RSS

அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ !

10 Aug

adirai news - nijam pageமுன்னுரை :
வளைகுடா வாழ்க்கை !

சிலரின் வாழ்வில் வசந்தம் வீசிய வாழ்கை… சிலரின் வாழ்வில் புயலான வாழ்க்கை… கல்வியின் முக்கியத்துவம் தெரிய வைத்த வாழ்க்கை, உற்றார் உறவினர் விட்டு பிரிந்து வந்த இடத்தில் புது உறவாய் தன்னுடன் தங்கிய வெளியூர்க்காரர்களின் நட்பு அதில் கிடைத்த பல உதவிகள், பல துரோகங்கள், ஏமாற்றம், சந்தோசம் என்று பல விசயங்கள் கலந்த படைப்பாக தொடர்ந்து வர இருக்கின்றன. கடந்த கால நிகழ்வு, நிகழ்கால சம்பவங்கள் உள்ளடக்கிய ஆக்கமே “வளைகுடா வாழ்க்கை”

தனி மனித வாழ்க்கை தேவைகள் மிகவும் குறைவான காலங்களில் மனித உழைப்பு அந்த தேவைகளின் அடிப்படையிலேயே இருந்து. அதாவது உண்ண உணவு… உடுத்த உடை… இருக்க இருப்பிடம் இதற்கான சேவைகளே அந்த உழைப்பு தேவைப்படுகிறது.

 • பண்டை கால தமிழ் மன்னன் அதியாமான் ஆண்ட காலத்தில் வாழ்ந்த ஔவை பாட்டி உழைக்கும் வர்க்கத்தை பார்த்து ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று உறங்கும் இளைஞனை பார்த்து கூறினாள். ஔவையின் அன்றைய அறை கூவல் இன்றைய இளைஞர்களுக்கு பொறுத்தமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

  நமது மூன்று தலை முறையினர் வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இன்று மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மா மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று பொருளீட்டி வந்த நாம்மவர்களுக்கு 1968 முதல் 1972 வரை தொய்வான நிலை இருந்து வந்தது. ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று அந்நாட்டை வளம் பெற செய்து நல்ல நிலைக்கு கொண்டு வரும் நம்மவர்களின் வாழ்வில் பேரிடியாய் அந்நாட்டு மண்ணின் மைந்தர்களால் தொல்லைகள் ஏற்பட்டு அகதிகளாய் நாடு திரும்பும் நிலை ஏற்படத்தான் செய்கிறது.

  இவைகளை பற்றி முத்தாய்பாய் வைக்க காரணம் பின் வரும் ஆக்கத்தில் வரும் நிகழ்வைப்பற்றி கூறிடவே இதனைக் குறிப்பிடுகிறேன்.

  1972 அரேபிய வளைகுடாவில் வேலை வாய்ப்பு துளிர்த்த நேரம் அரபி கடலோரம் உள்ள மலையாளிகள் விழித்து கொண்டனர். வியாபாரிகளும், படித்த பட்டதாரிகளும் அதிகமானோர் அரபு நாட்டை குறி வைத்து குடியேறினர். அரபிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய மலையாளிகளின் சேவையே போதுமானதாக இருந்தது. கன ரக இயந்திரங்கள் குறைந்த காலமது அந்த கால கட்டத்தில் அதிகமான தொழிலாளிகள் தேவைப்பட்டனர். சளைக்காது வேலை பார்க்க நம் தமிழர்களே தகுதியானவர்கள். தேவைகள் முடிந்த பின்னர் சக்கையாய் தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணத்தில் நம்மவர்களை அதிகமாக வேலைக்கு அழைத்தனர். ஏஜெண்டுகள் மூலம் அன்று பம்பாய் என்று அழைக்கப்பட்ட மும்பைக்கு அழைத்து செல்ல பட்டு அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தலைமை ஏஜென்டிடம் அணி வகுத்து காண்பிக்க பட்டு பின்னர் அரபியிடம் அழைக்க பட்டு அவர் சம்மதம் கிடைத்த பின்னர் விசா ரெடியாக ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்பர்.

  sitthikநம்மவரும் கனவோடு காத்திருப்பர்…
  [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]
  ‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  Source : http://nijampage.blogspot.in/2013/06/blog-post_29.html

  Advertisements
   
 • Tags: , ,

  One response to “அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ !

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: