RSS

சம்பந்தமில்லாத மறு புறத்திலிருந்து அபரிமிதமான பரிவு.

02 Sep

1186937_515081888570545_386181088_nவழியில் கிடக்கும் ஒரு சிறு கல் காலை இடறி விடுவதுண்டு.
அது காயத்தையும் உண்டாக்கும்
மரணத்தையும் உண்டாக்கும்.
சிறு கல்தானே என்ற அலட்சியம்
பெரிய இழப்பை ஏற்படுத்தி விடுகிறது!
குடும்பமும் அப்படித்தான் !
சின்னச் சின்னப் பிரச்சனைகளை
அப்போதே பேசித் தீர்த்து விட்டால்
பிரச்சினைகள் அத்தோடு முடிந்து விடுகிறது.
அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால்
அவை பூதாகரமாய் வளர்ந்து
என்றைக்கோ ஒருநாள்
வாழ்க்கைக்கே உலை வைத்து விடுகிறது !
எப்படி ?
கணவன் மனைவிக்கு இடையே சிறு ஊடல்.

  • சாப்பாட்டில் எதோ குறை சொன்னான் என்பதற்காக மனைவி கோபித்துக் கொண்டாள். அடுத்தநாள் கணவனுக்கு உணவு பரிமாறாமல் ஒதுங்கிக் கொண்டு பணிப்பெண்ணிடம் சொல்லி பரிமாற வைத்தாள். கணவன் பலமுறை சமாதானம் செய்து பார்த்தான். அவளுடைய வறட்டு கவுரவம் சமாதானத்தை ஏற்க மறுத்தது.
    அதனால் … பணிப்பெண்ணின் பரிமாறலே தொடர்ந்தது… எப்போதும் பணிப் பெண்ணோடு அதிகம் பேசாத கணவன் இப்போது பேச ஆரம்பித்தான். அது அவளுக்கும் பிடித்திருந்தது. தனக்கு விருப்பமான உணவுகளை சமைக்கச் சொன்னான். அவள் முன்னை விட ருசியாக சமைத்தாள். அவளே பரிமாறினாள். அவன் பாராட்டில் மனம் மகிழ்ந்தாள். அவன் அருகாமை அவளுக்குள் புது எண்ணங்களை விதைத்தது. தன்னை அலங்கரித்துக் கொண்டாள். அவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்தாள்.
    இத்தனைக்கும் பிடிவாதத்தை விட்டு விடாத மனைவி மற்ற விஷயங்களிலும் அவனை உதாசீனம் செய்தாள்.
    ஒரு புறம் அன்பு கிடைக்க வேண்டிய இடத்தில் வெறுப்பு
    சம்பந்தமில்லாத மறு புறத்திலிருந்து அபரிமிதமான பரிவு.
    கல்யாணம் ஆகாத சுமாரான பணிப்பெண் அவன் கண்களுக்கு அழகாகத் தெரிந்தாள்..
    அவள் மனதின் அழகில் அவன் வசமிழந்தான்
    பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ள
    ஈருடல் ஒருநாள் ஓருடலாய் இணைந்தது
    உள்ளுக்குள் ஓருயிரும் வளர்ந்தது !
    கிளைமேக்ஸ்…
    தறுதலையாய் திமிரெடுத்து கணவனை அலட்சியம் செய்தவள் விவாகவிலக்குப் பெற்று வீட்டை விட்டு வெளியேறினாள்..
    வேலை செய்ய வந்த வேலைக்காரி
    வீட்டுக்காரியானாள் !
    ஆகையினால் மானிடரே….
    கல்லோ சிறு சொல்லோ…
    எதுவானாலும்
    கவனம் கொள்ளுங்கள் !
    வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளுங்கள் !

    Abu Haashimaஆக்கம் அபூஹாஷிமா வாவர்

     
  • Tags: ,

    One response to “சம்பந்தமில்லாத மறு புறத்திலிருந்து அபரிமிதமான பரிவு.

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: