RSS

நாணயமும் ‘நா’ நயமும்

02 Oct

நம்பிக்கையின் பிறப்பிடமாம் நா நயம்
நம் வாழ்கைக்கு அவசியம் நாணயம்

ஆசைக்கு அஸ்திவாரம் நாணயம்
அன்பிற்கும் உதவிடுமாம் நா நயம்

சில்லறையின் மறு பெயராம் நாணயம்
கல்லறையிலும் நிம்மதி தரும் நா நயம்

வையகத்தில் வாழவைப்பது நாணயம்
வானுயர புகழ் சேர்ப்பது நா நயம்

  • சோதனையாய் இருப்பதுவே நாணயம்
    சாதனை பல படைக்குமிந்த நா நயம்

    உறவுக்குக் கைகொடுக்கும் நாணயம்
    உணர்வுக்கு உயிர் கொடுக்கும் நா நயம்

    யாதோர்க்கும் வழிகாட்டும் நாணயம்
    போவோர்க்கும் புண்ணியம் சேர்க்கும் நா நயம்

    விலைவாசி நிர்ணயிக்குமிந்த நாணயம்
    தலைமூழ்கா விலை வைப்பது நா நயம்

    நிலைமாறித் தடுமாறுமிந்த நாணயம்
    நிலைதவறா மனிதனிடமிருப்பதோ நா நயம்

    வேதனையில் வீழ்ந்த இந்த நாணயம்
    வீழ்ச்சிக்குக் காரணமாம் நா நயம்

    நா நயம் இல்லாதவனின் நாணயம்
    நல்லோர்க்கு பயன்படாத நாணயம்

    நா நயம் காத்திடல் சாதனையாகுமே
    நலிந்தோர்கள் உயர்ந்திட நாணயம் உதவுமே

    ஏனைய நாட்டு நாணயத்தை
    எம் நாட்டு நாணயம் மிஞ்சிடவே
    நா நயமான மனிதர்களாய்
    நலிந்திருக்கும் பணவீக்கம் சீராக்கி
    நம் நாட்டு நாணயமதிப்பை உயர்த்திடுவோம்

    51mmx51mmஅதிரை மெய்சா

    குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 12-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ…

    நன்றிhttp://nijampage.blogspot.ae/2013/09/blog-post_3115.html?showComment=1379848314475

     
  • 1 Comment

    Posted by on October 2, 2013 in 1

     

    Tags: , , ,

    One response to “நாணயமும் ‘நா’ நயமும்

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: