RSS

Monthly Archives: November 2013

நாங்களும் காமெடி பண்ணுவோம்ல!? [ நகைச்சுவை விருந்து ]

nijam page - comedyகாமெடி செய்து அடுத்தவர்களை சிரிக்கவைத்து மகிழ்வதாலும், தானும் எப்போதும் சிரிப்புடன் புன்னகை முகத்துடன் இருப்பதாலும் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் நமக்கு பல நன்மைகள் உண்டு என்பதற்காக எழுதப்பட்ட விழிப்புணர்வு கட்டுரை தான் இது. படித்துவிட்டு சிரிப்பு ஒன்னும் வரலியேன்னு சொல்லி தயவு செய்து காமெடி கீமெடி பண்ணிடாதீங்கோ..சார் [காமெடி சரி.அது என்ன கீமெடி.!?!?] [ஆரம்பிச்சிட்டியா.! ]

 • காமெடி என்பது அது ஒரு தனிக் கலையென்று தான் சொல்லவேண்டும். [பரதநாட்டியம், குச்சிப்புடி,கதகளி இந்த மாதிரியா.? ஹி…ஹி..ஹீ..] [ஒன்னே…என்ன பன்றேண்டுபார்.. ]அதை எல்லோராலும் செய்துவிட முடியாது என்று சொன்னால் மிகையில்லை. [ மெய்யாலுந்தானுங்கோ எல்லோராலும் செய்துவிட முடியாதூங்கோ நா காமெடி கீமெடி ஏதும் பண்ணலேங்கோ ] [அது எங்களுக்கு தெரியூங்கோ அந்த நாரவாயே கொஞ்சம் மூடிக்கிட்டு ஒரு மூலையிலே போய் உக்காருங்கோ] நகைச்சுவை உணர்வு என்பது இயற்கையாகவே ஒருசிலருக்கு அமையப்பெற்றிருக்கும் பாக்கியமாகும்.[அப்போ எங்களுக்கெல்லாம் அந்த பாக்கியம்இல்லேன்றீங்களா.?!? ] [யார்ப்பா அங்கெ பாக்கியம் பாக்கியமுண்டு எம்பேர சொல்லி கூப்பிடுறது..?!?] [நீங்க போங்கம்மா உங்கள கூப்பிடல..ஏது இவனாலே வம்பெ வெலையில்லாமெ சும்மாவே வாங்குற மாதிரி வரும்போல இருக்கே.!இன்னு என்னத்துல கொண்டுபோய் மாட்டி விடப்போரான்டு தெரியலையே ]

  சிலரது முகபாவனையே அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்து விடும்.[ப்…ப்ப் …பூ…. ஹி…ஹி..ஹிஹிஹ்ஹி] [ச்சீ..ச்சீ.. இது சிரிப்பா..அப்பொ சிரிப்பையெல்லா எப்படி சொல்லுவீகலாம் ] சிலர் பேச ஆரம்பித்தால் முடிவுவரை நகைச்சுவையுடன் பேசி நமது வயிறை வலிவரும்படி செய்து விடுவார்கள்.[இஹ்… இஹ… அஹ்…அஹ்…ஆஹ்ஹ்][சரி –சரி.. போதும் இருமி..இருமி..எடத்த நாரடிச்சிடாதே.!இப்படி பொழுதன்னக்கிம் சிகிரெட்ட குடிச்சா இருமதான் வரும் சிரிப்பு எங்கேருந்து வரும்.!? ]

  காமெடி என்பதை வெறும் சிரிப்பாக மட்டும் பார்க்கக் கூடாது. பல நோய் தீர்க்கும் நிவாரணியாகவும் இருக்கிறது. [அப்படீன்னா தலவலி கிலவலி வந்தா அமிர்தாஞ்சன், விக்ஸ் ஏதும் போட தேவையில்லையா.!? ] [ம்ம்..பெரிய காமெடியன்கிற நெனப்பு !?]அதனால் தான் வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். [அப்போ பெருசுங்க சொன்னதையெல்லா கேட்டு நடக்கணுமா.? ] [இந்த லொள்ளு தானே வேணான்றது.!] துன்பம் வரும் வேளையில் கூட சிரிக்கச்சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். [அதற்காக துக்கம் அனுசரிக்கும் இடத்திற்க்கெல்லாம் போய் வாய் கிழிய சிரித்து விட்டு செமெ மாத்து வாங்கிகிட்டு வரச் சொல்றீங்களா.!?] [கொஞ்சம் அடக்கிகிட்டு இரியேன்டா.! ஏன்டா இப்புடி… ? வேணா விட்டுட்டு அழுதுடுவேன்..ஆஆஆ உன் இம்ச தாங்க முடியலடா ] சிரிப்புடன் வாழ்க்கையை போக்குபவர்களுக்கு ஆயுள் அதிகம் என்பதாக கூட சொல்லக் கேட்டிருப்போம். [அப்பொ சோறு ஏதும் திங்காமெ சிரிச்சிக்கிட்டே இருந்தா போதுமா.?நா உசுரோட இருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா.? ] [ஒஹ்.. சூப்பர் காமெடில ஹி…ஹி..ஹி…அடச்சீ..]

  மன அழுத்தம், தாங்கிக் கொள்ள முடியாத கவலை, குடும்பப் பிரச்சனைகளால் மன நிம்மதியின்மை… [இரி..இரி.. இதுக்குத்தான் இப்போ டாக்டர்ங்க டி.விலே வந்து வைத்தியம் பண்றாங்களே.! ஒஹ்.. சாரி..வைத்தியத்துக்கு விளக்கம் சொல்றாங்களே.!][ஏய்..இதெல்லா டூமச்சி…என் வாயெக் கெலப்பாதே..ரெண்டு நாளக்கி முன்னாடி தான் இப்புடி நக்கலா பேசி மூஞ்ச காண சகிக்கமுடியாத அளவுக்கு எண்ணையில போட்டெடுத்த பணியாரம்போல வீங்கிப் போய் வந்தே.!?] இத்தகைய தருணத்தில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நண்பர்களோ உறவினர்களோ ஏதாவது காமெடி செய்து அவர்களை சிரிக்க வைத்து சிந்தனையை திசை திருப்பினால் தற்காலிக நிவாரணியாக அந்த கவலையிலிருந்து மீழ்ந்து வர வாய்ப்பாக இருக்கும்.[அப்போ எங்களயெல்லா பைத்தியம்பிடிச்சி தெரு தெருவா அலைய சொல்றீங்களா.?ஏன்னா..இப்போஉள்ள பிரெண்டுமாருங்க நம்ம சிந்தனைய திச திருப்ப அப்படித்தான் கலாய்க்கிரானுங்க !இந்த மாதிரி ஹெல்ப்பெல்லாம் பொண்ணுங்களுக்குத்தான் செய்வானுங்க ] [என்னடா..ஒம்பிரண்டு பொல்லாத பிரண்டு நமக்கு ஒத்துவராதவனெயெல்லா ஏன்டா பிரண்டா வச்சிக்கிர்றீங்க !நல்லவனா பாத்து பழகுங்கலேன்டா ஏன்டா இப்படி உருப்படாதவனோடவல்லாம் பழகி பேர கெடுத்துக்கிறீங்க ]

  துன்பத்தை மறந்து தன்னையும் அறியாது சிரித்திருக்கும் நிகழ்வு அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முறையேனும் எதேர்ச்சையாக நடந்திருக்கும்.நன்றாக சிரித்துsorry சிந்தித்துப் பாருங்கள். [அப்புடி ஒன்னும் நடந்த மாதிரி தெரியலயே..ம்ம்ம்.. எதுக்கும் நம்ம ஃபிகர் கிட்டே கேட்டுக்கிடுவோம் ] [மவனே ஒனக்கு நேரம் சரியில்லேன்டு நெனக்கிறேன் பொண்ணுங்கள கண்டு இந்த ஜொள்ளு உட்ரதையெல்லா நிறுத்திக்கோ இல்லே அடி உதைபட்டு அநியாயத்துக்கு செத்துப்போவே]

  வாழ்க்கை வாழ்வதற்காகவே அன்றி இப்படி மூஞ்சை தூக்கிவைத்துக் கொண்டு விறப்பாக வீரவசனம் பேசமட்டுமல்ல.[இது யாருக்கோ சொல்றமாதிரி தெரியுதே..ம்ம்ம்..] [சும்மா இருக்கமாட்டியா நீயி. எரியிற நெருப்புல பெட்ரோல இல்ல..இல்ல..பெட்ரோல சொன்னாலெ வயிறு கடாமுடாங்குது [அவ்வளவு வெல ஏத்தம்] எண்ணையே தூக்கி ஊத்துனானாம்… ]

  ஆக மொத்தத்தில் சிரித்த முகத்துடன் இருப்பவர்களும் பிறரை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர்களும் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தனது புன்னகைப் பூக்களால் மாலையிட்டு இன்முகம் காட்டி வென்று விடுவார்கள்.[சும்மா..சும்மா..சிரிச்சிக் கிட்டே இருந்தா அப்பறம் மெண்டல் ஹாஸ்ப்பெட்டல்லெ சேத்துடப்போறானுங்க ] [நல்ல மெஸ்ஸேஜ் சொல்றார்ல சும்மா போத்திக்கிட்டு இரு ]ஆகவே வாழ்க்கையில் அதிகமாக சிரிப்போம். வாழ்நாளை சிரமமில்லாமல் கழிப்போம். [அப்படீன்னா சிரிச்சிக்கிட்டே இருக்கனும்ண்டு ரொம்ப அடம்புடிக்கிறீங்க அதுக்கு என்னா..சிரிச்சிட்டா போச்சி… சிரிச்சிடுவோம்.. ஹி..ஹி..ஹிஹிஹி.. இஹ்ஹு.. இஹ்ஹு..ஆஆஹ்ஹ்ஹ்..அதுக்கு மேலே நம்மனாலே சிரிக்க முடியாதூங்கோ… நீங்களும் கொஞ்சம் சிரிங்கோ… வரட்டுமாங்கோ.!] [ இனிமே நீஇந்தபக்கமா வந்துடாதே அப்புடியே ஓடிப் போய்டு இல்லே இந்த சமூக விழிப்புணர்வு பக்கங்கள்லெ இருக்கிற பங்களிப்பாளர்களும் வாசகர்களும் சேர்ந்து ஒன்னே கும்மோ கும்முன்னு கும்மி எடுத்துடுவாங்க…. அப்பாட தொலஞ்சாம்ப்பா….ஸ்..ஸ்ஸ்ஸ்…. ]

  51mmx51mmஅதிரை மெய்சா
  http://nijampage.blogspot.in/2013/11/blog-post_3199.html

  Advertisements
   
 • Tags: ,

  டைடன் வாட்ச்சும் ஃபாஸ்ட்ட்ராக் வாட்சும் பின்னே ஞானும்..!!

  1464655_361573500653240_460095398_nவாட்ச்சை வலது கையில் கட்டுவதா
  இடது கையில் கட்டுவதா என்று
  கேட்டார் நண்பரொருவர்,

  மொபைல் போனில்தானே டைம் பார்க்கிறார்கள்,
  வாட்ச்சை எங்கே பார்க்கிறார்கள் என்றாலும்
  வாட்ச் என்பது ஸ்டேட்டஸ் சிம்பலாக/ஆபரணங்களில் ஒன்றாக
  ஆகிவிட்டது ஆண்களுக்கு.

  வியர்வையில் ஊறிக் கருத்துவிடும் தங்கக்கலர் வாட்ச்சுகள்
  பெரும் இடையூறாகவே இருந்தன,
  பெண்களுக்கோ ஃபார்மல் ட்ரெஸ் அணியும்போது டைடன்போன்ற தங்கங்கலர் வாட்ச் அணியவேண்டுமென்றும்
  ஜீன்ஸ் போன்ற கேஸ்வல் ட்ரெஸ் அணியும்போது ஃபாஸ்ட்ட்ராக்கின் இம்மாம்பெரிய வாட்ச் அணியவேண்டுமென்றும் ஆசை.

 • அரசியாரின் விருப்பத்திற்கேற்ப வாட்ச் அணீந்தாலும்
  நான் தனியாக இருக்கும் சமயங்களில் பெரும்பாலும்
  வாட்ச் இல்லாத சுதந்திரமான மனிக்கட்டோடுதான் .

  1424553_361575133986410_1073929599_nஎன் மகன் வலது கையில்தான் வாட்ச் கட்டுகிறான்,
  நானோ அரைக்கை சட்டை அணியும்போது மட்டும்
  இடது கையில் அணிவேன்.

  இன்று என் வலது கையிலிருந்த வாட்ச்சைப் பார்த்து
  “நீங்க மட்டும் வலது கையில் வாட்ச் கட்டிட்டு
  என்னை மட்டும் ஏன் இடது கையில் வாட்ச் கட்டச்சொல்றீங்க”
  என்று கேட்டார் மகன்,
  நான் புன்னகைத்தபடியே வாட்ச்சை இடக்கைக்கு மாற்றியபடியே சொன்னேன்,

  “சின்ன வயசுப் பழக்கம் ராஜா இது,
  யாராவது சில்லரை பாக்கி தரணும்னா இடது கையிலிருக்கும் வாட்ச்சை கழட்டி வலது கையில கட்டிக்குவேன்.டைம் பாக்கும்போது ஆட்டோமெடிக்கா ஞாபகம் வந்துடும்ல,
  அதான்.
  இந்தக்கடைல சில்லரை பாக்கியை போகும்போது வாங்கிக்கங்கன்னு சொன்னாங்கள்ல அதனால வாட்ச்சை மாத்திக் கட்டிக்கிட்டேன்”
  என்று..!!

  545889_350953645048559_2114030460_nNisha Mansur

  தகவல் தந்தவர் நிசா மன்சூர்

   
 • Tags: , , ,

  இன்னும் கொஞ்சம்

  இன்னும் கொஞ்சம்
  …. இன்னும் கொஞ்சம்
  இன்னும் இன்னும்
  …. இன்னும் கொஞ்சம்

  உன்னைக் கொஞ்ச
  …. உன்னைக் கொஞ்ச
  உன்னுள் என்னுள்
  …. மின்னல் மிஞ்சும்

  சின்னச் சின்னக்
  …. கன்னப் பாளம்
  கிள்ளக் கிள்ள
  …. நாடித் தாளம்

 • கண்ணில் பொட்டு
  …. கூட்டம் போடும்
  கைகள் பட்டு
  …. கோலம் ஆகும்

  பெண்ணே பெண்ணே
  …. என்னைக் கொன்று
  கண்ணைக் கட்டி
  …. உன்னைக் கொன்று

  என்னை விட்டு
  …. எங்கே போனாய்
  வண்ணம் கெட்டு
  …. விம்மும் பாவாய்

  ஊரும் பேச்சும்
  …. பின்னே வந்தது
  உயிர்கள் தானே
  …. முன்னே வந்தது

  மனங்கள் வாழா
  …. மணங்கள் எல்லாம்
  குணங்கள் கெட்டே
  …. குப்பை ஆகும்

  கண்ணின் மணியில்
  …. என்னைக் கொழுவு
  உன்னைப் பேணும்
  …. உயிரே எனக்கு

  மண்ணாய்ப் போகும்
  …. எண்ணம் போதும்
  மரணம் தொடவும்
  …. நீயே வேண்டும்

  உன்னால் என்னால்
  …. இயலாக் கதவை
  உண்மைக் காதல்
  …. உடைத்தே நொறுக்கும்

  உன்னுள் என்னை
  …. அள்ளிப் பின்னு
  இன்னல் வந்தால்
  …. விண்ணும் மண்ணு

  163084_181057961919385_7644604_nகவிதை யாத்தவர்
  அன்புடன் புகாரி

   
 • அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ சேமிக்கும் முன் யோசிக்கணும் !? ][பகுதி 13 ]

  சேமிக்கும் முன் யோசிக்கணும்…
  வளைகுடா வாழ்க்கையில் பல நிகழ்வுகள் கலந்த கலவை. சிலரின் குடும்ப தேவைகள் குறைவாகவும், சேமிக்கும் அளவிற்கு சம்பளம் கூடுதலாகவும் இருக்கும். சிலருக்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் பெரிய தொகை தேவைப்படும்.

  இது போன்ற தருணங்களில் நண்பர்கள் ஒன்று கூடி சீட்டு பணம் சேகரிப்பார். குறைந்தது பத்து நபர்கள். ஒவ்வொருவரும் இந்திய பணம் மதிப்பிற்கு ஐந்தாயிரம் வீதம் ஒவ்வொருவரிடமும் வசூல் செய்து சேரும் தொகையை ஒருவர் பின் ஒருவராக மாதா மாதம் விநியோகிக்கப்படும். இது அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

 • உடன் தங்கி இருப்பவர்கள் ஒரே ஊராக சொந்தம் பந்தமாக இருக்கும் தருவாயில் பண விநியோகம் சுமூகமாக அமையும். ஆனால் சில சந்தர்பங்களில் ஒரே வீட்டில் தங்கி இருப்பார். ஆனால் வெளியூர் நபராக இருப்பார்.

  இது போன்ற சீட்டு பணம் சேரும் நிகழ்வுகள் நடை பெரும் ..வெளியூரை சேர்ந்தவர் கம்பெனியில் பிரச்னை ஏற்பட்டு ஊருக்கு செல்லும் நிலையில் சீட்டு பணம் முதிர் தொகையை பெற்று கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஊர் சென்று விடுவர்.

  மீதமுள்ளவர்கள் தனக்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கு சீட்டு சேர்த்தவரிடம் தொந்தரவு செய்வார்கள் இதன் காரணமாக ஒரு வருட வருமானம் வரை சீட்டிற்கு கொடுத்து அழுதவர்களும் உண்டு. இது போன்ற சிறு சேமிப்பு செய்பவர்கள் சேமிப்பு திட்டத்தில் சேரும் நபர்கள் வேலையின் பின்னணி. உள்ளூர் காரராக இருக்க வேண்டும்.நாணயமுள்ளவராக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

  பண தேவை அவசியம் இல்லாதவர்கள் உள்ளூர் வங்கியில் கணக்கு துவங்கி பணம் சேகரிக்கலாம். சேமிக்கும் பணம் பற்றிய தகவல் ரகசியமாக வைத்து கொள்ளவும் .ஒவ்வொரு முறையும் விடுப்பில் ஊர் செல்லும்போது நிலதரகர்களை சந்திக்க தவறாதீர்கள். உங்களுக்கு முதலீடு செய்ய ஆசை வரும்…

  அரபு நாடுகளில் வியாபாரம் செய்யும் நபர்கள் கூட பணம் அதிக அளவில் இருப்பில் இருக்க சீட்டு சேர்ப்பார்கள் அவர்களும் பல பேர்கள் முழுமையாக பணம் செலுத்தாததின் காரணமாக கடும் சிரமம் ஏற்பட்டு சொந்த தொழிலை இலக்க நேரிட்ட சம்பவமும் உண்டு.

  நான் நேரில் பார்த்த சம்பவம் சீட்டு நடத்தியவரிடம் சிலர் மோசடி செய்துவிட்டு செல்ல…மற்றவர் பணம் கேட்டு நச்சரிக்க சிலர் தகாத வார்த்தை கூறி அழைக்க. அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

  நண்பர்களே ! சேமிக்க முன் யோசிக்க சொன்னது சரிதானே..!
  [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]

  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  http://nijampage.blogspot.in/2013/09/13.html

   
 • நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது?

  நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு, அதை மனதில் பத்திரப் படுத்திக் கொள்கிறோம். விவேக முள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

  நிறைய பேர், நட்பில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் நீங்கள் திருப்திப்படுத்த வேண்டியது மற்றவரை அல்ல. உங்களைத்தான்.

  மேலே இது சுயநலமல்ல. தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது.

  அப்படியெனில்,

  அன்போ, நட்போ தொடர்ந்து நிலைத்திருப்பதன் ரகசியம் என்ன?

  அன்பு வற்றாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்!

  ஜேனட்லூர் என்பவருடய ‘Simple Loving’ என்ற புத்தகம் சில எளிமயான யோசனகளை முன் வைக்கிறது.

 • உங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவருக்கு உகந்த வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும். மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே மரியாதை கொள்ளு ங்கள். உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.

  உண்மயான அன்பு பணத்தை வைத்து எடை போடக் கூடாது. அல்ல பொருளை பகிர்வதோடு நின்று விடக் கூடா.

  உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும் போது மற்றவர்கள் உங்களை மன்னித்து விட்டால் மட்டும் போதாது. நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும்.

  மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.

  நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது. உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப் போகும் அத்தன பேரிலும், உங்களை விட்டுப் பிரியாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான்.

  உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக, உற்சாகமாக, அர்த்தமுள்ளதாக வாழத் தொடங்கினால் போதும். உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகி போகாது.

  உங்கள் மனப்பான்மையைப் பொறுத்துத்தான் உங்கள் உறவு நீடிக்குமா, அல்ல காற்றில் கரந்த கற்பூரம் போலாகுமா எனச் சொல்ல முடியும்.

  மனப்பான்மை என்றால் என்ன?

  உங்களைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி, உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங் களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் நாளடைவில் உங்கள் நம்பிக் கையாக மாறி விடுகிறது. உங்களின் தீர்மானமான உணர்வுகள் நிரந்தர நிழலாய் மனதில் படிந்து விடுவதுதான் மனப்பான்மை

  உங்கள் உறவுகளின் அஸ்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?

  நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்

  இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்

  இன்றைய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்

  இன்றைய குணங்கள் தாம் அவருடய நாளைய விதி!

  எனவே ஆரோக்கியமான, வளர்ச்சியடையக் கூடிய மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில் புளித்துப் போகாது. ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது.

  ஆரோக்கியமான மனநிலைக்கு அடிப்படையே, நாம் நாமாக இருப்பதுதான்.

  அன்பு என்பது ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொள்வதல்ல. மாறாக இருவரும் சேர்ந்து ஒரே திசையில் பார்ப்பது. ஒருவர் அழகாக இருக்கிறார் என்பதற்காக நீங்கள் அவரை அன்பு செய்யக் கூடாது. நீங்கள் அன்பு செய்வதால்தான் அவர் அழகாக இருக்கிறார். ஷேக்ஸ்பியர் கேட்பது போல் கடவுள் உங்களுக்கென ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறார்! நீங்கள் ஏன் வேறொரு முகத்தைத் தேடுகீறீர்கள்?

  கோபென்ஹெகன் பல்கலக் கழகத்தின் இயற்பியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய வானளாவிய கட்டிடத்தின் உயரத்தை ஒரு பாரோமீட்டர் உதவியுடன் எப்படிக் கணக்கிடுவது? ஒ உடனே ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.

  பாரோமீட்டர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதை மெல்ல இறக் கவும். கயிற்றின் நீளம்+பாரோமீட்டர் நீளம்-இவயிரண்டயும் சேர்த்தால் கட்டடத்தின் உயரம் தெரியும்.

  அந்த மாணவன் பெயிலாக்கப்பட்டான். எனினும் தனித்தன்மை வாய்ந்த பதிலைக் கூறிய அந்த இளஞன் சோர்ந்து விடவில்ல. தாமாகவே பிரச்னை களுக்குத் தீர்வு கண்டு வந்த அவரின் பெயர் தான் நீல்ஸ்போர். இயற்பியலுக் காக நோபல் பரிசு வாங்கிய ஒரே டேனிஷ் நாட்டவர்.

  தனித் தன்மையுடன், இயல்பாக இருப்பதுதான் நாளடைவில் பெரும் வெற்றி களைப் பெற்றுத் தரும்.

  ஒரு நாள் இரண்டு நண்பர்கள் கடலில் படகு ஓட்டி சென்றார்கள். பெரியவர் ஜிம் படகை ஓட்ட, சிறியவரோ, ஒரு முனையில் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தார்.

  அன்றிரவு இருவரும் உணவருந்தும் போது ரே கேட்டார், ஜிம் காலையில் நாம் சென்ற கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாறைகள், கோர புற்கள் இருந்தனவே? எப்படி ஒன்றில் கூட மோதாமல் ஓட்டினீர்கள்?

  ஜிம் புன்னகைத்துக் கொண்டே சொன்னார்,

  அங்குள்ள ஒவ்வொரு பாறையையும் நான் இடித்துப் பழகி விட்டேன்!

  வாழ்க்கையில் நாம் படும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வதோடு, அத்தகைய வாழ்க்கை முறையிலிருந்து ஓடிவிடாமல், அதையே சிறப்பாக வாழ கற்றுக் கொள்பவர்தாம் சிறந்த மனிதர். நம்முடன் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை சுலபமாக அமையக் கூடும். நமக்கிருப்பது போன்ற துன்பங்கள் அவருக்கு வராமல் இருக்கக்கூடும். ஆனால் தொடர்ந்து போராடி வெற்றி பெறுங்கள். பிறகு உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தி யாசங்களை நீங்கள் உணர்வீர்கள்; கொஞ்ச காலத்தில் மற்றவர்களும் உணர்வார்கள்.

  நான் கற்றுக் கொண்ட சில விஷயங்கள்: (பலருடைய அனுபவங்களிலிருந்து)

  என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது. நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக் கொள்வதுதான். பிறகு அவர்கள் விருப்பம்.

  ஒரு சிலர் மீது நான் எவ்வளவு அக்கறை காட்டினாலும் அவர்கள் மீண்டும் என் மீது அக்கறை காட்டுவதில்லை.

  மற்றவர்களை ஒரு கால் மணி நேரத்திற்கு வேண்டுமானால் நம் அழகால் வசீகரப்படுத்தலாம். அதற்கு மேல் வசீகரப்படுத்த நமக்கு நாலு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

  மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் அதை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதான் எனக்கு முக்கியம்.

  வாழ்க்கையில் எனக்குப் பிடித்த மனிதனாக நான் மாற நிறைய காலம் பிடிக்கிறது.

  நான் அன்பு செய்பவரை விட்டுப் பிரியும் போது கனிவான வார்த்தையுடன் பிரிவது நல்லது. சிலசமயம் அவர்களை மீண்டும் சந்திக்காமலே போகக்கூடும்.

  இனி இவர்களுடன் அன்போடு பழகவே முடியாது என நினத்த பிறகும், நீண்ட காலத்திற்கு அன்போடு பழகலாம்.

  என் மனப் பான்மையை நான் கட்டுப் படுத்தாவிட்டால் அது என்னைக் கட்டுப்படுத்தி விடும்.

  எவ்வளவுதான் ஒரு உறவில் உணர்ச்சிகள் தலைவிரித்து ஆடினாலும் அதையும் மீறி நல்ல காரணங்கள் இல்லாவிட்டால் ஒரு உறவு நீடிக்காது.

  என்னை அன்பு செய்பவர்கள் நிஜத்தில் இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்லை.

  என் உற்ற நண்பருடன் சேர்ந்து ஏதாவது வேல செய்தாலும் சரி, சும்மா இருந்தாலும் சரி, அதைவிட மகிழ்ச்சியான நேரம் இருந்ததில்லை.

  நான் வாழ்க்கையில் தவறு செய்துவிட்டு, என்னை இவர்கள் அவமானப்படுத்த போகிறார்கள் என்று யாரைக் கருதினேனோ அவர்கள்தாம் நிறைய சமயம் என்னத் தூக்கி விட்டிருக்கிறார்கள்.

  நான் கோபப்படலாம். ஆனால் குரூரமாக நடக்கக்கூடாது.

  நான் விரும்பும் வகையில் மற்றவர்கள் என்ன அன்பு செய்யவில்ல என்பதற்காக அவர்கள் என்னை அன்பே செய்யவில்ல என அர்த்தம் கிடயாது.

  நன்றி: மரியசார்லஸ், நிலா முற்றம்
  நன்றி:http://niduri.com/?p=6836

   
 • ரியாத் சொல்வேந்தர் மன்றம் – திட்ட உரை சொல்வேந்தர் ஃபஹ்ருதீன் இப்னு ஹம்துன்

  ரியாத் தமிழ் சொல்வேந்தர் மன்றத்தில் சொல்வேந்தர் ஃபஹ்ருதீன் இப்னு ஹம்துன் அவர்கள் ” தமிழில் சிலேடை விளையாட்டு” என்ற தலைப்பில் நான்காம் திட்ட உரையை சமர்ப்பிக்கும் மிக அருமையான சொற்பொழிவு

  தமிழில் சிலேடை இன்பம் என்ற தலைப்பில் சொல்வேந்தர் மன்றத்தில் பேசினேன். பெண்ணையும் Pen னையும் வைத்து ஒரு சிலேடை வெண்பாவும் அங்கேயே தோன்றியது:

  மையிட்டுக் கொள்ளுதலால் மெய்த்தோற்றம் காட்டுதலால்
  கைப்பிடித்த தன்னவரின் காரியத்தை ஆற்றுதலால்
  காணா உலகினை காட்டித் தருதலால்
  பேனாவும் பெண்ணாமென் பேன்!

   
  1 Comment

  Posted by on November 9, 2013 in 1

   

  Tags: , , ,

  அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ அண்ணனை உறிஞ்சும் தம்பி !? ][பகுதி 12 ]

  1960களில் பஞ்சம் நிறைந்த காலங்கள் ! ஆனால் வஞ்சம் இல்லா வாழ்வு. ஒவ்வொரு தம்பதியர்களுக்கும் ஐந்து, ஆறு குழந்தைகள். அவ்வப்போது கொள்ளை நோய்களால் குழந்தைகள் இறந்து போகும் அது போக எப்படியும் நாலு பிள்ளைகள் பிழைத்து கொள்ளும்.

  குடும்ப தலைவனின் உழைப்பு தலைமகன் வளரும் வரைதான்… நான் கூறும் காலகட்டம் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைத்த காலம்…

  நான் கூற வரும் கருத்தின் நாயகன் வளைகுடா நாட்டிற்கு வேலை வாய்பிற்கு வருகிறான்… தந்தையின் கடமைகளை சுமந்தவனாக …( இரு தங்கைகள் ஒரு தனயன் ) ஒரு தங்கைக்கு மணமுடிக்க மூன்று வருட உழைப்பு ஊர்வந்து தங்கையின் மணக்கோலத்தை கண்டு மகிழ்ந்து போனார். மறுகணமே வளைகுடா பயணம் இரண்டாவது தங்கைக்கு கல்யாண ஏற்பாடு ஆனால் அண்ணனுக்கு விடுப்பு கிடைக்கவில்லை.

 • ஆனால் பலவகையில் கடன்பட்டு தங்கை கல்யாணம் சிறப்பாய் நடந்தேறியது. ஆனால் அதன் கடன் அடைந்தேற நான்கு வருடம் ஆகியது. மறு விடுப்பு நான்கு வருடம் கழிந்தே வர முடிந்தது. அரைகுறையாய் பள்ளிகூடம் சென்று சரியாய் படிக்காத தம்பி வாலிபனாய் காட்சி தந்தான். தனக்கும் கல்யாணம் செய்ய குடும்பத்தாரின் நிர்பந்தம். விடுப்பு நாட்கள் இரண்டு மாதமே இருந்த நிலையில் கல்யாணமும் நடந்தேறியது.

  மேற்படிப்பு படிக்க திராணியற்ற நிலையில் உள்ள தம்பியை வெளிநாட்டிற்கு அழைத்து கொள்ள தீர்மானித்தார். மணமான இனிய நினைவுகளை சுமந்தவனாக வளைகுடா வருகிறார். வந்த சில மாதங்களில் தம்பி வரவழைக்கபட்டான்.

  தனது கடமைகள் முடிந்து விட்டது என்று நிம்மதி அடைந்தார் அவர் ஆனால் வளைகுடா வந்த தம்பி சரியாக வேலைக்கு செல்லாமல் அண்ணனின் இடத்திற்கு வந்து அடைக்கலம் அடைந்தான். தான் வேலை பார்க்கும் நிலை தம்பிக்கு நன்றாகவே தெரியும். வாடகைகொடுப்பது, சாப்பாட்டு செலவில் பங்கு என்று தனது வருமானத்தின் மூன்றில் ஒரு பங்கு செலவாகும் நிலை அறிந்தும் அண்ணனின் கஷ்டத்தினை சற்றும் பொருள் படுத்தாது அவரது உழைப்பை உறிஞ்சும் உறவாய் அமைந்தான் தம்பி. பெற்றோர் சுமந்த மூத்த மகனின் நிலை ஒய்வு நாள் வரை ஓயாமல் போனதுதான் பரிதாபம் !

  * தம்பிகளே நல்ல அண்ணனை உறிஞ்சும் அட்டைகளாக ஆகி விடாதீர்கள்.

  * உறவுகளே உதவிய உறவை வாழ்நாள் முழுவதும் மறவாதீர்.

  அடுத்த வாரம்… சேமிக்க முன் யோசிக்கணும் !?
  [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]

  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  http://nijampage.blogspot.in/2013/09/12.html

   
 • Tags: