RSS

நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் பாராட்டுவோம் ………..!

13 Sep

1234539_507284199365251_222137030_nநடிகை ஹன்ஸிகா,நேற்று இரவு இவர் மும்பையில்இருந்து விமானம் மூலம்படப்பிடிப்புக்காக மதுரைக்கு வந்தார். அவருடன் அவர் தாயார் மோனாவும் வந்தார்.
மோனா, ஒரு டாக்டர். மதுரை விமான நிலையத்தில் இருவரும்
இறங்கியபோது, அவர்களை வரவேற்ற தயாரிப்பு நிர்வாகி, இப்போதைக்கு படப்பிடிப்பு இல்லை.ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல, ஹன்சிகாவும்,
அவருடைய தாயார் மோனாவும் காரில் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில், ரோட்டின் எதிர்புறத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரைப்பார்த்த ஹன்சிகா மோத்வானி,
காரை நிறுத்தும்படி கூறினார்.
ஆனால் எதற்கு வம்பு?
என்று காரை நிறுத்தாமல்
சென்றார் தயாரிப்பு நிர்வாகி.
ஆனால் ஹன்சிகா உரத்த குரலில்
சத்தம்
போட்டு காரை நிறுத்தும்படி கூறினார்.

  • பின்னர் காரை நிறுத்தியதும்
    ஹன்சிகாவும், அவருடைய தாயாரும்
    ரோட்டை கடந்து எதிர்புறம்
    சென்றார்கள். ரத்த வெள்ளத்தில்
    உயிருக்கு போராடிக்
    கொண்டிருந்தவரை ஹன்சிகாவின்
    தாயார் பரிசோதித்தார்.
    அவருக்கு நாடித்துடிப்பு இருந்ததால்,
    உடனடியாக 108
    ஆம்புலன்சுக்கு போன் செய்தார்.
    அதற்குள் அங்கே கூட்டம்
    கூடியது. ஹன்சிகாவை அடையாளம்
    கண்டு கொண்டார்கள். ஆம்புலன்ஸ்
    வந்ததும்,
    அடிபட்டு கிடந்தவரை தூக்கி ஆம்புலன்சுக்குள்
    கிடத்தினார்கள். ஹன்சிகாவின்
    தாயார் ஆம்புலன்சில்
    ஏறிக்கொண்டார். அந்த
    ஆம்புலன்சை, ஹன்சிகா காரில்
    பின் தொடர்ந்தார். அருகில் உள்ள
    ஒரு மருத்துவமனையின் அவசர
    சிகிச்சை பிரிவில், அந்த
    முதியவரை அனுமதித்தார்கள்.
    அவருடைய சட்டைப்பையில் இருந்த
    செல்போன் மூலம்
    உறவினர்களுக்கு தகவல்
    தெரிவித்தார்கள்.
    அடிபட்டு கிடந்தவரின்
    மனைவி அலறியடித்துக்
    கொண்டு வந்தார்.
    ஹன்சிகாவுக்கும், அவருடைய
    தாயாருக்கும்
    நன்றி தெரிவித்தார்.
    அவருக்கு ஆறுதல் கூறிய
    ஹன்சிகா கணிசமான பண உதவியும்
    செய்துவிட்டு,
    அங்கிருந்து புறப்பட்டார். நல்ல மனம் வாழ்க ……!

    369101_100000688909408_1908313038_q1117644_100002510260704_1587477007_qதகவல் தந்தவர்கள் Rafiudeen Abdul Hameed Skm Habibulla

     
  • Tags: , ,

    One response to “நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் பாராட்டுவோம் ………..!

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: