக்கடி போட்டி தான்.
  “நான் தான் என் கண்ணுக்கு முதலில் முத்தம் கொடுப்பேன்” அது அவள் கணவன்.

  “முடியாது நான் தான்…” இது அவள்.

  “அம்மாவுக்குத்தான்” என்று குழந்தை முடிவில்லாத போட்டியைத் தீர்த்து வைப்பான். அவள் கணவனுக்கு உடனே பொய்க் கோபம் வரும். குழந்தையைச் செல்லமாகக் கடிந்து கொள்வான்.

  “சும்மா இருங்க! குழந்தை கிட்டே போய் உங்க கோபத்தையெல்லாம் காட்டாதீங்க.”

  தாய் தனக்காகப் பரிவதைக் கண்ட குழந்தை அவளோடு ஒட்ழக்கொள்வான்.
  “நாளையிலிருந்து உனக்கு பிஸ்கெட் வாங்கி தரமாட்டேன் போ”
  குழந்தை தனக்குச் சாதகமாக இல்லாததைக் கண்ட அவன் செல்லமாக மிரட்டுவான்.

  “அம்மா வாங்கித் தருமே” இது குழந்தை.

  “நான் உனக்கு பிஸ்கெட், பொம்மை எல்லாம் வாங்கித் தரேண்டா கண்ணு அப்பா பேச்சு “கா விட்டுடுடா”

  கணவனை அழகு காட்டிக்கொண்டே குழந்தையிடம் கூறுவாள்.
  “நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணி அவனைக் கெடுத்துடு”
  அவன் கோபத்தோடு ஆனால் செல்லமாக மனைவியின் கன்னத்தைத் தட்டுவான்.
  அந்த நாட்கள்-இனிய நாட்கள் இனி இல்லாத நாட்களாகி விட்டன .

  விபத்து விழுங்கி விட்டது அவனை

   
 • Tags: , ,

  அமெரிக்கா முழுவதும் வியப்போடுப் பார்க்கப்படும் ஒரு தமிழர்- ஸ்ரீதர்!

  549680_250054835111344_1780978727_nகே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்….

  இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

  அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்….

  திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

  அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
  செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

 • ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

  இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

  இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
  கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.

  இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

  நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

  சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

  உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர். ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

  அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
  ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
  100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

  இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை…

  kalamFrom: Abulkalam bin Shaick Abdul Kader
  “கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
  அதிராம்பட்டினம்

   
 • Tags: , ,

  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ ! [ பகுதி 2 ]

  adirai news - nijam pageதொலை தொடர்பு வசதி குறைந்த காலமது. அதே போன்று பயண காலமும் அதிகம் தேவைப்பட்ட காலமது… அந்த சூழலில் சென்னையிலிருந்து மூன்று நாள் பயணம் மேற்கொண்டு பம்பாய் சென்ற நம்மவர். அரபு நாட்டு பயண கனவுடன் காத்திருக்கும் நாட்கள்… பதட்டமான நாட்கள், காரணம் போலி ஏஜண்டுகளின் அட்டகாசம் நிறைந்த காலமது எழுபதுகளில் அரபு நாட்டுக்கு ஆட்கள் தேவை அதிகமாக தேவைப்பட்ட காலமாக இருந்தமையால் விசா கிடைக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதில்லை. நல்ல கம்பெனிகள் பயணம் மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து நலமாய் அழைத்துச்செல்வர்.

 • அரபு நாடு சென்ற நம்மவர்களின் வாழ்கையில் மொழி பிரச்சனை மூன்று மாதம் வரை நீடிக்கும். அது போன்ற சந்தர்ப்பங்களில் நிகழந்த நிகழ்வுகள் நகைச்சுவையான நிகழ்வுகள் நண்பர் மு.செ.மு. சபீர் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட நிகழ்வு போன்றது .மொழி தெரியாமல் அரபி இடும் கட்டளைக்கு எதிர்மறையான செயல்களை செய்து அரபியின் கோபத்திற்கு ஆளாகும் நிலை தவறு மொழி பிரச்சனையால் என்பதை உணர்ந்து இரு மொழி தெரிந்த ஊழியரால் வழி நடத்தபடுவதும் உண்டு.

  தரமான, ஊட்டமான உணவு, பழவகைகள் என எல்லாம் மிக மலிவாக கிடைத்த சந்தோசத்தில் ஒருபுறம், கை நிறைய சம்பளம் மறுபுறம் இவைகளால் குடும்பத்தை பிரிந்த சோகம் குறைந்திருக்கும்.

  அந்த காலகட்டம் தொலைப்பேசி மூலம் பேசுவது என்பது இயலாத காரியம். கடிதம் சென்றடைய இரண்டு வாரம் ஆகும். வீட்டிலிருந்து வரும் கடிதம் உழைத்து வரும் நம்மவருக்கு ஒத்தடம் கொடுப்பதாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சூழலை சுட்டி காட்டும் கடிதங்கள் ஒருவர் கடிதத்தை படித்து கொண்டிருக்கும்போதே அழுவார். மற்றவரோ கடிதம் கண்டு சிரிப்பார். இப்படி பலதரப்பட்ட மனநிலை காணப்படும் சூழல் வேறு சிலரோ வேலை பார்த்து விட்டு வந்த மனச்சோர்வில் அயர்ந்து தூங்கி விட்டு விடிந்து கடிதம் படிப்போம் என தலையைனைஅடியில் வைத்து நிதானமாக படிப்பவரும் உண்டு.

  ஒன்றாய் உறங்கி ஒன்றாய் உணவுண்டு ஒரு குடும்பமாய் வாழும் சூழலில் மாதங்கள் நாட்களாய் ..வருடங்கள் மாதங்களை போல மிக வேகமாக கரைந்து ஓடும்… [ ஆனால் தலைவனை பிரிந்து வாடும் மனைவிக்கு ஒரு நாள் வருடமாக காட்சி அளிக்கும் அது பற்றி வரும் வாரங்களில் காண்போம் ] சம்பளம் கிடைத்த மறு நிமிடமே வங்கி மூலம் காசோலையாக மாற்றி ஊர் வந்து சேரும்.

  பணம் கிடைத்தது என்ற செய்தி கிடைக்கும் வரை கடிதம் வரவை எதிர்பார்த்து காத்திருப்பர். இப்படி ஒரு வருடம் கழிந்து விடும் ஊர் நினைவு நம்மவரை தொற்றிகொள்ளும் ஊருக்கு பணம் அனுப்புவதை பகுதியாக குறைத்து கொண்டு பொருட்கள் சேர்க்க ஆரம்பிப்பார்கள் அப்படி அவர்கள் சேர்க்கும் பொருட்கள் தனது பயணத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதை அறியாத அவர்கள் பிள்ளைகளின் விளையாட்டு பொருள் முதல் வயதான பாட்டிகளுக்கு தேவையான பொருள் வரை வாங்கி குவிப்பார்கள்.

  தொழிலாளர்கள் ஒட்டு மொத்தமாக தங்குவதற்கு நகருக்கு வெளியே கேம்ப் எனப்படும் தொழிலாளிகளின் குடியிருப்பு இருக்கும். வேலை முடிந்து இருப்பிடம் மறுநாள் வேலை இப்படியே நம்மவரின் வாழ்க்கை நகர்ந்து செல்லும். வார விடுமுறையில் தொழிலாளிகள் கடை வீதிகளுக்கு சென்று தனக்கு தேவையான பொருளை வாங்க செல்வர். கடை வீதியில் உள்ள மலையாளிகள் மிக தந்திரமாக ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள கேம்ப்லிருந்து வந்திருக்கிறார்கள் என்பதை பேச்சு வாக்கில் தெரிந்து கொண்டு அவர்களிடம் பொருட்களை அதிகமான விலைக்கு விற்பார்கள் பாவம் ரத்த பாடுபட்டு உழைத்து சேர்த்த பணத்தை விரயம் செய்கிறோம் என்று அறியாமல் அள்ளி கொடுத்து விட்டு வருவார்கள்.

  இப்படியே இரண்டரை வருடம் கழிந்து விடும். ஊருக்கு செல்ல வேண்டும் என்ற விடுப்பு கேட்பார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று சில ஓநாய்கள் காத்திருக்கும், அதாவது மேனேஜர் என்றழைக்கப்படும் மலையாளிகள் பணம் பார்க்க சந்தர்ப்பத்திற்கு இந்த அப்பாவிகளின் வேலைக்கு உலை வைக்கும் சதி தான் அது ! என்ன சதி !? அடுத்த வாரம் காண்போம்…
  [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]

  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  Source : http://nijampage.blogspot.in/2013/07/2.html

   
 • Tags:

  பேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மறைவு

  1000344_508517355893665_1781131873_nபேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மறைவு

  ஈடுசெய்துவிடக் கூடியது அல்ல.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்…பேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மறைவு

  தந்தை பெரியார் அவர்களின் தாக்கம் வரலாறுகளைப் புரட்டிப்போட்டதன் தொடக்கம்;புதிய வரலாறுகளின் படைப்பாக்கம் என்பனவற்றை திராவிட இனமும் தமிழ்கூறும் நல்லுகமும் இந்தியாவும் மறந்துவிட முடியாது.ஐம்பதுகளின் தொடக்கத்தில் என் ஆசிரரியத் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு வாழ்வில் முதன்முதலாக
  ​-​
  சிறுவனாய் இருந்த நான்,ஒரு பெருந்தலைவர் அதுவும் புரட்சிக்காரர் ஆன பெரியார் ஈ.வே.ரா அவர்களின் சிறப்புக் கூட்டத்திற்குப் போனது இன்னமும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.பின்னர் வயதும் அறிவும் வளர வளர அவர் பெரியார் மட்டுமல்ல தந்தை பெ
  ​ரி​
  யார் என்பதை உணர்ந்தேன்.அவரை நிறைய உள்வாங்கி வளர்ந்தேன்.அவர் தொண்டு செய்து பழுத்த பழமாகி காலமான போது அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஊரிலிருந்து சென்னை வந்தேன்.

 • அரசினர் தோட்டத்தில் அவருடைய உடல் பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டபோது எல்லாரையும்போல நானும் கண்கலங்கினேன்.அவருடைய இழப்பு குறித்த எத்தனையோ சிந்தனைகள் எனக்கு வந்து போயின.அவற்றுள் முதன்மையானது,”ஐயா இஸ்லாத்தை ஏற்காமல் இவ்வுலகைவிட்டுப் போகிறாரே”என்பதுதான்.ஏனென்றால் அவர் வாழ்வில் சில தடைவைகளாவது ”நான் முஸ்லிமாகத்தான் இறப்பேன்” என்று சொன்னதால் எனக்கு அந்த எதிர்பார்ப்பு மிகவும் இருந்தது;அது அவருக்கு மிகவும் தகுதியானது என்ற நம்பிக்கையும் இருந்தது;அதில் ஐயா காலம் கடத்துவது குறித்துக் கூறிவந்த காரணங்களையும் நான் அறிந்திருந்தேன்.

  முன்னதாக வைக்கம் போராட்டத்தை ஒட்டி அவர் செய்துவந்த புரட்சியில் ஒரு திருப்பு முனையாக சிலகாலம் அவர் மக்களை இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கச் சொல்லி ஏவினார் என்பது இன்று பலருடைய கவனத்திலும் இருக்க வாய்ப்பில்லை.அவ்வாறு அவருடைய உணர்த்துதலால்,ஊக்குவிப்பால் பலர் இஸ்லாமாகி நல்ல முஸ்லிம்களாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்பது இலைமறை காய் போல் இருந்துவரும் பெரிய செய்தி.

  பெரியார் விதைத்த வித்துகள் முன்பின்னாக முளைத்துக்கொண்டே இருக்கின்றன.அந்த வித்துகள் விளைத்த முத்துகளில் ஒன்றுதான் பெரியார் தாசன் -பின்னர் பேராசிரியர் டாகடர் அப்துல்லாஹ் அவர்கள்!

  அவருடைய கடுமையான உடல் நலக்குறைவு நமக்கு வருத்தமளித்தது;துஆ செய்தோம்.கடந்த ரமலானில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்ய எண்ணி முயன்றபோதுதான் அவருடைய உடல் நலம் ‘சீர்யஸாக’க் குன்றிப்போனதை அறிந்து வருந்தினேன்.இன்று நாம் அவரை இழந்துவிட்டோம்.

  என்றாலும் பெரியாருக்கு வெளிப்படையாகக் கிடைக்காத நல்வாய்ப்பு பெரியார் தாசனாக இருந்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுக்கு மிகவும் சிறப்பாகவே கிடைத்தது.
  ​அல்ஹம்துலில்லாஹ்!

  ​அறிவுலகுக்கும்,அழைப்புப் பணிக்கும் அவர் ஆற்றிய பணிகளால் என்றும் நினைவுகூரப்படுவார் என்பதில் ஐயமில்லை.அதுவே அவருக்குக் காலமெல்லாம் கிடைத்துவரக் கூடிய துஆ.

  வல்ல அல்லாஹ்,அளவற்ற அருளாளனான அல்லாஹ் தன் அடியாராகி வாழ்ந்து மறைந்த நம் சகோதரரான பேரா.அப்துல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுமைப் பேறுகளையும் வழங்குவானாக.அவரை இழந்து வாடும் அனைவருக்கும் அழகிய பொறுமையைத் தந்து அருள்வானாக…..


  —ஏம்பல் தஜம்முல் முகம்மது.​

  Regards & Wassalam.

  Yours,

  Yembal Thajammul Mohammad

  ———————————————————————————–
  அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு:
  அறிவுக் கருவூலத்தை இழந்தோம்!
  ———————————————————–
  ஆளூர் ஷாநவாஸ்
  ——————————–
  doctor abdullah
  அப்துல்லாஹ் பெரியார்தாசன்
  ———————————
  சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி – சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971 இல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து பரிணமித்தார்.

  சாதிக்க வேண்டும் என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ வேண்டும் என்ற வேட்கையும், அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன் வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக் கண்டித்தும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார். அதற்காக அவர் கையிலெடுத்த கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு.

  எழுத்திலிருந்து தமது சமூகப் பயணத்தைத் தொடங்கிய அவர், 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மற்றவர்களைப் போல் அல்லாமல் எதையுமே வேறுபடுத்திப் பார்த்துப் பழகிய அவர், தமது எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டினார். எழுத்தில் மட்டுமின்றி சொற்பொழிவுகளிலும் தம் அபாரத் திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார்.

  பெரியார் பிரசவித்த பகுத்தறிவு வீச்சும், மார்க்சிய தத்துவங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அம்பேத்கரின் சமூகப் புரட்சியும் அவரை ஆர்ப்பரிக்கச் செய்தது. தத்துவங்களை படித்துப் படித்துப் பேசினார். தமது உரை வீச்சின் மூலம் மடமைக்கு அடிகொடுத்தார். சமூகக் கொடுமைகளைக் கொன்றொழித்தார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார் தாசனாக உருமாறினார்.

  தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியார் தாசனின் பேச்சு ஒலித்தது. அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா,தா ய்லாந்து,ஐக்கிய அரபு அமீரகம்,மலேசியா,சிங்கப்பூர் என பெரியார் தாசனின் குரல் உலகெங்கும் பரவியது.

  பெரியாரைப் பற்றியும், அவர் வகுத்துக் கொடுத்த நெறிகளைப் பற்றியும் ஓர் மாற்றுப் பார்வையை முன்வைத்தார் பெரியார் தாசன். பெரியாரின் மறுபக்கம் அவரால் தான் வெளிப்பட்டது.

  ஆக்ரோஷமும், கோபமும் பெரியார் தாசனிடம் நிறைந்து காணப் பட்டாலும், இயல்பாக அவரிடமிருந்து பொங்கியெழும் நகைச்சுவை அலை அனைவரையும் நனைத்து விடும். சமூகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நகைச்சுவை ததும்ப அவர் வருணிக்கும் போது கலகலப்பும், சிரிப்பலையும் பற்றிப் பரவுகிறது.

  பெரியார் தாசன் என்றால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற அடையாளங்களோடு சிறந்த நடிகர் என்ற சிறப்பும் சேர்ந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘கருத்தம்மா’ எனும் திரைப்படத்தில், படிப்பறியா பட்டிக்காட்டு மொக்கையனாகத் தோன்றி, சமூக அவலங்களை துல்லியமாகப் பதிவு செய்தார், பெரியார் தாசன். தாம் நடித்த முதல் படத்திலேயே இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

  மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். தோல்வி பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் வாடி வதங்கும் இளையோருக்கும், பிரச்சனைப் புயலில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கும் சிகிச்சைத் தந்து தீர்வைச் சொன்னார்.

  இந்துவாகச் சாகமாட்டேன் என்று சூளுரைத்து இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தத்தைத் தழுவிய அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார் தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துக்களைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.

  ‘தம்மோடு வாதம் புரிந்து எவரும் வெல்ல முடியாது’ எனும் அளவுக்கு பலரையும் மிரள வைத்தவர் பெரியார் தாசன். இந்து மதத்தின் தலைமையகமாகவும், இந்துக்களின் ஆன்மீக குருவாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார் தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். இந்துத்துவத் தத்துவங்களை ஆழ்ந்து உள்வாங்கி அவற்றை சரளமாக எடுத்தியம்பும் பெரியார் தாசனின் திறமைக்கு முன் இந்துமத சாமியார்களும், வீரத் துறவிகளும் திகைத்து நின்றனர்.

  ‘பெரியார் தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டே, பெரியாரைப் போலவே யாருக்கும் தாசனாக இருக்க சம்மதிக்காதவர் பெரியார் தாசன்’ என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞரின் கூற்றைப் போலவே, எவருக்கும் அடிமையாகாமல் சுயமரியாதைச் சுடராக ஒளிர்ந்த பெரியார் தாசன், 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இறைவனின் அடிமையாக இஸ்லாத்தில் இணைந்தார்.

  இஸ்லாமியராக மாறிய பின் அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். ஓயாத பயணங்களை மேற்கொண்டார். உடல்நலனைப் பற்றி கவலையே படாமல் ஊர் ஊராய் சுற்றினார். நுரையீரல் தொற்று நோய் தம்மை தாக்கியிருப்பதைக் கூட கவனிக்காமல் பயணங்களைத் தொடர்ந்தார். இயல்பாக இயங்க முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்தவரை பார்ப்பதற்காகச் சென்ற போது, சிறப்புப் பிரிவுக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என மறுத்தது மருத்துவமனை நிர்வாகம். உடனே படுக்கையிலிருந்து வெளியேறிய அப்துல்லாஹ் அவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேண்டீனில் அமர்ந்து நீண்ட நேரம் எம்மோடு உரையாடினார். விரைவிலேயே நோயிலிருந்து மீண்டு விடுவேன் என்றும், சமூகப் பணிக்கு மீண்டும் வருவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், அவர் மீண்டு வரவே இல்லை.

  2001 ஆம் ஆண்டிலிருந்தே அவரை நான் நெருக்கமாக அறிவேன். அவரிடம் மணிக்கணக்கில் உரையாடிய மிகச் சிலரில் நான் ஒருவன். அவரை அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை நேர்காணல்கள் செய்துள்ளேன்.

  ஒவ்வொருமுறையும் அவரை சந்திப்பதற்காக பச்சையப்பன் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள கேண்டீனில் அமர்ந்தே பேசுவோம். கடைசியாக அவரிடம் மருத்துவமனை கேண்டீனில் அமர்ந்துதான் பேசினேன்.

  இனி எங்குமே அவருடன் பேச முடியாது!

  Ajman Museum 12th Feb 2008தகவல் தந்தவர்
  Muduvai Hidayath
  ===================================================================================
  வருந்தத் தக்க செய்தி .

  கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மனோதத்துவ மருத்துவர் என்ற பல துறைகளிலும் புகழ் பெற்ற மக்களுக்கு சேவை செய்த பெரியார் தாசன் என்ற Dr. அப்துல்லாஹ் அவர்கள் இறைவன் நாட்டப்படி இறந்த செய்தி அனைவருக்கும் ஆற்ற முடியாத துயரத்தை தந்தாலும் அனைத்தும் இறைவன் நாடப்படிதான் நடக்கும் என்ற மனதோடு நாம் நம் சகோதரரான பேரா.அப்துல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுமைப் பேறுகளையும் வழங்குவானாக என்று அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சுவோம் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் அழகிய பொறுமையைத் தந்து அருள்வானாக…..

  இந்த இறப்பு செய்தியை தொலைகாட்சிகளும் , மற்ற மீடியாக்களும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது மிகவும் வேதனையானது .

  பொதுவாக செயல்படும் தொலைக்காட்சியும் மற்ற மீடியாக்களும் உருவாக நாம் முயற்சி செய்ய வேண்டும்

  Anbudenமுஹம்மது அலி ஜின்னா

   
 • 2 Comments

  Posted by on August 19, 2013 in 1

   

  Tags: ,