RSS

அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ ! [ பகுதி 3 ]

31 Aug

adirai news - nijam pageஒப்பந்தம் அடிப்படையில் வேலைக்கு சென்ற நம்மவர்களில்… கம்பெனியின் நிலவரம், நிர்வாகிகளின் மனநிலை அறிந்து நல்ல முறையில் வேலை பார்ப்பவர்களும் உண்டு. அதிகமானோர் வெள்ளாந்தியாய் காலம் செல்ல செல்ல ஊர் சென்று குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரே சிந்தையில் நிர்வாகத்திடம் ஊர் செல்வதை பற்றி தகவல் கூறாமல் தானே முடிவெடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் பொருள் சேர்த்து அத்துடன் ஊர் செல்ல வேண்டும் என்ற ஆவலையும் சேர்த்து தனது முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள்.

இந்த நிலை நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாக செலவினம் பற்றிய சிந்தனையில் தந்திரமான நிபந்தனைகள் வைப்பார்கள். மூன்று வருடம் ஒப்பந்தந்தம் முடிந்து விட்டது இப்போதே ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் உனக்கு திரும்பி வரும் விசா கிடையாது. இன்னும் ஒரு வருடம் காத்திருந்தால் விசா புதுப்பித்து தருகிறோம் என்பார்கள்.

 • நம்மவரின் மனநிலை நன்றாக அறிந்தே இந்த நிபந்தனை. ஆசையாய் வாங்கி வைத்த பொருள் அது மனைவி மக்களிடம் கொடுத்து அவர்கள் மகிழ நாம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

  இப்படி ஊருக்கு செல்ல முற்படும் அப்பாவி ! ஒரு பயணி எவ்வளவு கிலோ கொண்டு செல்ல வேண்டும் என்பதை அறியா அவர்கள் புறப்படும் போது விமான நிலையத்தில் விலை மதிப்பற்ற பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் கட்டி சோகமாய் ஊருக்கு பயணம் மேற்கொள்வார்கள். நேரடியாக பம்பாய் வந்து இறங்கிய அவர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகளால் கொடுக்கப்படும் தொல்லை மிகவும் பரிதாபமானது.

  சுங்க பரிசோதனை என்ற பெயரில் நீண்ட தூர பயணத்தில் வந்த பயணியை குற்றவாளியை நிறுத்தி விசாரிப்பது போல என்ன கொண்டு வந்துள்ளாய் என கேட்டு அவர் கொண்டு வந்த உடமைகளை தனி தனியாய் சோதனை செய்து அதில் தனக்கு பிடித்த பொருளை அடாவடியாக எடுத்து கொண்டு உனது பொருளுக்கு சுங்க தீர்வையாக பத்தாயிரம் போடுகிறேன் என்பார் ! அப்பாவி தொழிலாளி செய்வது அறியாது திகைப்பார். அவ்வளவு பணத்திற்கு எங்கு செல்வேன் என்பார் உடனே இரக்கம் காட்டுவது போல் சரி சரி என்னிடம் ஆயிரம் தந்து விட்டு அங்கு ஆயிரம் கட்டி விட்டுச்செல் என்பார்.

  அப்பாடா ! தப்பித்தோம் !? என்ற மன நிலையில் அப்படியே செய்வார் நம்மவர் பிறகு பம்பாயிலிருந்து உள்நாட்டு விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து அவர் தம் வீட்டிற்குச்செல்வார்.

  ஊர் வந்த அவர் ஒரு மஹாராஜாவை போல கவனிக்கப்படுவார். காலாறா நடப்போம் என்று வீதி உலா, புது உடை, கையில் பல பலக்கும் கடிகாரம், ஊட்டமாக உணவுண்டு குளிரூட்டப்பட்ட அறையில் உறங்கியதால் பார்க்க நிறமாக காட்சி அளிப்பார். அரபு நாட்டு வாழ்க்கை பற்றி கேட்க சுற்றி வாலிபக்கூட்டம்.

  வளைகுடா வாழ்கை பற்றிய முதல் தகவல் அறிக்கை ! அடுத்த தலை முறையினரின் ஆவலை தூண்டும் தகவலாய் அமைந்தது. நன்றாக படித்தவரின் நிலை காணாமல் கிணற்று தவளையாய் இருந்து ஊர்வந்த அப்பாவி பளபளக்கும் நிலை பல அப்பாவிகளை உசுப்பேற்றிய தகவலாய் அமைந்ததின் விளைவு பல ஆயிரக்கனக்கான் நம்மவர்கள் பாஸ்போர்ட் எடுத்ததும் வளைகுடா !

  செல்ல எத்தனித்தும் அதில் பலர் வெற்றி கண்டதை பற்றி அடுத்த வாரம் காண்போம்.

  குறிப்பு :
  * 1972..களில் ..சுதேசி கொள்கை காரணமாக வெளி நாட்டு பொருகள் அதிகம் கொண்டு வர கட்டுபாடு இருந்தது அது சுங்க துறை அதிகாரிகளுக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தந்தது.

  * ஒரு ஒப்பந்த தொழிலாளி ஒன்வே விசா கொடுத்து ஊருக்கு அனுப்பப்பட்டால், மீண்டும் ஒரு நபர் தேவைப்படுவார் அதற்கு விசா விண்ணப்பித்து இந்தியாவில் விசாவை விற்று பணம் பார்த்து விடுவர்.

  * வளைகுடாவில் வேலை பார்ப்பவர்களின் பணங்கள் பொருளாகி பணம் விரயமாகுவதும் மன உளைச்சலினை எற்படுத்துவதுமாய் அமைகிறது. பணம் சம்பாதிக்க வந்தவர்கள் பணத்தினை ஊருக்கு அனுப்புவதில் கவனமாக இருத்தல் நலம்.

  * ஊருக்கு செல்வதில் நாட்டம் கொள்வதை, கொஞ்சம் தாமதப்படுத்தினால் நலம்
  [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]

  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  source : http://nijampage.blogspot.in/2013/07/3.html

  Advertisements
   
 • Tags: , , , ,

  One response to “அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ ! [ பகுதி 3 ]

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: