RSS

இத்தனைக்கும் எல்லாரும் படிச்சவங்கதான்!

15 Oct

நரேந்திரமோடி சென்னைக்கு வருவதால் சென்னை போக்குவரத்து காவல்துறை ஹைஅலர்ட்டில் இருக்கிறது. கண்ணுக்குப் படும் வாகனங்களை எல்லாம் மடக்கி சோதனையிடுகிறார்கள். புத்தூரில் தீவிரவாதிகள் பிடிபட்டதன் ஃபாலோ-அப்பாகவும் இது நடக்கிறது.

காலையில் தில்லைகங்காநகர் சுரங்கப்பாதை அருகே பிடிபட்டேன். “ப்ரெஸ் சார்” என்று அடையாள அட்டையை காண்பித்தாலும் வேலைக்கு ஆகவில்லை. டாக்குமெண்ட்ஸ் எல்லாம் பக்காவாக இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டே அனுப்பினார்கள். “தப்பா நினைச்சிக்காதீங்க. கண்டவனும் ப்ரெஸ்னு ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டு அலைய ஆரம்பிச்சிட்டானுங்க” என்றார் என்னை சோதனை செய்த சார்ஜண்ட்.

  • அடுத்து நாலு நாட்களுக்கும் சென்னையில் சோதனை பயங்கர கெடுபிடியாக இருக்குமாம். தீவிரவாதிகள் மாட்டுகிறார்களோ இல்லையோ, வாகனத்துக்கு சரியான ஆவணங்கள் வைத்திருக்காதவர்கள் மாட்டுகிறார்கள். ‘மால்’ வெட்டிவிட்டு தப்பிக்கலாம் என்பதெல்லாம் இப்போது நடக்காது. ஸ்ட்ரிக்ட் ஆர்டர். இந்த அதிரடி வாகன சோதனையில் ஏகப்பட்ட கிரிமினல்களையும் பிடிக்க முடிந்திருக்கிறதாம். எனவே மோடி சென்னை வந்து திரும்பியபிறகும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வாகனசோதனை தொடரக்கூடும்.

    என்னிடம் பேசிய போஸிஸ்காரர் சொன்னது, “இவ்வளவு பேரு டாக்குமெண்ட் இல்லாம வண்டி ஓட்டறாங்கங்கிறதே ஆச்சரியமா இருக்குங்க. இத்தனைக்கும் எல்லாரும் படிச்சவங்கதான். ஆக்ஸிடெண்ட் கீக்ஸிடெண்ட் ஆயிடிச்சின்னா எவ்வளவு தொல்லைன்னு அவேர்னஸ் இல்லாம இருக்காங்க”

    ஆகையால் சென்னை பெருநகர வாகன ஓட்டுனர்களே! உங்களின் வாகனத்துக்கான இன்சூரன்ஸ் எக்ஸ்பயரி ஆகியிருந்தால் உடனடியாக எடுத்துவிடுங்கள். ஆயிரம் ரூபாய்தானே ஆகப்போகிறது? ஆர்.சி.புக்கில் ஏதாவது வில்லங்கம் இருந்தால், சோம்பல் படாமல் உடனடியாக சரிசெய்துவிடுங்கள். குறிப்பாக குடிவெறியர்கள் குடித்துவிட்டால் வண்டியை எடுக்காதீர்கள். ஆட்டோவை பயன்படுத்துங்கள். மாட்டினால் மினிமம் மூவாயிரம் செலவாகும் என்பதை மனதில் நிறுத்துங்கள்.
    யுவாYuva Krishna

     
  • 1 Comment

    Posted by on October 15, 2013 in 1

     

    Tags: ,

    One response to “இத்தனைக்கும் எல்லாரும் படிச்சவங்கதான்!

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: