RSS

பேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மறைவு

19 Aug

1000344_508517355893665_1781131873_nபேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மறைவு

ஈடுசெய்துவிடக் கூடியது அல்ல.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்…பேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மறைவு

தந்தை பெரியார் அவர்களின் தாக்கம் வரலாறுகளைப் புரட்டிப்போட்டதன் தொடக்கம்;புதிய வரலாறுகளின் படைப்பாக்கம் என்பனவற்றை திராவிட இனமும் தமிழ்கூறும் நல்லுகமும் இந்தியாவும் மறந்துவிட முடியாது.ஐம்பதுகளின் தொடக்கத்தில் என் ஆசிரரியத் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு வாழ்வில் முதன்முதலாக
​-​
சிறுவனாய் இருந்த நான்,ஒரு பெருந்தலைவர் அதுவும் புரட்சிக்காரர் ஆன பெரியார் ஈ.வே.ரா அவர்களின் சிறப்புக் கூட்டத்திற்குப் போனது இன்னமும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.பின்னர் வயதும் அறிவும் வளர வளர அவர் பெரியார் மட்டுமல்ல தந்தை பெ
​ரி​
யார் என்பதை உணர்ந்தேன்.அவரை நிறைய உள்வாங்கி வளர்ந்தேன்.அவர் தொண்டு செய்து பழுத்த பழமாகி காலமான போது அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஊரிலிருந்து சென்னை வந்தேன்.

 • அரசினர் தோட்டத்தில் அவருடைய உடல் பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டபோது எல்லாரையும்போல நானும் கண்கலங்கினேன்.அவருடைய இழப்பு குறித்த எத்தனையோ சிந்தனைகள் எனக்கு வந்து போயின.அவற்றுள் முதன்மையானது,”ஐயா இஸ்லாத்தை ஏற்காமல் இவ்வுலகைவிட்டுப் போகிறாரே”என்பதுதான்.ஏனென்றால் அவர் வாழ்வில் சில தடைவைகளாவது ”நான் முஸ்லிமாகத்தான் இறப்பேன்” என்று சொன்னதால் எனக்கு அந்த எதிர்பார்ப்பு மிகவும் இருந்தது;அது அவருக்கு மிகவும் தகுதியானது என்ற நம்பிக்கையும் இருந்தது;அதில் ஐயா காலம் கடத்துவது குறித்துக் கூறிவந்த காரணங்களையும் நான் அறிந்திருந்தேன்.

  முன்னதாக வைக்கம் போராட்டத்தை ஒட்டி அவர் செய்துவந்த புரட்சியில் ஒரு திருப்பு முனையாக சிலகாலம் அவர் மக்களை இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கச் சொல்லி ஏவினார் என்பது இன்று பலருடைய கவனத்திலும் இருக்க வாய்ப்பில்லை.அவ்வாறு அவருடைய உணர்த்துதலால்,ஊக்குவிப்பால் பலர் இஸ்லாமாகி நல்ல முஸ்லிம்களாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்பது இலைமறை காய் போல் இருந்துவரும் பெரிய செய்தி.

  பெரியார் விதைத்த வித்துகள் முன்பின்னாக முளைத்துக்கொண்டே இருக்கின்றன.அந்த வித்துகள் விளைத்த முத்துகளில் ஒன்றுதான் பெரியார் தாசன் -பின்னர் பேராசிரியர் டாகடர் அப்துல்லாஹ் அவர்கள்!

  அவருடைய கடுமையான உடல் நலக்குறைவு நமக்கு வருத்தமளித்தது;துஆ செய்தோம்.கடந்த ரமலானில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்ய எண்ணி முயன்றபோதுதான் அவருடைய உடல் நலம் ‘சீர்யஸாக’க் குன்றிப்போனதை அறிந்து வருந்தினேன்.இன்று நாம் அவரை இழந்துவிட்டோம்.

  என்றாலும் பெரியாருக்கு வெளிப்படையாகக் கிடைக்காத நல்வாய்ப்பு பெரியார் தாசனாக இருந்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுக்கு மிகவும் சிறப்பாகவே கிடைத்தது.
  ​அல்ஹம்துலில்லாஹ்!

  ​அறிவுலகுக்கும்,அழைப்புப் பணிக்கும் அவர் ஆற்றிய பணிகளால் என்றும் நினைவுகூரப்படுவார் என்பதில் ஐயமில்லை.அதுவே அவருக்குக் காலமெல்லாம் கிடைத்துவரக் கூடிய துஆ.

  வல்ல அல்லாஹ்,அளவற்ற அருளாளனான அல்லாஹ் தன் அடியாராகி வாழ்ந்து மறைந்த நம் சகோதரரான பேரா.அப்துல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுமைப் பேறுகளையும் வழங்குவானாக.அவரை இழந்து வாடும் அனைவருக்கும் அழகிய பொறுமையைத் தந்து அருள்வானாக…..


  —ஏம்பல் தஜம்முல் முகம்மது.​

  Regards & Wassalam.

  Yours,

  Yembal Thajammul Mohammad

  ———————————————————————————–
  அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு:
  அறிவுக் கருவூலத்தை இழந்தோம்!
  ———————————————————–
  ஆளூர் ஷாநவாஸ்
  ——————————–
  doctor abdullah
  அப்துல்லாஹ் பெரியார்தாசன்
  ———————————
  சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி – சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971 இல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து பரிணமித்தார்.

  சாதிக்க வேண்டும் என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ வேண்டும் என்ற வேட்கையும், அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன் வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக் கண்டித்தும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார். அதற்காக அவர் கையிலெடுத்த கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு.

  எழுத்திலிருந்து தமது சமூகப் பயணத்தைத் தொடங்கிய அவர், 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மற்றவர்களைப் போல் அல்லாமல் எதையுமே வேறுபடுத்திப் பார்த்துப் பழகிய அவர், தமது எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டினார். எழுத்தில் மட்டுமின்றி சொற்பொழிவுகளிலும் தம் அபாரத் திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார்.

  பெரியார் பிரசவித்த பகுத்தறிவு வீச்சும், மார்க்சிய தத்துவங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அம்பேத்கரின் சமூகப் புரட்சியும் அவரை ஆர்ப்பரிக்கச் செய்தது. தத்துவங்களை படித்துப் படித்துப் பேசினார். தமது உரை வீச்சின் மூலம் மடமைக்கு அடிகொடுத்தார். சமூகக் கொடுமைகளைக் கொன்றொழித்தார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார் தாசனாக உருமாறினார்.

  தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியார் தாசனின் பேச்சு ஒலித்தது. அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா,தா ய்லாந்து,ஐக்கிய அரபு அமீரகம்,மலேசியா,சிங்கப்பூர் என பெரியார் தாசனின் குரல் உலகெங்கும் பரவியது.

  பெரியாரைப் பற்றியும், அவர் வகுத்துக் கொடுத்த நெறிகளைப் பற்றியும் ஓர் மாற்றுப் பார்வையை முன்வைத்தார் பெரியார் தாசன். பெரியாரின் மறுபக்கம் அவரால் தான் வெளிப்பட்டது.

  ஆக்ரோஷமும், கோபமும் பெரியார் தாசனிடம் நிறைந்து காணப் பட்டாலும், இயல்பாக அவரிடமிருந்து பொங்கியெழும் நகைச்சுவை அலை அனைவரையும் நனைத்து விடும். சமூகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நகைச்சுவை ததும்ப அவர் வருணிக்கும் போது கலகலப்பும், சிரிப்பலையும் பற்றிப் பரவுகிறது.

  பெரியார் தாசன் என்றால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற அடையாளங்களோடு சிறந்த நடிகர் என்ற சிறப்பும் சேர்ந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘கருத்தம்மா’ எனும் திரைப்படத்தில், படிப்பறியா பட்டிக்காட்டு மொக்கையனாகத் தோன்றி, சமூக அவலங்களை துல்லியமாகப் பதிவு செய்தார், பெரியார் தாசன். தாம் நடித்த முதல் படத்திலேயே இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

  மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். தோல்வி பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் வாடி வதங்கும் இளையோருக்கும், பிரச்சனைப் புயலில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கும் சிகிச்சைத் தந்து தீர்வைச் சொன்னார்.

  இந்துவாகச் சாகமாட்டேன் என்று சூளுரைத்து இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தத்தைத் தழுவிய அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார் தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துக்களைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.

  ‘தம்மோடு வாதம் புரிந்து எவரும் வெல்ல முடியாது’ எனும் அளவுக்கு பலரையும் மிரள வைத்தவர் பெரியார் தாசன். இந்து மதத்தின் தலைமையகமாகவும், இந்துக்களின் ஆன்மீக குருவாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார் தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். இந்துத்துவத் தத்துவங்களை ஆழ்ந்து உள்வாங்கி அவற்றை சரளமாக எடுத்தியம்பும் பெரியார் தாசனின் திறமைக்கு முன் இந்துமத சாமியார்களும், வீரத் துறவிகளும் திகைத்து நின்றனர்.

  ‘பெரியார் தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டே, பெரியாரைப் போலவே யாருக்கும் தாசனாக இருக்க சம்மதிக்காதவர் பெரியார் தாசன்’ என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞரின் கூற்றைப் போலவே, எவருக்கும் அடிமையாகாமல் சுயமரியாதைச் சுடராக ஒளிர்ந்த பெரியார் தாசன், 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இறைவனின் அடிமையாக இஸ்லாத்தில் இணைந்தார்.

  இஸ்லாமியராக மாறிய பின் அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். ஓயாத பயணங்களை மேற்கொண்டார். உடல்நலனைப் பற்றி கவலையே படாமல் ஊர் ஊராய் சுற்றினார். நுரையீரல் தொற்று நோய் தம்மை தாக்கியிருப்பதைக் கூட கவனிக்காமல் பயணங்களைத் தொடர்ந்தார். இயல்பாக இயங்க முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்தவரை பார்ப்பதற்காகச் சென்ற போது, சிறப்புப் பிரிவுக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என மறுத்தது மருத்துவமனை நிர்வாகம். உடனே படுக்கையிலிருந்து வெளியேறிய அப்துல்லாஹ் அவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேண்டீனில் அமர்ந்து நீண்ட நேரம் எம்மோடு உரையாடினார். விரைவிலேயே நோயிலிருந்து மீண்டு விடுவேன் என்றும், சமூகப் பணிக்கு மீண்டும் வருவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், அவர் மீண்டு வரவே இல்லை.

  2001 ஆம் ஆண்டிலிருந்தே அவரை நான் நெருக்கமாக அறிவேன். அவரிடம் மணிக்கணக்கில் உரையாடிய மிகச் சிலரில் நான் ஒருவன். அவரை அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை நேர்காணல்கள் செய்துள்ளேன்.

  ஒவ்வொருமுறையும் அவரை சந்திப்பதற்காக பச்சையப்பன் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள கேண்டீனில் அமர்ந்தே பேசுவோம். கடைசியாக அவரிடம் மருத்துவமனை கேண்டீனில் அமர்ந்துதான் பேசினேன்.

  இனி எங்குமே அவருடன் பேச முடியாது!

  Ajman Museum 12th Feb 2008தகவல் தந்தவர்
  Muduvai Hidayath
  ===================================================================================
  வருந்தத் தக்க செய்தி .

  கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மனோதத்துவ மருத்துவர் என்ற பல துறைகளிலும் புகழ் பெற்ற மக்களுக்கு சேவை செய்த பெரியார் தாசன் என்ற Dr. அப்துல்லாஹ் அவர்கள் இறைவன் நாட்டப்படி இறந்த செய்தி அனைவருக்கும் ஆற்ற முடியாத துயரத்தை தந்தாலும் அனைத்தும் இறைவன் நாடப்படிதான் நடக்கும் என்ற மனதோடு நாம் நம் சகோதரரான பேரா.அப்துல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுமைப் பேறுகளையும் வழங்குவானாக என்று அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சுவோம் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் அழகிய பொறுமையைத் தந்து அருள்வானாக…..

  இந்த இறப்பு செய்தியை தொலைகாட்சிகளும் , மற்ற மீடியாக்களும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது மிகவும் வேதனையானது .

  பொதுவாக செயல்படும் தொலைக்காட்சியும் மற்ற மீடியாக்களும் உருவாக நாம் முயற்சி செய்ய வேண்டும்

  Anbudenமுஹம்மது அலி ஜின்னா

  Advertisements
   
 • 2 Comments

  Posted by on August 19, 2013 in 1

   

  Tags: ,

  2 responses to “பேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மறைவு

  1. abkaleel

   August 19, 2013 at 10:16 am

   பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

   நாடறிந்த அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பிரபல மனோதத்துவ நிபுணருமான பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இன்று திங்கட்கிழமை (19.08.2013) அதிகாலை 1:30 மணியளவில் உடல் நலக் குறைவு காரணமாக தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.

   தன்னுடைய நீண்டகால நாத்திக+புத்தமதப் பயணத்தின் இறுதியில் தன்னையும் இவ்வுலகையும் படைத்தவனைக் கண்டுகொண்ட பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், “கருத்தம்மா” என்ற பெண்சிசுக் கொலையை மையப்படுத்தி எடுத்திருந்த திரைப்படத்தின் மூலமும் தமிழக மக்களிடையே பிரபலமானவராவார். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்து தனது பெயரையே நாத்திகச் சிந்தனையாளரான பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை இணைத்துக் கொண்டு, ‘பெரியார்தாசன்’ ஆக வாழ்ந்தவர்.

   சமூக சிந்தனைக் கருத்துகளைப் பரப்புவதில் முன்னணியில் நின்ற அவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தைப் பற்றி, கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்த பெரியார்தாசன், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 11ந் தேதி (வியாழக்கிழமை) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு, தன்பெயரை “படைத்தவனுக்கு அடிமை” என்ற பொருள்படும் “அப்துல்லாஹ்” என்று மாற்றிக் கொண்டார்.

   இஸ்லாத்தை ஏற்ற பிறகு தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இஸ்லாமியர்கள் தங்கள் அமைப்பின் சார்பாக சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டார்.

   இந்நிலையில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் உடல் நலிவுற்று சென்னை சோளிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…

   30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு K-Tic பள்ளிவாசலில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேராசிரியர் அவர்கள் கலந்து கொண்டு “முஸ்லிம்களிடம் இவ்வுலகம் எதிர்பார்ப்பது என்ன?” என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரைரையாற்றிய நிகழ்வுகள் இன்றும் நினைவுகளில் நிழலாடுகின்றன.

   எல்லாம் வல்ல அல்லாஹ் பேராசிரியர் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்’ எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்’ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

   உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

   நன்றி! வஸ்ஸலாம்.

   அன்புடன்….

   பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
   அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,
   பொதுச் செயலாளர்
   மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
   குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
   துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
   மின்னஞ்சல்கள்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com / ktic.kuwait@yahoo.com
   இணையதளம்: http://www.k-tic.com
   யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
   கூகுள் குழுமம்: https://groups.google.com/q8tic

    

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: