RSS

அசந்த உறக்கத்திலும் கேட்கும்படி…

08 Sep

KavithaikaloduBuhariஇன்று நான்
அவனைச் சந்தித்தேன்

கண்டுகொள்ளாதவர்களின் முன்
கதறி அழுவதே
வாடிக்கையாகிவிட்டது
அவனுக்கு

காரியம் கருதி
கண் கசக்குபவர்களைக்
கண்டுகொள்ளாமல் இருக்கவும்
தெரியவில்லை

மரணத்தைச் சுமப்பவன்தான்
மனிதன்

இவனோ
நொடிக்கு நூறு என்று
தன்னுடைய பிணங்களையே
உயிரின் எலும்புகளும்
முறிய முறிய சுமந்து திரிகிறான்

என்ன பிழை
என்று அவனை இழுத்து
கண்கள் குவித்து உற்றுப் பார்த்தேன்

  • அங்கே
    துடியாய்த் துடித்துக்கொண்டிருந்த
    பஞ்சு நெஞ்சம் ஒன்று
    கனிந்துருகி வழிவதைக் கண்டேன்

    அட
    இதுவா சேதி?

    எடுத்து எறியடா
    அந்த
    வெட்கமிலா இதயத்தை
    என்று
    ஒரு வார்த்தையை
    ஆயிரம் முறை
    அசந்த உறக்கத்திலும் கேட்கும்படி
    அழுத்திச் சொல்லிவிட்டு
    வந்தேன்
    http://anbudanbuhari.blogspot.in/2013/09/blog-post_6.html
    நினைத்துப் பார் உன்னையே !

    Advertisements
     
  • Tags: , ,

    2 responses to “அசந்த உறக்கத்திலும் கேட்கும்படி…

    1. திண்டுக்கல் தனபாலன்

      September 8, 2013 at 3:31 am

      அருமை ஐயா…

       

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: