RSS

அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ மனைவி ஒரு மந்திரி ] [பகுதி 9 ]

06 Oct

வளைகுடா நாட்டில் உழைக்கும் எண்ணற்ற நம் சொந்தங்களில் எத்தனை பேர் ஓய்வாக இருக்க பணம் சேர்த்துள்ளார்கள் ? எத்தனை பேர் முதுமை அடைந்த நிலையில் வாழ்வை நிம்மதியாக கழிக்கிறார்கள் என்று எண்ணி பார்ப்போமேயானால் மிக சொற்ப நபர்களே ராஜாவை போல வாழ்கிறார்கள். மற்றவர்கள் நிலை மிக பரிதாபமாகவே இருக்கிறது. இதற்கு காரணம் உழைத்த பணத்தை சரியாக முதலீடு செய்யாததே கரணம்.

1985 களில் மனைகள் வாங்கி குவித்தவர்கள் இன்று கோடீஸ்வரர்களாக வளம் வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணகர்த்தா ஊரில் இருக்கும் மனைவியே…!?

நான் கண்ட சில நிகழ்வுகளை இங்கு பதிய விரும்புகிறேன்…
சென்ற வாரத்தில் கூறியது போல, குளிர் சாதன பெட்டி வாங்கும் நிலை சாதாரண குடிமகனிடம் இல்லை ஆனால் கடும் வறுமை நிலையில் இருந்த ஒருவன் வறுமையை போக்க அரபுநாடு சென்று சற்று நிலைமை சீரான நிலையில் ஆடம்பர நிலைக்கு ஆசை படுகின்ற போது அவன் வாழ்வில் பின்னடைவு ஏற்படுகிறது.

தனது கணவன் வளைகுடா நாட்டில் வேலை பார்க்கிறான் என்பதை பறைசாற்றும் விதமாக சிலர் பெண்கள் ஆடம்பரமாக செலவு செய்வதையும் காண முடிகிறது. அன்றாட உணவு பழக்கத்தில் கூட மாற்றம் செய்து பணத்தை விரயம் செய்து ஒவ்வொரு மாதமும் கணவனிடமிருந்து பண வரவை எதிர்பார்த்து காத்திருப்பர்.

இது போன்றவர்களில் முற்றிலும் மாற்றமான சில பெண் மணிகள் பற்றியே கூற விரும்புகிறேன்…

 • கணவன் வெளிநாடு சென்று சம்பாதிக்கிறான் என்பதால் தனது உணவு பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் எளிமையான உணவு, ஆடம்பரம் இல்லா உடை கணவனிடமிருந்து வரும் பணத்தை அப்படியே சேகரித்து நான்கைந்து மாதத்தில் முதிரும் பெரும் தொகையை அப்படியே சிறு நிலம் வாங்கி, தனது முதலீடு வாழ்க்கையை ஆரம்பித்தாள் அந்த பெண்மணி கணவன் மூன்று ஆண்டுகள் கழித்து ஊர் வரும்போது கணவன் அன்பாய் வாங்கி வந்த பொருட்களை சேகரித்து நல்ல விலைக்கு விற்று கணவன் கை செலவிற்கு கொடுத்தாள். அன்பாய் வாங்கி கொடுத்த தங்க நகையை மட்டும் அணிந்து காட்டி மகிழ்வித்தாள்..

  காலங்கள் சென்றன… இப்படியே பதினைந்து வருடங்கள் கடந்தன… கணவன் விடுப்பில் ஊர் வந்தார். அப்போது அவர் மனைவி கூறினார்.

  இனி நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் !

  ஏன் ? என்றார் கணவன்

  நீங்கள் இதுவரை அனுப்பிய பணம் என் முதலீட்டால் பெருகி பல லட்சங்களாய் உள்ளது.

  ஒவ்வொரு மனையும் பத்து லட்சம் போகும். நீங்கள் அனுமதித்தால் அனைத்தையும் விற்று மாத வருமானம் தரும் வாடகை கட்டிடங்கள் வாங்கி நம் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளலாம் என்றார்.

  பல வருடங்கள் உழைத்து களைத்த கணவனுக்கு மனைவி கூறிய வார்த்தை அக்கால மன்னர்களுக்கு மந்திரிகள் கூறிய ஆலோசனை போலபட்டது.

  நீ கூறும் யோசனை மிக சரி என்றார்.

  ஊரில் நலமாய் வாழ்கிறார். அவர் மனைவி மந்திரிதான்.

  * நான் கூறிய கால கட்டம் :

  ஒரு குளிர் சாதன பெட்டி பதினைந்தாயிரம்…

  ஒருவீட்டு மனை இருபத்தி ஐந்தாயிரம்…

  அடுத்த வாரம் நகைச்சுவை நிகழ்வை காண்போம்
  [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]
  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  http://nijampage.blogspot.in/2013/08/9.html

  Advertisements
   
 • Tags:

  One response to “அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ மனைவி ஒரு மந்திரி ] [பகுதி 9 ]

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: