RSS

அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ கிராமத்து ராசாவும்… பட்டணத்து கூசாவும்… ][பகுதி 8 ]

01 Oct

nijampage-adirai newsகிராமத்து ராசாவும் ! பட்டணத்து கூசாவும் !
தொலை தொடர்பு முன்னேறிய காலம் ஊருக்கு போன் பேச ஆசைபட்டால் டெலிபோன் கார்டு வாங்கி பொதுவாக உள்ள தொலை பேசி மூலம் பேசி கொள்ளலாம் .விடுமுறை காலங்களில் டெலிபோன் பூத்துகளில் வரிசையில் நின்று பேசுவார்கள். ஒருவர் பேசி முடியும் வரை மற்றவர் முகம் போகும் போக்கை பார்க்க வேண்டுமே! இன்று நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது.

சிலர் மணி கணக்கில் பேசுவர் குளிர் என்று பாராமல் காத்திருந்து பேசும் நிலை ஊரில் உள்ளவரோடு உரையாட மனம் ஏங்கும்..இப்படி காத்திருக்கும் போது ஒவ்வொருவரின் குடும்ப விசயங்களை கூட மற்றவர் காதுபட கேட்க நேரும் .

இதில் படிப்பினைக்காக இரண்டே உரையாடலை முன் வைத்து இனி வரும் இரண்டு மூன்று வாரங்கள் இது பற்றி விவாதிப்போமா ?

ஒரு கிராமத்துக்காரர் ! ஏதோ ஒரு கட்டிட தொழிலாளி போன் பேசுகிறார் .

Dubai_UAE_1301200712681ஆத்தா !

எப்படி இருக்கே ?

நம்ம வீட்டு லட்சுமி ( பசு மாடு ) கன்று போட்டுடிச்சா ?

ரொம்ப சந்தோசம்மா

அத்தான்… வீட்டுக்கு வரப்போக இருக்காரா ?

சரி… சரி…

முக்கியமா ஒரு விஷயம்

 • நம்ம வீட்டுக்கு கிழக்கால மூணுமா வயல் விலைக்கு வருவதா கேள்வி பட்டேன். மாரிமுத்து மாமாவிடம் சொல்லி நமக்கு கிரயமா வாங்கித்தர சொல்லு… பணம் சேர்த்து வச்சிருக்கேன் அனுப்பி விடுகிறேன்.

  அம்மா ஊருக்கு வரமுன்னே இன்னுமொரு சிறிய தோப்பு தொறவு வாங்கியாகனும் ஆத்தா

  உடம்ப கவனிச்சிக்கோ… வச்சிடட்டுமா… எல்லோரையும் கேட்டதா சொல்லு ஆத்தா …!

  என்று பேசி வைக்கிறார் கிராமத்து ராசா !

  நம்ம பட்டணத்துக்காரர் போனை எடுக்கிறார்

  இரண்டு முறை டயல் செய்து மூன்றாவது முறை…

  ஹலோ ! எங்கம்மா போனே ?

  வீட்டில் எல்லோரும் சுகமா ?

  வீட்டில் வாங்கிய ஃபிரிஜ் நல்லபடியா வேலை செய்கிறதா ? பார்த்து உபயோகிங்கள் அது எனது இரண்டு மாதச்சம்பளம். இன்னும் ஆறு ஏழு மாதத்தில் ஊர்வர இருக்கிறேன். எல்லா சாமான்களும்
  வாங்கி வருகிறேன். இனி வீட்டு செலவுக்கு பணம் அனுப்ப இயலாது. நான் அனுப்பியதை வைத்து சமாளித்து கொள்ளுங்கள்.

  சரி.. சரி… கார்டு டயம் முடிய போகிறது. எல்லோரையும் கேட்டதாக சொல்லுமா !

  இந்த இரண்டு உரையாடலில் உள்ள நிதர்சன உண்மையை எண்ணி பார்க்கிறேன்

  கிராமத்து ராசா தான்வந்த நோக்கத்தை சரியாகப் பயன் படுத்தி நிலம் வாங்கி அதில் பயிரிட்டு பலன் காண்கிறார்.

  பட்டணத்துக்காரரோ ஃபிரிஜ் வாங்கி நடு வீட்டில் உரம விட்டு மின்கட்டணம் கொடுத்து அழுகிறார்.

  இதில் யார் ராசா !? யார் கூசா !? நீங்களே சொல்லுங்கள்…

  அது மட்டுமா ! நமதூரில் முன்பெல்லாம்… பழைய இய்யம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என கூவி வருவார்கள்.

  இப்போது மினி லாரிகளில் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தபடி வரும் வியாபாரம் என்ன தெரியுமா ?

  பழுதான ஃபிரிஜ் வாங்கறது… பழுதான கிரைண்டர் வாங்கறது…நகைப்புக்காக சொல்ல வில்லை. வளைகுடாவில் சிந்திய வியர்வை ஊரில் விரயமாகும் நிலை ! இதனை சிந்திக்கவே சுட்டிக்காட்டினேன்.

  அடுத்த வாரம் மனைவி ஒரு மந்திரி !?
  [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]

  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  http://nijampage.blogspot.in/2013/08/8.html

  Advertisements
   
 • Tags: , ,

  One response to “அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ கிராமத்து ராசாவும்… பட்டணத்து கூசாவும்… ][பகுதி 8 ]

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: