RSS

பணம் இங்கே !? உறவுகள் எங்கே !?

23 Oct

mother3இவ்வுலக வாழ்க்கையில் நம்மிடம் எவ்வளவு பொருளாதாரம் இருப்பினும் உண்மையான அன்பு பாசத்துடன் இருக்கும் சொந்தங்கள் உறவுகள் குடும்பங்கள் என்று இல்லாதவரை மனதில் நிம்மதி இல்லாத ஒரு நரக வாழ்க்கையாகத்தான் இருக்க முடியும். பொருளாதாரம் என்பது நமது வாழ்வில் ஒரு பகுதியே அன்றி பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பொருளாதாரம் வறுமையை நீக்கி சுவிட்சமாக ஒரு குறிப்பிட்ட காலம் வாழ மட்டும் தான் உதவும். ஆனால் உண்மையான உறவுகளுடன் அன்பைப்பகிர்ந்து கொண்டு வாழ்நாள் முழுதும் கூடி வாழ்ந்து ஒற்றுமையுடன் இவ்வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ்ந்து அனுபவித்தால் அது போன்ற ஒரு இன்பத்தை மன சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு இன்புற்று இருக்கும்.

 • இன்றைய கால கட்டத்தில் மேற்ச சொன்னவைகளெல்லாம் நினைத்து கூட பார்க்கமுடியாமல் தூரத்து நிலாவாகி விடும்போல் இருக்கிறது. உண்மையான அன்பு பாசங்கள் மறைந்து இதெல்லாம் பகல் கனவாகி கொண்டிருக்கிறது. காரணம் மனிதன் காசு பணத்திற்கு அடிமையாகி அதற்க்கு கொடுக்கும் மரியாதை அன்பு பாசம் காட்டுபவர்களுக்கு கொடுப்பதில்லை என்பதே உண்மை.!

  இன்றைய மனிதன் இயன்றளவு முழுப்பொழுதும் காசுபணம் தேடுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறான்.அப்படியானால் அன்பு பாசங்களை பகிர்ந்து கொள்ளவோ, குடும்ப உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவோ நேரம் கிடைப்பதில்லை. இந்த ரீதியில் நமது மனநிலை பழகிப் போனால் அன்பு பாசம் எப்படி விரிவடையும்.? சொந்தங்கள் எப்படி உரிமையாக வந்து உறவு கொண்டாட முடியும்.?

  அடுத்தவேளை சோற்றிற்கு ஏங்கி நிற்கும் அன்றாடங்காய்ச்சிகளின் நிம்மதி சந்தோசம் கூட கோடிகோடியாய் வைத்து இருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. காரணம் இங்கு பணம் காசிற்கு கொடுக்கப்படும் மரியாதையை விட உறவுகளுக்கு கொடுக்கப்படும் அன்பு பாசம் மரியாதை மேலோங்கி இருக்கிறது. எத்தனையோ கோடீஸ்வர சீமான்களை நாம் இவ்வுலகில் காண்கிறோம். அவர்கள் அளவுக்கதிகமான செல்வங்களையும் பண வசதிகளையும் பெற்றிருந்தும் மன நிம்மதியை பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை.

  இந்த உறவுகளின் தாக்கம் இப்போது புரியாது. ஒருநாள் வாலிப வயது மாறி வயோதிய நிலையை அடையும் போது அந்த தள்ளாத காலத்தில் தான் அந்த உறவுகளின் அருமை தெரியும். அப்போது காசு பணத்தை விட அவர்களின் அன்பும்,பாசமும்,பணிவிடையும் தான் மன நிம்மதியைத் தரும்.

  இன்று நம் கண் முன்பு எத்தனையோ பணக்கார முதியோர்களின் அவல நிலையை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.பணம் , சொத்துக்கள் என்றிருந்தும் பிடிவாதத் தாலும்,முன்கோபத்தாலும் உறவுகளை விட்டுப் பிரிந்த அவர்களை பாசமுடன் ஆதரிக்க உறவுகள் யாரும் முன்வருவதில்லை.அப்படியே இறக்கப்பட்டு முன்வந்தாலும் மனமுவந்து சேவைகள் செய்வதில்லை. பெயரளவுக்கும் சொத்தை அபகரிக்கும் குறிக்கோளை மனதில் வைத்தும் தான் பாசம் காட்டப் படுகிறது.

  காசு பணம் என்பது நிலையில்லாத ஒன்று. அது எப்போது யாரிடத்தில் சென்றடையும் என்று சொல்ல முடியாது. ஆனால் அன்பு பாசம் என்பது அப்படியல்ல. நாம் அழிந்த பின்னும் பேசப்படும் அழிவில்லா செல்வமாகும்.

  மனிதனிடத்தில் கருத்து வேறுபாடுகள் என்பது கார்த்திகை மாத மழை போல் வந்து போகக் கூடியது. அதை கால மெல்லாம் பகையாக்கிக் கொள்ளாமல் அன்பைப் பகிர்ந்து கொண்டு அனைவரிடத்திலும் ஒற்றுமையுடன் இருந்து மகிழ்ச்சியை தேடிக் கொள்வோம். மனிதன் தவறு செய்யக்க் கூடியவனே. அதே சமயம் தவறென்று தெரிந்ததும் அதைத் திருத்திக் கொள்வதில் தான் அங்கு அவன் முழு மனிதனாக நிறைந்து இருக்கிறான்.

  ஆகவே உறவுகளை ஊதாசினப் படுத்தாமல் காசு பணத்திற்கு கொடுக்கும் மரியாதையை உறவுகளுக்கும்,சொந்த பந்தங்களுக்கும் கொடுத்து உண்மையான அன்பு பாசங்களை உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு மன நிம்மதியுடன் வாழ்வோம் !
  51mmx51mmஅதிரை மெய்சா
  Source :http://nijampage.blogspot.ae/2013/10/blog-post_7039.html

  Advertisements
   
 • Tags: , , ,

  One response to “பணம் இங்கே !? உறவுகள் எங்கே !?

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: