RSS

அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ கப்பலுக்கு போன மச்சான் ] [ பகுதி 4]

08 Sep

adirai news - nijam pageஒப்பந்தம் அடிப்படையில் சென்ற நம்மவர்கள் ஒப்பந்த காலம் முடியும் வரை அந்த கம்பெனியிலேயே வேலை செய்ய வேண்டும். சில கம்பெனிகளுக்கு தொடர்ந்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அது போன்ற தருணத்தில் வேலைபார்க்கும் தொழிலாளிகளுக்கு தொடந்து வேலை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

மூன்று வருடத்திற்கு முன்பே ஊருக்கு செல்ல முடிவெடுத்து ஊர் சென்றவர்கள் ஐந்தாறு மாதம் பவனி வந்து பழைய நிலைமைக்கே திரும்பி வேலை இல்லாமல் கஷ்ட்டமான சூழலுக்கு தள்ளப்பட்டு அவதியுறும் நிலை வளைகுடாவில் தங்கி விடுப்பு எடுக்காமல் வேலை பார்த்து வரும் மற்றவர்களுக்கு தெரிய வரும். நான்கு ஐந்து ஆண்டு வரை விடுப்பு கேட்காமலேயே வேலை பார்த்து வருவர். இதனை கண்டும் காணமல் இருக்கும் இரக்கமற்ற நிர்வாகமும் உண்டு. சில நல்ல நிர்வாகமும் உண்டு.

வேலைக்கு சென்ற நேரங்களில் நல்ல அறிவிப்புடன் நிர்வாக அதிகாரிகள் வருவார்கள். ஊர் சென்று வர விமான டிக்கெட் மற்றும் விடுமுறை நாட்களுக்கு ஊதியமும் வழங்கி மகிழ்விப்பார்கள்.

ஊர் வந்து மீண்டும் வளைகுடா பயணம் மேற்கொள்ளும் இவர்களின் அனுபவம் நல்ல வழி காட்டுதலாக அமையும். ஊர் வந்து வளைகுடா பயணம் பற்றி விசாரிபவர்களுக்கு நல்ல தகவல்களை கொடுப்பார்கள் அதன் பிறகு முயற்சி செய்பபவர்கள் நல்லநிலை அடைந்தவர்களும் உண்டு.

 • ஓவ்வொரு அனுபவங்களுக்கு முன்னர் பல பரிட்சைகள் அதன் வெற்றி, தோல்விகளே ! வருங்கால சந்ததியினர்களுக்கு பாடம். வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மையால் உயிரிழப்பு ஏற்படும் நிகழவுகளும் உண்டு. தாய் மண்ணை பிரிந்து தன்சொந்தங்களுக்காக உழைக்க வந்த இடத்தில உயிரை இழந்த பரிதாப சம்பவங்களும் உண்டு.

  கப்பலில் வேலை பார்க்கும் போது சரக்கு பெட்டகம் இறக்கும்போது சமிக்கைகள் புரியாது. பல டன் பாரமுள்ள சரக்கு பெட்டகம் விழுந்து நசுங்கியவர்களும் உண்டு. குளிரூட்டப்பட்டு பனிக்கட்டிகலாய் வரும் பெருட்கள் உள்ள பெட்டகங்களில் அடைபட்டு பனிக்கட்டியாய் மாண்டவர்களும் உண்டு. இதே போன்று வாகன விபத்தில் மாண்டவர்கள் பலபேர் !

  கட்டிய கணவன் பல ஆண்டுகள் கழித்து பணம் காசுகளோடு வருவான் என்று காத்திருக்கும் பல பெண்கள் பரிதாபமாய் விதவையாய் வதங்கிய சரித்திரங்களும் உண்டு. கேலி கிண்டலால் வாழ்வை பறிகொடுத்த சம்பவங்களும் உண்டு. ஒவ்வொன்றாய் வரும் வாரங்களில் பார்போம்…

  1975 லிருந்து 1980 வரை ஊடகங்கள் நவீனம் அடைந்திராத நிலை. நம்மவரின் வளைகுடா வாழ்கை பற்றி, கணவன் மனைவி பிரிவுகள் பற்றி வெளி உலகுக்கு காட்டிடவில்லை பத்திரிகைகள் கூட இதில் அதிகம் கவனம் செலுத்த வில்லை என்பது வேதனையான ஒன்று.

  மூன்று மாதமே மணமான சூழலில் வளைகுடா பயணம் மேற்கொண்டு. இரண்டு மூன்று வருடம் பிரிந்து வாழும் தருவாயில் கணவன் மனைவிக்கிடையே கடிதமே வடிகால். இந்த சூழலை மைய்யப்படுத்தும் விதமாக பாடல்கள் வெளியாயின

  அன்றைய சூழலில் மக்கள் இசை பதிவுகளை விரும்பி கேட்பார்கள் தொலை காட்சி, வீடியோ போன்றவை இல்லாத காலகட்டம் வானொலி, பதிவு நாடா எனப்படும் டேப் ரிக்கார்டர் மூலம் பாடல்கள் கேட்பார்கள் ..இஸ்லாமிய பாடல்கள் பாடும் பாடர்களில் நாகூர் ஹனீபா, காயல் சேக்முகமது இருவரும் பிரபலம். வளைகுடா வாழ்க்கை பற்றி சேக் முகம்மது அவர்கள் பாடிய பாடலைக் கேட்டுப் பாருங்கள் தலைவன் தலைவி பிரிவின் வலி தெரியும்…
  [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]
  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  http://nijampage.blogspot.in/2013/07/4.html

  Advertisements
   
 • Tags: , , ,

  One response to “அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ கப்பலுக்கு போன மச்சான் ] [ பகுதி 4]

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: