RSS

Monthly Archives: October 2013

அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ வாசகரின் தொலைபேசி ஆதங்கம் ] [பகுதி 11 ]

adirai news - nijam pageவளைகுடா வாழ்க்கை தொடர் எழுதத்துவங்கிய நாள் முதல் தொலைபேசி மூலமும் சில அன்பர்கள் நேரிலும் தனது மனதில் உள்ள ஆதங்கங்களை கூறுகின்ற போது இன்னும் பல படிப்பினை உள்ள சம்பவங்களை பதிய வேண்டும் என்ற வேட்கை எண்ணுள்ளே எழுகிறது.

மனைவி ஒரு மந்திரி என்ற தலைப்பை படித்த வாசக அன்பர் ஒருவர் இந்த ஆக்கம் பத்து வருடத்திற்கு முன் வந்திருந்தால் நான் ஒரு கோடீஸ்வரன். வெல்லந்தியாய் உறவுகளுக்கு அள்ளி கொடுத்து விட்டு ஒன்றுமில்லாமல் தெருவில் நிற்கிறேன் என்றார்.

 • கணவனின் வருமானத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது. தர்ம பிரபைப்போல அள்ளிக்கொடுத்து விட்டு வயதான காலத்தில் உறவுகள் பாராமுகமாக இருப்பதை சொல்லி காட்டினார்.

  சம்பாதிக்கும் பணத்தை நன்றாக ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள். வாழ்க்கையின் உற்ற உறவான மனைவி கூட உன்னை கட்டி என்ன சுகம் கண்டேன் ? என்று அவர் மீதே பழியைபோட்டது தான் அபாண்டம்.

  வளைகுடா நாட்டில் பல காலம் பொருளீட்டிய ஒருவர் தனது கட்டுபாட்டில் பணத்தை வைத்து கொள்ளாமல் மனைவிக்கே அனுப்பி வைத்தார். மனைவியோ தன் உற்றார் உறவினருக்கு அள்ளி கொடுத்து விட்டார். ஊர் திரும்பிய அவர் தனது வாழ்வை கழிக்க ஏதாவது தொழில் செய்ய பணம் தேவைப்பட்டது. பணம் கிடைக்க வில்லை உறவுகளின் அன்பும் ஆதரவும் கிடைக்க வில்லை. இன்று அவர் மன நோயாளி போல ஊரில் உலா வருகிறார்.

  முதலீடு அவசியம் என்பதை அறியா அவரின் வாழ்வு சூன்யமாய் போனதுதான் மிச்சம். மனைவி கெட்டிக்காரராக இருந்தால் அவரிடம் பணத்தினை ஒப்படைப்பதில் தவறில்லை. எதிர்கால திட்டம் அறியாதவராக இருந்தால் நீங்களே முதலீட்டில் இறங்குங்கள்.

  உழைப்பை உறிஞ்சும் உறவுகள் !? இதைப்பற்றி அடுத்த வாரம் கூறுகிறேன்.
  [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]
  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  http://nijampage.blogspot.in/2013/09/11.html

  Advertisements
   
 • Tags:

  வரதட்சணை !

  வர தட்சணையெனும் நோய் பரவி
  தரணியெங்கும் மரண ஓலம்
  பிச்சையிலும் கேடுகெட்ட
  பிணம் தின்னிக் கழுகுகளாய்
  பிடிங்கித் தின்னும் கூட்டம் ஒன்று
  பதுங்கிக் கிடக்குது பாரிலின்று

  பகல் கனவாய் ஆனது வாழ்வு
  பாவி பெற்ற பைங்கிளி மகளே
  நகலெடுத்த புகைப்படமாய்
  நிறம் மாறிப் போனாயே
  நிம்மதியைத் தொலைத்தாயே

 • வரதட்சணைக்கொடிய நோயாம்
  வறியோரின் உயிரைக்குடிக்கும்
  நச்சு விஷச்செடியாம்
  நாடெங்கும் பரவியதே
  நலிந்தோரை வாட்டியதே

  கன்னியரை சந்தைப் பொருளாய்
  காணுகின்ற மானிடர் கூட்டம்
  முதிர்க் கன்னித் தனி ரகமாய்
  முகமறியா அரக்கனிடம்
  சிறை பட்டுப் போயினரே
  சிதைபட்ட வாழ்க்கையாகி

  இளம் கன்னி மணமுடிக்க
  இயன்றவரை தட்சித்து
  இல்வாழ்வில் இணைந்த பின்னே
  பொல்வாழ்வாய் ஆனதுவே
  பொல்லாதவனின் கையில் சிக்கி

  விண்ணுக்கும் உன் பெயரிடுவான்
  வியந்து உலகம் பார்க்க வேண்டி
  கண்ணுக்குள் வைத்திருப்பான்
  கழுத்தில் மின்னும் தங்கம் நாடி

  பெண்ணுக்குப் புகழுரையாம்
  பேரு பெற்ற தலைவர் அரங்கில்
  மண்ணுக்கும் பெண் அடிமை
  மனிதன் வகுத்த கோட்பாட்டில்

  51mmx51mmஅதிரை மெய்சா
  http://nijampage.blogspot.ae/2013/10/blog-post_9384.html

  குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 17-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ…

   
 • Tags:

  டாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்

  CHENNAI-STALதீபாவளிக்கு கிடைக்கும் போனஸ் பணத்தில் ஏசி வாங்க வேண்டும், டி.வி வாங்க வேண்டும், பிரிட்ஜ் வாங்க வேண்டும் என திட்டமிடுவது சகஜம். அப்படி காத்திருந்து காத்திருந்து வாங்கும் பொருள் நமக்கு தலைவலியாய் மாறி விடக் கூடாது. அதற்கு கொஞ்சம் விஷயங்களை நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

  1. எந்தப் பொருள் வாங்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்தப் பொருளைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள். அதே பொருள் அதே வசதிகளுடன் வேறு பிராண்டில் என்ன விலை என்பதைப் பாருங்கள். எந்தக் கம்பெனி நம்பிக்கையானது, எது அதிக கேரண்டி தருகிறது என்பதையெல்லாம் அறிந்தபின் முடிவெடுங்கள்.

 • 2. இந்த விலையில் தான் பொருள் என முதலிலேயே முடிவு செய்ய வேண்டியது முக்கியம். அப்போது தான் அந்த விலையில் கிடைக்கக் கூடிய நல்ல பொருள் எது என உங்கள் தேடுதல் கூர்மையாகும். தேவையில்லாமல் ஆசைப்பட்டு விழா நாளில் மனவருத்தம் கொள்ள வேண்டியிருக்காது.

  3. பொருளை வாங்கும் முன் அந்த பொருள் குறித்த விமர்சனங்கள், அலசல்கள் போன்றவற்றை கவனமாய் படியுங்கள். விளம்பரங்களைப் பார்த்து உடனே வாங்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்காதீர்கள். இணையத்தில் துழாவினால் அக்கு வேறு ஆணி வேறாக தகவல்களை அள்ளித் தருவார்கள்.

  4. வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, ஏசி போன்றவற்றை “பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறதே” என வாங்காதீர்கள். எப்படி அதைப் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை பேர் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை முறை பயன்படுத்தப் போகிறீர்கள். எந்த அறையில் அதை வைக்கப் போகிறீர்கள் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

  5. “மின்சாரத்தைச் சேமிக்கும்” என நட்சத்திர அடையாளம் போட்டிருக்கும் பொருட்களை வாங்குவது நல்லது. அவை உங்களுடைய செலவையும் குறைக்கும். நாட்டுக்கும் நன்மை பயக்கும். ஒவ்வொரு யூனிட் மின்சாரத்தை நீங்கள் சேமிக்கும் போதும் நாட்டுக்காய் ஒரு யூனிட் மின்சாரத்தைத் தயாராக்குகிறீர்கள் என்பது தான் பொருள்.

  6. பொருள் வாங்கும் போது கேரண்டி அட்டை, வாரண்டி அட்டை, மேனுவல், ரசீதுகள் போன்ற அனைத்தையும் கவனமாய் கேட்டு வாங்குங்கள்.

  7. பில்லைச் சரிபார்ப்பதும், கேரண்டி அட்டையில் சீல், கையொப்பம் எல்லாம் இடப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பதும் அவசியம். வாங்கும் போது கடைக்காரர்கள் உங்களிடம் அன்பாய் சிரித்துப் பேசுவார்கள். பழுது என்று போனால் வேறு விதமாக உங்களிடம் நடந்து கொள்வார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

  8. பொருளை வாங்கி வீட்டிக் கொண்டு வைத்து விட்டு எப்படி இயக்குவது என கற்றுக் கொள்ள வேண்டாம். கடையிலேயே இயக்குவது குறித்த அனைத்து தகவல்களையும் ஒன்று விடாமல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக ரிமோட் சமாச்சாரங்களை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

  9. வாங்கும் போது மேனுவலைப் பார்த்து பொருளுடன் எல்லா இணை பொருட்களும் தரப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சில நிறுவனங்கள் எக்ஸ்டா இணைப்புகளை இலவசமாகக் கொடுப்பார்கள். மேனுவலைப் பார்த்தால் தான் அது தெரியும்.

  10. சர்வீஸ் செண்டர் எங்கே இருக்கிறது ? ஒரு வருடத்துக்கான சர்வீஸ் ஒப்பந்தம் இட்டால் எவ்வளவு பணம் ஆகும் ? இந்த நிறுவனத்தின் சர்வீஸ் தரம் எப்படி இருக்கிறது ? சர்வீஸ் விலை எப்படி ? என்பதை முழுமையாய் அறிந்து கொள்ளுங்கள். பொருள் வாங்கியபின் நமக்குத் தேவை தரமான சர்வீஸ் தான். “சர்வீஸ் நல்லாயில்லை” என்றால் பொருளை வாங்காமல் இருப்பது விவேகம்.

  578558_521293627901662_45723309_nby Joseph Xavier Dasaian
  (சேவியர் )

   
 • Tags: , , , , , ,

  வாழ்வில் இனிய சுமை !

  1001400_10201618332804728_2086163629_nவாழ்வில் இனிய சுமை குழந்தைகளை சுமப்பது. தன் குழந்தையை சுமப்பது மகிழ்வு தந்தாலும் அதைவிட பேரின்பம் தன் பேரக் குழந்தைகளை சுமப்பது. அதிலும் மகள் வழி பேரக் குழந்தைகளை சுமப்பது மிகவும் மகிழ்வு தரக் கூடியது. இவைகள் சுமைகள் அல்ல .நமக்கு மன மகிழ்வு தரக் கூடிய மாமருந்து, அனுபவித்து பார்க்கும்போது இதன் அருமை தெரியும். குழந்தை வயிற்றில் இருக்கும் போது எந்த தாயும் அதனை சுமையாக நினைப்பதில்லை. அந்த தாயின் முகத்தின் அழகே உயர்வானது. அந்த நேரத்தில் அவள் எந்த சிரமங்களையும் மகிழ்வாக ஏற்றுக் கொள்வாள். தாய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்குழந்தையை பாதுகாத்து வயிற்றில் சுமக்கிறாள். இதுதான் தாய்மையின் மகிழ்மை. அந்த தாயை எந்த காலத்திலும் நாம் சுமையாக கருத முடியுமா! அவளின்றி நாம் ஏங்கே? ஆனால் பெற்ற தாயையே ஒரு பாரமாக நினைப்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை.

 • “நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.
  நூல் : புஹாரி

  ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.

  அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
  ஆதாரம்: புகாரி

  “ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள்.

  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)
  ஆதாரம் : புகாரி

  Abu Hurairah (RA) said: A man came to Rasulullah (SAW) and said, “Oh Rasulullah, who of mankind is most entitled to the best of my companionship?”. Rasulullah replied, “Your mother”. He said: “Then who?” Rasulullah said: “Your mother”. He said: “Then who?”. Rasulullah said: “Your mother”. He said : “Then who?”. Rasulullah said : “Your father”. ( Bukhari, Muslim )
  http://anbudanseasons.blogspot.in/2013/03/blog-post.html

   
 • பணம் இங்கே !? உறவுகள் எங்கே !?

  mother3இவ்வுலக வாழ்க்கையில் நம்மிடம் எவ்வளவு பொருளாதாரம் இருப்பினும் உண்மையான அன்பு பாசத்துடன் இருக்கும் சொந்தங்கள் உறவுகள் குடும்பங்கள் என்று இல்லாதவரை மனதில் நிம்மதி இல்லாத ஒரு நரக வாழ்க்கையாகத்தான் இருக்க முடியும். பொருளாதாரம் என்பது நமது வாழ்வில் ஒரு பகுதியே அன்றி பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பொருளாதாரம் வறுமையை நீக்கி சுவிட்சமாக ஒரு குறிப்பிட்ட காலம் வாழ மட்டும் தான் உதவும். ஆனால் உண்மையான உறவுகளுடன் அன்பைப்பகிர்ந்து கொண்டு வாழ்நாள் முழுதும் கூடி வாழ்ந்து ஒற்றுமையுடன் இவ்வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ்ந்து அனுபவித்தால் அது போன்ற ஒரு இன்பத்தை மன சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு இன்புற்று இருக்கும்.

 • இன்றைய கால கட்டத்தில் மேற்ச சொன்னவைகளெல்லாம் நினைத்து கூட பார்க்கமுடியாமல் தூரத்து நிலாவாகி விடும்போல் இருக்கிறது. உண்மையான அன்பு பாசங்கள் மறைந்து இதெல்லாம் பகல் கனவாகி கொண்டிருக்கிறது. காரணம் மனிதன் காசு பணத்திற்கு அடிமையாகி அதற்க்கு கொடுக்கும் மரியாதை அன்பு பாசம் காட்டுபவர்களுக்கு கொடுப்பதில்லை என்பதே உண்மை.!

  இன்றைய மனிதன் இயன்றளவு முழுப்பொழுதும் காசுபணம் தேடுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறான்.அப்படியானால் அன்பு பாசங்களை பகிர்ந்து கொள்ளவோ, குடும்ப உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவோ நேரம் கிடைப்பதில்லை. இந்த ரீதியில் நமது மனநிலை பழகிப் போனால் அன்பு பாசம் எப்படி விரிவடையும்.? சொந்தங்கள் எப்படி உரிமையாக வந்து உறவு கொண்டாட முடியும்.?

  அடுத்தவேளை சோற்றிற்கு ஏங்கி நிற்கும் அன்றாடங்காய்ச்சிகளின் நிம்மதி சந்தோசம் கூட கோடிகோடியாய் வைத்து இருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. காரணம் இங்கு பணம் காசிற்கு கொடுக்கப்படும் மரியாதையை விட உறவுகளுக்கு கொடுக்கப்படும் அன்பு பாசம் மரியாதை மேலோங்கி இருக்கிறது. எத்தனையோ கோடீஸ்வர சீமான்களை நாம் இவ்வுலகில் காண்கிறோம். அவர்கள் அளவுக்கதிகமான செல்வங்களையும் பண வசதிகளையும் பெற்றிருந்தும் மன நிம்மதியை பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை.

  இந்த உறவுகளின் தாக்கம் இப்போது புரியாது. ஒருநாள் வாலிப வயது மாறி வயோதிய நிலையை அடையும் போது அந்த தள்ளாத காலத்தில் தான் அந்த உறவுகளின் அருமை தெரியும். அப்போது காசு பணத்தை விட அவர்களின் அன்பும்,பாசமும்,பணிவிடையும் தான் மன நிம்மதியைத் தரும்.

  இன்று நம் கண் முன்பு எத்தனையோ பணக்கார முதியோர்களின் அவல நிலையை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.பணம் , சொத்துக்கள் என்றிருந்தும் பிடிவாதத் தாலும்,முன்கோபத்தாலும் உறவுகளை விட்டுப் பிரிந்த அவர்களை பாசமுடன் ஆதரிக்க உறவுகள் யாரும் முன்வருவதில்லை.அப்படியே இறக்கப்பட்டு முன்வந்தாலும் மனமுவந்து சேவைகள் செய்வதில்லை. பெயரளவுக்கும் சொத்தை அபகரிக்கும் குறிக்கோளை மனதில் வைத்தும் தான் பாசம் காட்டப் படுகிறது.

  காசு பணம் என்பது நிலையில்லாத ஒன்று. அது எப்போது யாரிடத்தில் சென்றடையும் என்று சொல்ல முடியாது. ஆனால் அன்பு பாசம் என்பது அப்படியல்ல. நாம் அழிந்த பின்னும் பேசப்படும் அழிவில்லா செல்வமாகும்.

  மனிதனிடத்தில் கருத்து வேறுபாடுகள் என்பது கார்த்திகை மாத மழை போல் வந்து போகக் கூடியது. அதை கால மெல்லாம் பகையாக்கிக் கொள்ளாமல் அன்பைப் பகிர்ந்து கொண்டு அனைவரிடத்திலும் ஒற்றுமையுடன் இருந்து மகிழ்ச்சியை தேடிக் கொள்வோம். மனிதன் தவறு செய்யக்க் கூடியவனே. அதே சமயம் தவறென்று தெரிந்ததும் அதைத் திருத்திக் கொள்வதில் தான் அங்கு அவன் முழு மனிதனாக நிறைந்து இருக்கிறான்.

  ஆகவே உறவுகளை ஊதாசினப் படுத்தாமல் காசு பணத்திற்கு கொடுக்கும் மரியாதையை உறவுகளுக்கும்,சொந்த பந்தங்களுக்கும் கொடுத்து உண்மையான அன்பு பாசங்களை உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு மன நிம்மதியுடன் வாழ்வோம் !
  51mmx51mmஅதிரை மெய்சா
  Source :http://nijampage.blogspot.ae/2013/10/blog-post_7039.html

   
 • Tags: , , ,

  அனுமதிக்கப்பட்ட வழியில் பொருளீட்டுவது

  அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘அனுமதிக்கப்பட்ட வழியில் பொருளீட்டுவது கடமையிலும் கடமையானதாகும்”.

  இதனை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமாயின், ஒரு முஸ்லிமின் மீது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற அடிப்படைக் கடமைகள் எவ்வாறு முதன்நிலைக் கடமைகளாக இருக்கின்றதோ அதனைப் போலவே, அனுமதிக்கப்பட்ட வழிகளில் பொருளீட்டுவதும் அதே போன்றதொரு கடமையானதாகும்.

  இந்த மிகச் சுருக்கமான நபிமொழியானது நமக்கு மிகத் தெளிவானதும் முக்கியமானதுமானதொரு செய்தியைத் தாங்கி நிற்கிறது. முதலாவதாக, இந்த உலக வாழ்க்கைக்கும் அல்லது சடவாத வாழ்க்கைக்கும் மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக்கி, இஸ்லாமிய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதைத் தெளிவாக்குகின்றது.

 • இன்றைக்கு மக்கள் இந்த விஷயத்தில் இஸ்லாத்தை விட்டும் எதிர்த்திசையில் நடைபோடுவதைப் பார்க்கின்றோம். ஒரு மனிதன் இந்த உலக வாழ்க்கையிலேயே மூழ்கி விடுவானாகில், அவனை அது ஆன்மீகப் பாதையை விட்டும் வெளியே கொண்டு போய் விட்டு விடும். இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருப்பவர்கள், தங்களது வாழ்க்கை இஸ்லாமியமயமாக வேண்டும் என்று விரும்புபவர்கள், இத்தகைய உலகாதாயப் போக்கிலிருந்து தங்களை விடுவிடுத்துக் கொள்ள வேண்டும். இதில் பிரச்னைகளும், கருத்துவேறுபாடுகளும் கூட உள்ளன? இந்த உலக வாழ்க்கையிலும் மற்றும் ஆன்மீகத்திலும் பங்கு கொள்வதன் மூலம் பிரச்னைகளைத் தீர்த்து விட முடியுமா? அல்லது இரண்டையும் விட்டு விடுவதா? அனைத்து மதங்களிலும் இதுவே மையப் பிரச்னையாக இருக்கின்றது, பலர் இரண்டையும் விட்டு விட்டு துறவறம் நோக்கிச் செல்வதையே தேர்ந்தெடுத்து, மனித இனத்திற்கு அதன் மூலம் முன்மாதிரி மிக்கவர்களாகத் திகழலாம் என்று கூறுவார்கள். இவ்வாறு செல்வது மனித நேயத்தையே இழக்கச் செய்து, அதனை விட்டும் அவர்களைத் தூர மாக்கி விடுவதை, நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு ஆன்மீகத்தின் மூலம் துறவறத்தைத் தேடிக் கொண்ட, இந்து மற்றும் கிறிஸ்தவ துறவிகளைப் பற்றிய கொடுமையான கதைகளைப் பற்றி நாம் அறிந்து வருகின்றோம்.

  இதன் காரணமாக, பலர் இன்றைக்கு உலகாதாய அல்லது சடவாத வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து அதில் லயித்து விடுவதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். இதற்கு இன்றைய மேற்குலகின் போக்கை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைக்கு இத்தகைய வாழ்க்கைப் போக்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதன் காரணமாக, அவர்களிடம் உடல் மற்றும் உள நோய்களும், மரணங்களும் அதிகரித்து வருவதானது, அவர்களுடைய வாழ்க்கைப் போக்கில் ஏதோ கோளாறு இருக்கின்றது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது.

  இந்த இரண்டு முரண்பாடான வாழ்க்கைப் போக்கிலிருந்து விலகி, இஸ்லாம் தெளிவான, நேரான வாழ்க்கைப் போக்கை காட்டுகின்றது. பொருளாதார வாழ்க்கையையும், ஆன்மீக வாழ்க்கையும் இணைத்தே வாழ வழிகாட்டுகின்றது. மனிதன் உண்மையிலேயே உலக ஆசாபாசங்கள் மற்றும் ஆன்மீகத் தேட்டம் நிறைந்தவன். இந்த இரண்டையும் அவனுக்கு மறுப்பதன் மூலம் அவனது பிரச்னைக்கான தீர்வு கிடைத்து விடாது, ஆனால் தனக்கு மட்டுமே அவை உரித்தானது என்ற சுயநலப் போக்கைத் தான் இஸ்லாம் தடை செய்கின்றது. செல்வங்கள் நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமே, அதுவே நம்முடைய வாழ்க்கையாகி விடாது. பிரச்னை என்பது செல்வத்தில் இல்லை, அதிலேயே தன்னை மூழ்கடித்து விடுவதிலேயே தான் இருக்கின்றது. வாழ்க்கையின் வளங்கள் ஒன்றும் மோசமானதல்ல. இதனைக் குர்ஆனை இவ்வாறு கூறுகின்றது ..

  அல்லாஹ் உங்களிடம் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக ஆக்கித் தந்த செல்வத்தை (4:5)

  ஒரு மனிதன் ஆகுமான வழிகளில் தேடிச் சேர்த்த செல்வதைப் பற்றி நபிமொழிகள் புகழ்ந்து கூறுகின்றன. செல்வத்தைச் சேர்க்க முயற்சிப்பதானது ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல, அது ஒரு ஆன்மீகக் கடமையும் கூட!

  ஆனால், நாம் தேடக் கூடிய செல்வங்கள் ஆகுமான வழியில் பெறக் கூடியவைகளாக இருக்க வேண்டும். இது மேற்கண்ட நபிமொழியின் இரண்டாவது பாகமாகும். பணத்தை மட்டும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பது மட்டும் நமது குறிக்கோள் அல்ல, மாறாக ஆகுமான வழியில் பணம் தேடுவதும் அதனை வளர்த்தெடுப்பதும் தான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இது மனித சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கையை இஸ்லாமியமயமாக்குதவற்காக வேண்டிய அடிப்படைத் திட்டமாகவும் இருக்கின்றது. அனைத்து வியாபாரங்களும் மற்றும் அது சார்ந்த யுக்திகளும் இந்த மனித சமுதாயத்திற்கு ஆகுமானதாக ஆகி விடுவதில்லை.

  வியாபாரத்தில் நல்லது எது மற்றும் கெட்டது எது என்பதை இன்றைக்கு இருக்கின்ற வியாபார ஜாம்பவான்கள் தீர்மானிக்கக் கூடியதல்ல. மனிதனது பொருளாதார வாழ்வில் நல்லது எது அல்லது கெட்டது எது என்பதையும், அது மட்டுமல்ல முழு வாழ்க்கைக்கும் எது நல்லது அல்லது எது கெட்டது என்பதையும் தீர்மானிக்கும் சக்தி ஒன்றிருக்கின்றது, அனைத்து உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் வல்ல சக்தியான அல்லாஹ் என்ற சக்தி மட்டும் தான் இதனைத் தீர்மானிக்க முடியும். ஒரு மனிதனது தனிப்பட்ட வாழ்விலும் மற்றும் கூட்டு வாழ்விலும், அவனது பொருளாதார வாழ்விலும், அதன் நடைமுறைகளிலும் இஸ்லாமியச் சட்டங்கள் அவனுக்கு முழுமையான வழிகாட்டுதல்களைக் காட்டுகின்றன, எனவே அத்தகைய சட்டங்களைத் தனிப்பட்ட முறையிலும் மற்றும் கூட்டுமுறையிலும் பின்பற்றுவது என்பது நம்மீது உள்ள கடமையாக இருக்கின்றது.

  இன்றைய உலகில் இருக்கின்ற நடைமுறைகளோடு இந்த இஸ்லாமியச் சட்டங்கள் மோதக் கூடிய சூழ்நிலைகள் எழலாம். உதாரணமாக, வட்டி, சூதாட்டம், மது, அபகரித்தல் போன்றவைகளை இஸ்லாம் தடை செய்திருக்கின்றது, இத்தகைய தடை செய்யப்பட்ட அம்சங்கள் எத்தகைய கவர்ச்சிகரமானதாக, செல்வ வளத்தைக் கொட்டிக் குவிக்கக் கூடியதாக இருப்பினும் சரியே, இதிலிருந்து முஸ்லிம்கள் முழுமையாக விலகி இருத்தல் வேண்டும். ஒரு இறைநம்பிக்கையாளருடைய இந்த பொருளாதாரப் போரட்ட வாழ்வானது, அந்தப் பொருளாதாரத்தைத் தேடுவது கூட மார்க்கக் கடமையாக இஸ்லாம் ஏன் ஆக்கி வைத்திருக்கின்றது என்பதை அவருக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கும். கூட்டு வாழ்வில் இதனைக் கடைபிடிக்கும் பொழுது, தனிப்பட்ட நபர்கள் இஸ்லாம் தடை செய்திருக்கின்ற வழிகளில் பொருளீட்டுவதன் மீதுள்ள மோகத்தைக் குறைப்பதோடு, அவர்களும் ஆகுமான வழிகளில் பொருளீட்டுவதற்குண்டான வழிகளை இலகுவாக்கி வைக்கும்.

  சில நேரங்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான கடமைகளில் உள்ள நடுநிலைப் போக்கிலிருந்து தவறி விடுகின்றோம். நம் மீதுள்ள முதல் நிலைக் கடமை என்னவெனில், தனிப்பட்ட ரீதியில் நாம் பொறுப்பாளிகள் என்பதை உணர்வது, மறுமை நாளிலே நம்முடைய வாழ்வைப் பற்றி நாம் தான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதையும் உணர்ந்து கொள்வது.

  அதே நேரம், இன்றைக்கு நம்முடைய காலத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களான ஊNN, உலக பன்னாட்டு நிதியம் (ஐஆகு), உலக வங்கி (றுழசடன டீயமெ) மற்றும் காட் (புயவவ) போன்றவற்றை தனிப்பட்ட நபரொருவர் எதிர்த்து, அதன் மூலம் ஆகுமான வழிகளில் பொருளீட்டக் கூடிய வாழ்க்கைக்கு சமூகத்தை இட்டுச் செல்ல இயலாது.

  வட்டியினைத் தவிர்ந்து வாழ்வதென்பது இன்றைக்கு இயலாத காரியமாக இருக்கின்றதே, ஏன்? அவை யாவும் மிகச் சிறந்த பொருளாதார வழிமுறை என்பதன் காரணமாக அவற்றைத் தவிர்க்க இயலாவில்லை என்பதை விட, அவை சமூகத்தில் வேர் பிடித்து வளர்ந்திருக்கின்றன என்பதே காரணமாகும்.

  நமது வீட்டினுள் ஊNN 24 மணி நேரமும் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கும் பொழுது, இஸ்லாமிய சமூக வாழ்வைக் கட்டி அமைப்பதென்பது எவ்வாறு? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் இஸ்லாமிய நாடுகளின் பட்ஜெட், மற்றும் வரி விதிப்புகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஹலால் மற்றும் ஹரமான வரி விதிப்புகள் பற்றிய பிரச்னைகளை அங்கு எவ்வாறு தீர்க்க இயலும்? (இஸ்லாமிய சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி, வரிவிதிப்பானது தேவையானதாகவும், காரணத்துடனும், பாகுபாடற்றதாகவும், செலுத்துவதற்கு இயலுமானதாகவும், மற்றும் வரியை வசூலிப்பதில் கடினம் காட்டாமலும் இருக்க வேண்டும். இல்லையென்றால், வரிவிதிப்பானது அநீதமானது மற்றும் ஹரமானது – தடை செய்யப்பட வேண்டியது, என்று கூறுகின்றார்கள்). தனிப்பட்ட ரீதியில் ஹராமான வழிகளில் ஈடுபடாமல் இருப்பது ஒவ்வொருவரின் மீதும் உள்ள கடமையாகவும், அவசியமானதாகவும் இருக்கின்றது, இன்னும் ஹராமான வழிகளில் ஒருவரை இட்டுச் செல்லக் கூடிய சக்திகளை எதிர்த்து போராடுவதும், அத்தகைய வழிமுறைகளை மாற்றி அமைப்பதற்கு முனைப்புக் காட்டுவதும் அவசியமாகும்.

  மூன்றாவதாக, ஹலாலான – ஆகுமான வழிகளில் சம்பாதிக்கின்றோம்.., சம்பாதிக்கின்றோம் என்று கூறிக் கொண்டு, மார்க்கம் அடிப்படைக் கடமைகளாக்கி வைத்திருக்கின்ற கடமைகளில் இருந்து அவரது அந்த வருமானம் அவரை கவனமற்றதாhக்கி விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய வருமானங்களை பெருக்கக் கூடிய நிறுவனங்கள் ஹலாலானவைகளாக இருந்தாலும் கூட, அவை அடிப்படைக் கடமைகளான தொழுகை, ஹஜ், நோன்பு போன்ற அடிப்டைக் கடமைகளில் இருந்து நம்மை மறக்கடிக்கச் செய்து விடக் கூடாது.

  இதனை நாம் நமது கவனத்தில் எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில், சில இஸ்லாமிய அமைப்புகள் அடிப்படையான வணக்க வழிபாடுகள் பற்றிக் கூறும் பொழுது, தவறிழைத்து விடுகின்றார்கள். தொழுகையை நிறைவேற்றுவது என்பது அவரது சொந்த கடமைகளை நிறைவேற்றி விடுதல் என்பதில் மட்டுமல்ல, இஸ்லாமிய சமூக வாழ்வினை – சமூக அமைப்பை அமைப்பதற்குண்டான தடைகளை அகற்றுவதற்குண்டான பயிற்சித் தளமாக தொழுகை இருக்கின்றது என்பதை மக்களுக்கு உணர்த்தத் தவறி விடுகின்றார்கள். இவ்வாறாக ரீதியில் அடிப்படைக் கடமைகளை மக்களுக்கு உணர்த்தி இருப்பார்களென்று சொன்னால், இத்தகைய அமைப்பினை உருவாக்கக் கூடிய வழிமுறைகளின் பால் மக்களின் கவனத்தைத் திருப்பி இருக்கக் கூடும். ஆனால் பிரச்சாரகர்கள் தங்களது பொறுப்பைத் தட்டிக் கழித்ததன் விளைவாக, அடிப்படைக் கடமைகளுக்கும் இன்னும் அது வலியுறுத்தும் பொறுப்பிற்கும் உள்ள தொடர்புகள் வலுவிழந்து போய் விட்டன. இதன் காரணமாக அரசியல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக கூட்டுப் போராட்டத்திற்குத் தயாராகுபவர்கள் சில நேரங்களில், மிகப் பெரிய போராட்டக் களமாக தங்களது இயக்கத்தை மாற்றுவதற்கு அடிப்படைக் கடமைகளைக் கூட மறந்து விடக் கூடியவர்களாக ஆகி விடுகின்றார்கள்.

  நாம் சரியான விதத்தில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை கீழ்காணும் நபிமொழி நமக்குத் தெளிவினைத் தரும் : பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்கு முயற்சிப்பது என்பது நமது அடிப்படைக் கடமைகளுக்கு அடுத்தபடியாக உள்ள கடமையாகும். பொருளாதாரமாக இருக்கட்டும், ஆன்மீகமாக இருக்கட்டும், எதற்கு சரியானபடி முன்னுரிமை கொடுப்பது என்பதை வைத்துத் தான் நாம் சரியான திசையில் பயணிக்கின்றோமா என்பதைக் கூற முடியும்.
  http://www.tamilislam.com/economy/Halal_earning.htm

   
 • Tags:

  ஆண் ஆதிக்கமும் பெண் அடிமைத்துவமும்

  44
  ஆண் ஆதிக்கமும் பெண் அடிமைத்துவமும் – பாத்திமா நளீரா

  இன்றைய இயந்திரமான உலகில், பரபரப்பான சூழ்நிலையில் பெரும்பாலான உறவு முறைகள் கானல் நீர்போலுள்ளன. அதிலும் பெரும்பாலான கணவன் மனைவிக்கிடையிலான திருமண பந்தமோ திரிசங்கு சொர்க்கம் போலாகிவிட்டது.

 • வாழ்க்கை என்ற வயல் வெளிக்குப் பாசம் என்ற உரம் அத்தியாவசியமானதென்றாலும் கணவன்-மனைவிக்கிடையிலான அன்பின் அரவணைப்பில், பாசத்தில், நேசத்தில்தான் இன்று வறுமை ஏற்பட்டுள்ளன. அத்தி பூத்தால் போல் இருமனங்களும் ஒத்துப் போவது அபூர்வம். அதுவும் பத்து வீதமானவர்களிடையே வெற்றிகரமான வாழ்க்கை. போலியான வாழ்க்கை முறையை திரைக்குள்ளே வைத்துக் கொண்டு வெற்றிகரமான வாழ்க்கையை வெளியுலகத்துக்குக் காட்டி தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமலும் வாழ்பவர்களே மிக அதிகம்.
  இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? ஆணாதிக்கம் என்ற நசுக்கும் நாசகார சக்தியே. பெண்ணின் மென்மையையும் பணிவையும் அடிமைத்தனமாக அங்கீகரித்துக் கொள்கின்றனர். காதல் திருமணமோ, நிச்சயித்த திருமணமோ ஆரம்ப அடித்தளமே புரிந்துணர்வின்மையால் அத்தியாயம் முடியும் வரை ஆட்டம் கண்டு கொண்டே இருக்கும். இதன் விளைவு இல்லறத்தின் இடைவேளையிலேயே விவாகரத்து என்ற முடிவுரை. பிறகென்ன? இருதரப்பிலும் சீர்கெட்ட வாழ்க்கை. சிறகொடிந்த பின் சிந்தனை செய்து என்ன பயன்? கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் எதற்கு?

  பெரும்பாலான திருமண உறவுமுறையில் சமநிலையான வாழ்வு இல்லை. அடிப்படைக் காரணம், சம்பாதிக்கும் தலைக்குள் தலைக்கணம் ஏறி உட்கார்ந்து கொள்ள இதனால் பெண் அடிமைத்துவமும் ஆட்டமும் அதிகம். இதே போன்று ஒரு பெண்ணாகிய மனைவியானவள் குடும்பச் சுமைiயில் பங்கெடுத்துச் சம்பாதிக்கப் புறப்பட்டாலும் எத்தனை விதமான தியாகங்களை உடல்,உள ரீதியாக உளைச்சல்களை, வீட்டிலும் வேலைத்தலத்திலும் பல பிரச்சினைகளை, பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் சகித்துக் கொண்டு மெழுகுவர்த்தியாக வாழும் வாழ்க்கையை எத்தனை கணவனமார்கள்தான் புரிந்து கொண்டிருப்பார்கள்?

  ஆண்களுக்குக் குறிப்பிட்ட நேரம், காலம் வரைதான் வேலை. மேலும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அவர்களுக்கு ஓய்வு.. ஆனால், பெண்ணுக்கு நேரம், காலம் இல்லாமல் வீட்டிலும் வேலைத்லத்திலும் வேலை. அலுப்புக்கும் சலிப்புக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டு ஓய்வு நேரத்தைக் கானல் நீராகப் பார்த்துக் கொண்டு தியாகிகளாகின்றனர்.

  இவர்கள் ஏன் மனைவிமார்களின் மனதைப் புரிந்து கொளவதில்லை? சம்பாதிப்பதுடன் பொறுப்பு முடிந்துவிட்டது என்று நினைக்கும் ஆண்களே அதிகம். அனைத்துப் பிரச்சினைகளையும் அரவணைத்துப் போகின்றவளாகவும் கணவனின் அதிகாரத்துக்கும் ஆத்திரத்துக்கும் முகங்கொடுக்கும் உணர்ச்சியற்ற பொம்மையாகவும் வீட்டின் வேலை, வெளி வேலை என்று அனைத்தையும் பொறுப்பெடுக்கும் ஒரு ——-? இவளாகவும் இருப்பதுடன் அனைத்தையும் தாங்கும் சுமைதாங்கியாக பிள்ளைகளுக்குத் தாயாக பின்னர் பாட்டியாக முடிவே இல்லாமல் இவளின் தியாகங்கள் நீண்டு கொண்டே போகும்.

  நடைமுறை வாழ்வில் மனித நேயத்துடன் அன்பாக அணுகப் பழகிக் கொள்ள வேண்டும். தாலிகட்டி திருமணம் முடித்தவுடன் தன் கதியே நிர்க்கதி என்று நிற்கும் மனைவியை உள்ளங்கையில் வைத்து ஆட்டுவிக்க நினைக்கக் கூடாது. மனைவியின் மனதை வெல்ல வேண்டும் அவள் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் அரவணைக்கப் பழக வேண்டும்.

  தன் கணவன் அன்பானவனாகவும் நல்ல நண்பனாகவும் தன் உணர்வுகளை, அபிலாஷைகளை மதித்துப் புரிந்து கொள்பவனாகவும் தலையை வருடிக் கொடுப்பவனாகவும் இருக்க வேண்டுமென்றே ஒரு மனைவி எதிர்பார்க்கிறாள். மேலும், அவளது சுதந்திரமான பேச்சுக்கும் நடவடிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவனாகவும் மூன்றாம் நபர் முன்னிலையில் இல்லாளை இழி சொல்லுக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதவனாகவும் இருக்க வேண்டுமென்பதும் அவளது எதிர்பார்ப்பு. பெண்களைப் பற்றி உயர்வாகப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் மாத்திரமே பயன்படுத்தாது நடைமுறை வாழ்விலும் நல்ல மதிப்பெண்ணைக் கொடுப்பதே முக்கியம்.

  மனைவியை மனைவியாகப் பர்ர்ப்பவர்களும் இல்லாமல் இல்லை. சமூகத்தின் முன் அந்தஸ்தையும் கௌரவத்தையும் கொடுத்து அவளது சகல விடயங்களிலும் தானும் பங்கெடுத்து அவளையும் ஒரு பெண்ணாக மதித்து பூப்போன்று தாங்கி உயர்நிலையில் வைத்து மனைவியின் மனதை வென்று இல்லறத்துக்கு இலக்கணம் காட்டிய கணவன்மார்களும் (பத்து வீதம்) இல்லாமல் இல்லை.

  என்றாலும் இப்படிப்பட்ட நந்தவன வாழ்க்கை கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில்தான் எல்லாப் பெண்களும் இல்லற பந்தத்தில் இணைகிறார்கள் பெண்களைத் தேவதை ஆக்குவதும் ஆண்களே. அரக்கிகளாக மாற்றுவதும் ஆண்களே..

  நன்றி வீரகேசரி வாரவெளியீடு
  Source : http://fathimanaleera.blogspot.in/2010/03/blog-post_14.html

   
 • Tags: , ,