RSS

அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ அரபி டோய் ! ][பகுதி 10 ]

18 Oct

நமதூரில் நம்மவர்கள் மாலை நேரங்களில் எதோ ஒரு இடத்தில் ஒன்று கூடி அரட்டை அடிப்பது வழக்கம். அதே போன்றே துபாய், குவைத், பஹ்ரைன போன்ற நாடுகளில் நம்மவர்கள் ஏதாவது ஒரு இடத்தில நான்கைந்து பேர் குழுக்களாக அமர்ந்து அரட்டை அடிப்பார்கள். தாய் மொழியில் பேசி மகிழ்வார்கள்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வேற்று மொழி பேசுபவர்கள் அமர்ந்து இருந்தால் மிக அலச்சியமாக… இவன், ஏண்டா நம்ம பக்கத்தில் அமர்கிறான் நாற்றம் சகிக்கல என்பர். சிறு புண் முறுவலுடன் வேற்று மொழிக்காரரை அடாவடியாக திட்டுவது ..தர குறைவாக அழைப்பது சாதாரணமாக நிகழும்.

 • vadivelu in arab clothஒருநாள் நம்மவர் கூடும் இடத்தில் ஒருவர் அராபிய உடை அணிந்து வந்து அமர்ந்தார். என்றும் போல் நம்ம தமிழ் மொழியில் இந்த மடப்பய நம்ம இடத்திற்கு ஏன் வருகிறான் ? என்றார்.

  சற்றும் எதிர்பாரத நிலையில் அரபி உடை அணிந்திருந்த நபர் யாரைப்பார்த்து மடையன் என்கிறாய் ? நீதாண்டா மடப்பய என்றார்.

  மற்றவர் நிலை குலைந்து போனார். ஐயோ நீங்க அரபி என நினைத்து விட்டேன் என்றார். ஏன் அரபியாக இருந்தால் திட்ட வேண்டுமா என்றார் கோபமாக… பழக்க தோஷம் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். பிறகு இருவரும் நண்பர் ஆனார்கள்.

  அரபி வீடுகளில் டிரைவர் வேலை பார்பவர்களை சில அரபிகள் குடும்பத்தில் ஒருவராக ஏற்று கொள்வார்கள். உடை கூட அவர்கள் அணியும் உடை கொடுத்து மகிழ்வார்கள். நம்மவரை சந்திக்க சிலர் அரேபிய உடையில் வருவதால் ஏற்படும் விபரீத விளைவுதான் இது.

  அரேபிய நாட்டில் சைவ உணவகங்களுக்கு நம்மவர்களிடையே நல்ல மவுசு விடுமுறை நாட்களில் அங்கு சென்று உணவருந்துவது நடைமுறை நம்மவர் அரேபிய உடையில் உணவகம் சென்று அமர பரிமாறும் சர்வருக்கு ஒரே திகைப்பு !

  என்னடா அரபி நம்ம கடைக்கு வந்திருக்கான் என்ற ஆச்சரியத்துடன் அவரை அணுகி ஆங்கிலம் பாதி அராபிய மொழி மீதி திக்கி திணறி என்ன உணவு வேண்டும் என சர்வர் கேட்க…

  அரேபிய உடையில் உள்ளவர் மிக சாதாரணமாக ரெண்டு இட்லி, ஒருவடை கொண்டு வாயா என்கிறார்.

  தலையை சொரிந்த வண்ணம் அரபி என்னமா தமிழ் பேசுறான் என்றவாறே உணவெடுக்க செல்கிறார் வடிவேலை போல…

  அட நான் தமிழன்தான்யா …உடை மட்டும்தான் அரபியோடது பாத்து பேசுயா என்றார்

  அதே நபர் ஒருநாள் நண்பரை பார்க்க அவர் வீட்டு கதவை தட்டுகிறார் நம்மவர் அரேபிய உடையில்.

  நண்பர் அல்லாத மற்ற நபர் கதவருகே வந்து பார்த்து திகைத்தவாறு டேய் யாரோ ஒரு அரபி நம்ம வீட்டு கதவை தட்டுகிறாண்டா என்று சத்தம் போடா ஐயோ ! நான் அரபி இல்ல தமிழன் தாங்க…

  நண்பரை பார்க்க வந்தேன் என்கிறார். கொஞ்ச நேரத்திலே கலங்க வச்சுட்டீங்களே என்றார் வீட்டிலிருந்தவர். காரணம் குறிப்பாக வெளிநாட்டவர் தங்கும் இடத்தில் அரபியர் வருவதில்லை. ஏதாவது பிரச்சனை என்றால் மட்டுமே வீடு தேடி வருவர் .

  இந்த நிகழ்வுகளுக்கு பிறகு அராபிய உடை அணிந்து நம்மவரை காண அவர் வருவதே இல்லை.

  முக்கிய தகவலோடு மீண்டும் வருகிறேன்…
  [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]
  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  http://nijampage.blogspot.in/2013/09/10.html

  Advertisements
   
 • One response to “அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ அரபி டோய் ! ][பகுதி 10 ]

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: