RSS

ஒரு ஒட்டகம் கிடைத்தது

09 Sep

Trust in Allahஆசையோடு வளர்த்தார்கள் !
அக்கம் பக்கத்து புல்லும்
நல்ல உணவும்
கொட்டி கொடுத்ததால்
ஒட்டகம் கொழுத்தது !
ஊரே கூடி
ஒருநாள் விருந்துண்ண
ஆசைப்பட்டு
ஒட்டகத்தை அறுத்தது !
என்ன ஆச்சரியம் !!!!
ஒட்டகத்தின் வழிந்தோடிய
குருதியிலிருந்து
குட்டி ஒட்டகங்கள்
பல
உயிர்த்தெழுந்தன !
சந்தோசத்தில்
குதித்தது கூட்டம் !
அறுத்தால்
பெருகும் பிராணிகளைத் தேடி
ஊரே
அலைய ஆரம்பித்தது !

  • சில ஜோடி மாடுகளும்
    ஆடுகளும்
    எங்கேயோ
    மேய்ந்து கொண்டிருந்தன !
    அவற்றை இழுத்து வந்து
    வீட்டில் வளர்த்தார்கள் !
    மற்றொரு
    விஷேச நாளில்
    மாடு ஒன்றை
    எதிர்பார்ப்போடு அறுத்தார்கள் !
    ஆஹா… என்ன ஆச்சரியம் ..
    அறுபட்ட மாட்டின்
    கழுத்திலிருந்து
    ரத்தம் வழிய வழிய
    புத்துப்புது மாடுகள்
    பொலிவோடு பிறந்தன !
    ஊருக்குள் உற்சாகம்
    கரை புரண்டது !
    இப்போது …
    ஆட்டை அறுக்கும் ஆசை
    அவர்களுக்கு !
    ஒரு நாள் காலைப் பொழுதில்
    அதன் கழுத்துக்கும்
    கத்தி வைத்தார்கள் !
    அவர்களின் நம்பிக்கை
    வீண் போகவில்லை!
    ஆடுகள்
    மந்தை மந்தையாய்
    வெளியேறிற்று !
    எங்கே பார்த்தாலும்
    ஒட்டகங்களும்
    மாடுகளும்
    ஆடுகளும்
    அலைய ஆரம்பித்தன !
    மேய்ச்சல் நிலமெல்லாம்
    நிறைந்து
    மேய்வதற்கு இடமில்லாமல்
    ஒன்றையொன்று
    கொம்புகளால் முட்டியும்
    மிதித்தும்
    சண்டையிட ஆரம்பித்தன !
    மேய்ப்பர்களின்
    கட்டுப்பாட்டை உடைத்து
    சில கறுப்பு ஆடுகள்
    ஆவேசமாய்
    குதித்து ஓடி
    பயிர்களை துவம்சம் செய்தன !
    மாமிச சுவைக்காக
    ஆடுமாடு மேய்த்த மனிதர்களுக்கு
    மாமிசமே வெறுத்துப்போக
    பிராணிகளின்
    பலம் கூடியது
    கவலையைத் தந்தது !
    வீட்டுத் தளைகளை
    தகர்த்தெறிந்து
    வெளியே வந்து
    மைதானங்களில்
    மேய்ந்தவைகள்
    இப்போது
    மண்டபங்களிலும்
    அரங்குகளிலும்
    ஆலயங்களிலும்
    வழிபாட்டுத் தளங்களிலும்
    நுழைந்து
    ஆக்கிரமித்துக் கொண்டன !
    கட்டுக்குள் இருக்க வேண்டியவைகள்
    கட்டுப்பாட்டை மீறி பெருகியதால்
    தங்கள் கழுத்துக்களையே
    இப்போது
    அறுக்க ஆரம்பித்தார்கள்
    மனிதர்கள் !
    Abu Haashimaby: Abu Haashima Vaver

     
  • Tags: , , ,

    One response to “ஒரு ஒட்டகம் கிடைத்தது

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: