RSS

பிரயாண அனுபவம்

05 Sep

பிரயாண அனுபவம்

சென்னையிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் ரோம் நகர விமான தளத்தில் தரை இறங்கியது, அதில் எனக்கு மட்டும் அங்கு ஒரு நாள் தங்குவதற்கும் ரோம் நகரத்திற்குள் செல்லவும் தற்கால அனுமதித் தாள் (Temporary visa)கொடுத்ததோடு, ரோம் நகர விமான தளத்தில் வேலை செய்யும் ஒரு அதிகாரி நான் தங்குவதற்கு வசதி செய்துக் கொடுக்க தனது காரில் அழைத்துக் கொண்டு போனார். நான் அவருடன் பேசிக் கொண்டிருப்பதனை அவர் விரும்பியதால் ‘விடுதிக்குப் பிறகு போகலாம் அதற்குள் ரோம் நகரத்தினை உங்களுக்கு காட்ட விரும்புகின்றேன்’ எனக் கூறி தொடர்ந்தார் .அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது . நான் இந்தியா (பம்பாய் ,சென்னை) ,மலேசியா,சிலோன் மற்றும் பல நாடுகளில் எனது பணியை செய்துள்ளேன் ஆனால் சென்னை,மலேசியா மற்றும் சிலோன் நாடுகளில் பணி செய்த காலங்கள் எனக்கு மிகவும் மன நிறைவைத் தந்தது அதற்கு முக்கிய காரணம் அங்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது அதிலும் முஸ்லிம்கள் மார்க்கத்தை பேணுவதில் மிகவும் அக்கறையுடன் இருப்பதுடன் குடும்ப உறவையும் சிறப்பாக அமைத்துக் கொள்கின்றார்கள்’ என பெருமிதத்துடன் சொல்லி விட்டு மேலும் தொடர்ந்தார். ‘ஆனால் அந்த குடும்ப வாழ்க்கையை அதிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை வளர்ந்த மேலை நாடுகளில் பார்க்க முடியாது.அந்த நாடுகளில் ஒரு சில ஆண்டுகள் நாங்கள் வாழ்ந்தபோது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே ஒரு பிடித்தம் உண்டாகியது’ என்று மகிழ்வோடு சொன்னார். ‘இதனை எனது மனைவி பலரிடம் சொல்லி பெருமையடைகின்றாள். அத்துடன் தனது வாரிசுகளுக்கு அந்த நாட்டிலிருந்துதான் திருமண தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புகின்றாள்’ என அவர் சொன்னபோது நான் ஒரு இஸ்லாமியனாகவும் மற்றும் இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன். இந்த குடும்ப உறவின் நேசம் தொடர நாம் முயல்வோம்.
.

 • ஹாங்காங் விமான ஒடும்பாதும் பாதை மிகவும் குறைவான தூரம். உலகில் மிகவும் செயல்பாடு விமானதளத்தில் இதுவும் முக்கிய இடம் வகிக்கின்றது நான் சைகொனிலிருந்து ஹாங்காங் வந்த போது விமானம் இறங்கும்போது அதனை அனுபவித்தேன் .

  பிரயாணத்தில் மற்றொரு அனுபவம் வானத்தில் விமானம் பறக்கும் போது விமானம் குலுங்கியது .விமானத்தில் பல உணவு பொருள்கள் சிதறி கொட்டின . எனது உடல் சில நொடி மேல் நோக்கி இறங்கியது . காற்றில்லா வெற்றிடத்தில் விமானம் பறக்க முடியாதாம் .மரணத்தைவிட மரண பயம் மிகவும் கொடியது .அனுபவித்தேன்
  (That was about old Hong Kong’s Kai Tak airport. In 1997 when British leave Hong Kong they build a very big airport for ten billion dollars. They build it at Lantau island full of mountains and green forests. There are three hanging bridges as big as San Fransisco bridge to connect main Hong Kong. Because the British want to spend the reserve money for people and leave with high reputation. That’s why Hong Kong still loves the British rule.

  In fact, during the closing time for few weeks Hong Kong people bring their children to show the historic old airport. The above photo was taken at that time.)

  ஹாங்காங் ஏர்போர்ட் ரொம்ப அழகு.. இரு பக்கமும் மலையும், கடலும் சூழ்ந்த அழகான லேண்ட்ஸ்கேப்.. ரொம்ப சுத்தம்..

  vlcsnap-2011-05-25-11h03m12s200நான் பல நாடுகள் பார்த்து வர சுற்றுலா சென்றபோது பாரிசிலிருந்து லண்டனிலிருந்து செல்வதற்கு விசா வாங்க பாரிசில் உள்ள லண்டன் விசா வாங்க லண்டன் விசா தரும் அலுவலகம் சென்றேன் . விசாவிற்கான தொகையை முதலிலேயே கட்டி விட வேண்டும் .விசா கிடைக்க வில்லையென்றால் கட்டிய பணத்தை திரும்பப் பெற முடியாது என்பதனை அறிவிப்புப் பலகையில் குறிப்பு எழுதப்பட்டிருந்தது.

  எனது முறை வந்ததும் நான் விசா வழங்கும் அதிகாரியை சந்தித்தேன் .
  அவர் கேட்ட முதல் கேள்வி ” எதற்காக லண்டன் போகிறீர்கள்”
  ‘லண்டன் சுற்றிப் பார்க்க செல்கின்றேன்’ எனது பதில்.
  ‘ உங்கள் நாட்டில் இந்தியாவிலேயே விசா வாங்கி வந்திருக்கலாமே’
  ‘நான் பாரிஸ் வந்தது எனது உறவினரைப் பார்க்க ஆனால் பாரிஸ் வந்த பின்தான் லண்டன் அருகில் இருப்பதால் லண்டனையும் போய் பார்ப்போம் என்ற ஆர்வம் வந்தது’ .
  அவர்களது எண்ணம் லண்டன் வருபவர்கள் அங்கேயே வேலை செய்ய தங்கி விடுவார்கள் என்பதுதான்.

  அவர் சொன்னார் ‘ உங்களுக்கு இங்கு விசா தர முடியாது’
  “விசா தர முடியாததற்கு முறையான காரணம் சொல்லுங்கள்” ‘ நான் காமென்வெல்த் நாட்டைச் சார்ந்தவன் .உங்கள் நாட்டு சரிதத்தை முழுமையாக படிதிருக்கின்றேன் அதுவும் நான் சட்டம் பயிலும்போது உங்கள் நாட்டு அரசியல் சட்டம் படித்துள்ளேன். நான் உங்கள் நாடு வந்து எங்கள் பணத்தை செலவு செய்கிறோம் அது உங்களுக்கு அந்நிய செலாவணியை ஈட்டுத் தருகின்றது அது உங்களுக்கு ஆதாயம்தானே’ என்றேன் .
  உங்கள் பாஸ்போர்ட் திருச்சியில் வழங்கப்பட்டுள்ளது .(1-Sep 86)அதற்கு ஒரு காரணம் உள்ளது அதனால் உங்களுக்கு தர இயலாது’ என்றார் .(31-10-90)

  சரி அப்படியென்றால் நான் கட்டிய பணத்தினை திருப்பத் தாருங்கள் என்றேன்.
  அவர் மறுத்தார் , நான் தொடர்ந்து அவரிடம் வாதம் செய்ய மேல் அதிகாரி அம்பாசிடரிடம் அவர் என்னை அனுப்பினார் .

  நாட்டு தூதர் (ambassador) மேல் அதிகாரி நான் சொல்லும் காரணங்களை முறையாகக் கேட்டுக் கொண்டு அவர் சொன்னார் . பலர் திருச்சியில் தவறாக முகவரி கொடுத்து லண்டன் வந்து விட்டார்கள் . அதனால் உங்களைப் பற்றிய சரியான விவரம் திருச்சி பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகத்தில் அறிந்துக் கொண்டு மூன்று நாட்கள் கழித்து விசா தருகின்றோம் அதுவரை பொறுத்திருங்கள்’. என்றார் ,
  நான் சொன்னேன் ‘அதுவரை என்னால் பொறுத்திருக்க முடியாது, நீங்கள் விசாவுக்காக கட்டிய பணத்தை திருப்பித் தாருங்கள் .நான் தரும் பாரிஸ் முகவரிக்கு தெரிவியுங்கள் நான் இங்கு பாரிசில் இருந்தால் மூன்று நாட்கள் கழித்து விசாவுக்கு பணம் கட்டி விசாவுக்கு அனுமதி கேட்கின்றேன் என்றேன்,
  எனது முறையான வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டு சிறப்பு அனுமதியாக நான் கட்டிய பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி ஆணையிட்டார் . இந்நிகழ்வு எனக்கு மனநிறைவை தந்ததுடன் மன தைரியத்தையும் தந்தது .

  பாரிசில் இருக்கும்போது ஒரு மாத பிரயாணமாக பாரிசிலிருந்து காம்பியா நாடு சென்றிருந்தேன். எனது முந்தைய பாஸ்போர்ட்களை( முதலில் வாங்கிய பாஸ்போர்ட்August 67) தவறுதலாக எனது நண்பர் வீட்டில் காம்பியாவில் விட்டு வந்து விட்டேன் .அதில் பல நாடுகள் சென்ற விபரமும் இருந்தது .அது எனக்கு விசா கிடைக்க உதவியிருக்கும்.

  இம்மாதிரி நம் நாட்டில் நடந்தால் இங்குள்ள அதிகாரிகள் பொறுமை காட்டுவார்களா? அந்த காலம் எப்பொழுது வரும்!

  நாம் வெளிநாடு செல்லும்போது கையில் அந்நிய செலாவணி காசோலை வைத்திருப்பது மிகவும் உதவும் .நாம் உண்மையாக நடந்துக்கொண்டால் அது நமக்கு மன தைரியத்தை தரும்vlcsnap-2011-05-25-20h07m33s186

  Picture 177நடந்த நிகழ்வு
  நான் ஜப்பான் சென்றிருந்தபோது ஒரு டேக்சியில் டோக்கியோ டவர் பார்க்கச் சென்றேன் . பிரயானதிர்க்கான டேக்சி மீட்டர் தொகையை கொடுத்தேன் .டேக்சி ஓட்டுனர் பாதித் தொகையை திருப்பித் தந்தார் . அவர் தவறுதலாக வழியை மாற்றி வந்து விட்டதால் ‘உண்மையாக டோக்கியோ டவர் வர எவ்வளவு ஆகுமோ அது போதும்’ என்பதாக சொன்னார்.
  இந்த நேர்மை நம் தமிழ்நாட்டிலும் வர வேண்டுமென அப்பொழுதே விரும்பினேன்

  ~aeda103063421c8a5163b21e600படத்தில் ஜப்பானிய பெண் பக்கம் நான் .(ஆடாத ஆட்டமென்ன )இப்படத்தை படத்தில் அமெரிக்கர் படம் எடுத்து அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைத்து என்னையும் அமெரிக்கா வர அழைப்பு கொடுத்தார்

  பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது!

  Pretty Paris (part-5)

  Advertisements
   
 • Tags: , , , , ,

  3 responses to “பிரயாண அனுபவம்

  1. திண்டுக்கல் தனபாலன்

   September 5, 2013 at 4:03 am

   நடந்த நிகழ்வு அருமை ஐயா…

    
  2. கவியாழி கண்ணதாசன்

   September 28, 2013 at 2:08 am

   நான் ஒரு இஸ்லாமியனாகவும் மற்றும் இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன்.//உண்மை

    

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: