RSS

தன்னம்பிக்கை கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

29 Sep

1380053_656564551029607_2063540999_nவாழ்க்கை வசந்தமாகும் !

வெற்றி சில நிமிடங்களில் கிட்டிட
வாழ்க்கை திரைப்படம் அன்று !
பயிற்சி செய் ! முயற்சி செய் !
தோல்வி கிடைத்தால்
காரணத்தை ஆராய்ந்தால்
அடுத்தப் போட்டியில்
அதனைத் தவிர்த்திடு !
வெற்றி வசமாகும் !
வாழ்க்கை வசந்தமாகும் !

நினைத்தது கிட்டும் !
என்னால் முடியும் !
என்றே முயன்றால் !
முயன்றது முடியும் !
என்னால் முடியாது !
என்றே நினைத்தால் !
முயன்றது முடியாது !
யாரை நீ நம்பாவிட்டாலும் !
உன்னை நீ நம்பு !
நினைத்தது கிட்டும் !

 • இனிதே பயன்படுத்து !
  பொழுதைப் போக்குவதல்ல
  பொன்னான வாழ்க்கை !
  பொழுதைத் திட்டமிடு !
  பழுது நீங்கும் !
  ஒவ்வொரு வினாடியும்
  ஒவ்வொரு வைரம் !
  போன பொழுது
  திரும்ப வராது !
  இருக்கும் பொழுதை
  இனிதே பயன்படுத்து !

  நெஞ்சில் நிறுத்து !
  வென்றவர்களின் வரலாறு படித்திடு !
  வென்று நீயும் வரலாறு படைத்திடு !
  சாதித்தவர்களின் சாதனை அறிந்திடு !
  சாதித்து சாதனை புரிந்திடு !
  உண்டு உறங்கி வாழ்வதல்ல வாழ்க்கை !
  கண்டு இறங்கி சாதித்து வாழ்ந்திடு !
  எதிர்மறை சிந்தனைகளை
  அகராதியிலிருந்து அகற்று !
  நேர் மறை சிந்தனைகளை
  நெஞ்சில் நிறுத்து !

  வெற்றி வசமாகும் !
  வெந்த சோறு தின்று !
  விதி வந்தால் சாவேன் !
  என்று சொல்வதை நிறுத்து !
  மதியால் சாதித்து வாழ் !
  மண்ணுலகம் போற்றிட வாழ் !
  சராசரியாக காலம் கழிக்காதே !
  சாதிக்கப் பிறந்தவன் நீ !
  வித்தியாசமாக சிந்தித்து !
  விவேகமாக செயல்படு !
  வெற்றி வசமாகும் !

  உலகம் வரவேற்கும் !
  தாழ்வு மனப்பான்மை உன்னை
  தாழ்த்தி விடும் !
  உயர்வாக எண்ணு ! உன்னை நீ
  உயர்வாக எண்ணு !
  உன்னுள் திறமைகள்
  ஓராயிரம் உண்டு !
  இருக்கும் திறமைகளை
  இனிதே பயன்படுத்து !
  உன்னை என்றும்
  உலகம் வரவேற்கும் !
  – கவிஞர் இரா .இரவி !
  ——————————————————————

  திறந்தே இருக்கும் !

  வாய்ப்பு உன் வாசல் வந்து
  கதவைத் தட்டுமென்று காத்திருந்து
  பொன்னான பொழுதை வீணாக்காதே !
  வாய்ப்பு எனும் வாசல் தேடி
  நீ சென்றால் கதவைத் தட்ட வேண்டாம் !
  திறந்தே இருக்கும் !

  ———————————————————————

  மன நிலையைப் பெற்றிடு !

  ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு
  தோற்றதும் துவண்டிடும் மன நிலை விடு !
  வெற்றி கிட்டும்வரை முயற்சி செய்யும்
  மன நிலையைப் பெற்றிடு !

  கவிஞர் இரா .இரவி !
  1011455_618947788124617_212516009_n

  இரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் கவிமலர் என்ற இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். இந்த இணையத்தில் கவிதைகள், ஹைக்கூ (குறுங்கவிதைகள்), நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. மதுரையில் சுற்றுலாத் துறையில் பணி புரிந்து வருகிறார்.

  வெளிவந்த நூல
  கவிதைச் சாரல் 1997
  ஹைக்கூ கவிதைகள் 1998
  விழிகளில் ஹைக்கூ 2003
  உள்ளத்தில் ஹைக்கூ 2004
  என்னவள் 2005
  நெஞ்சத்தில் ஹைக்கூ 2005
  கவிதை அல்ல விதை 2007
  இதயத்தில் ஹைக்கூ 2007

  சிறப்புக்கள்

  26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.
  .
  இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்
  .
  இவரது சில ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது
  .
  சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.
  .
  இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து “புத்தாயிரம் “தமிழ் ஹைக்கூ என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார்.
  இவரது இணையத்தளக் கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார்.
  .
  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார்
  .
  கவிஞர் இரா.இரவியின் கவிதை நூல்களை மாற்றுத்திறனாளி திரு.பிரகாசம் M Phil. ஆய்வு செய்து வருகிறார்.

  Advertisements
   
 • Tags: ,

  3 responses to “தன்னம்பிக்கை கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

  1. திண்டுக்கல் தனபாலன்

   September 29, 2013 at 2:09 pm

   கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

    
  2. RRavi Ravi

   September 29, 2013 at 2:35 pm

   நன்றி
   அன்புடன்
   கவிஞர் இரா .இரவி

   http://www.eraeravi.com
   http://www.kavimalar.com
   http://www.eraeravi.blogspot.com
   http://www.tamilthottam.in/f16-forum
   http://eluthu.com/user/index.php?user=eraeravi
   http://www.noolulagam.com/product/?pid=6802#response*

   இறந்த பின்னும்
   இயற்கையை ரசிக்க
   கண் தானம் !

    

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: