RSS

Monthly Archives: December 2013

ஒரு துளி கண்ணீர் !

1522077_571827859562614_388292366_nகடலே…
உன்னைப் பார்க்கவே
அச்சமாக இருக்கிறது
உன் வாயெல்லாம்
நீ தின்று போட்ட
பிணங்களின்
மிச்சமாக இருக்கிறது !

உன் மடி தவழ்ந்து வந்த
எங்களுக்கு
மீன் மடி தந்த கடலே …
எங்கள் திறந்த வீட்டின்
படியேறி வந்து
எங்கள் மடி தவழ்ந்த
பிள்ளைகளை
அடித்துப்போக
எப்படித்தான்
மனம் துணிந்தாய் ?

 • நெருப்பை அனைக்கத்தானே
  நீரை ஊற்றுவோம்
  நீரே திராவகமாக மாறிய
  கொடுமையை
  யாரிடம் கூறுவோம் ?

  கடலே..
  உன் தண்ணீரில்
  உப்பில்லையென்றா
  எங்கள் கண்ணீரைக்
  களவாடிச் சென்றாய் ?

  சுமித்ராவில்
  நிலம் நடுங்கியதற்காக
  சமுத்திரம் நீ
  நிலம் தாண்டலாமா ?
  எங்கள் குலம்
  தீண்டலாமா ?

  நித்தம் நித்தம்
  சூரியனே
  உன் வாயில் விழுந்தும்
  செத்து விழவில்லையே
  உன் சீற்றம் !

  மலைகளை விழுங்கியே
  பசி தீராத உனக்கு
  மனிதர்களை உண்டா
  வயிறு நிறையப் போகிறது ?

  உன் அலை ஓசையை விட
  உரத்துக் கேட்கிறதே
  நீ நடத்திய
  கொலை ஓசை !

  கடலே…
  நிலத்தை விடப் பெரிது என்ற
  திமிர் உனக்கு !

  தாயை உனக்குத்
  தாரை வார்த்து விட்டு
  பாலுக்கு அழும்
  பச்சிளம் குழந்தையின்
  ஒரு துளி கண்ணீர்
  உன்னை விடப் பெரிது !

  Abu_HaashimaAbu Haashima Vaver” நமது முற்றம் ” இதழில் நான் எழுதியது !

  Advertisements
   
 • 1 Comment

  Posted by on December 26, 2013 in 1

   

  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  img0006மனித மனமெனும்
  மயக்க நிலங்களில்
  கருணைப் பூவனம்
  குழுமிப் பூத்திட

  புனித நாயகன்
  பிறந்த நாளிதில்
  இனிய வாழ்த்துக்கள்
  இதய வாசலில்

  அலைகள் தொடுத்திடும்
  கடலின் ஞானமாய்
  நுரைகள் பூத்திடும்
  பாலின் வெண்மையாய்

  இரவைத் தேற்றிடும்
  நிலவின் இனிமையாய்
  உறவும் உலகமும்
  வாழ வாழ்த்துக்கள்

 • o

  வந்தது கிறிஸ்த்மஸ் பெருநாள்
  வாழ்த்துக்கள் தூவிடும் திருநாள்
  சந்தனச் சந்தங்கள் சிந்தியே
  சதிராடித் துள்ளட்டும் உள்ளங்கள்
  பந்தலில் மணப்பெண் கோலத்தில்
  பனிமலர் போலவே நீ இருக்கும்
  அந்தநாள் அருகினில் வந்ததனால்
  அதற்குமென் வாழ்த்துக்கள் இப்போதே

  கவிதை யாத்தவர் அன்புடன் புகாரி அவர்கள்
  http://anbudanbuhari.blogspot.in/2008/02/blog-post_4984.html
  S.E.A,Jinnah
  கிறிஸ்த்மஸ் பெருநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பவர்கள்
  கவிஞர் அன்புடன் புகாரி மற்றும் முகம்மது அலி ஜின்னா

   
 • Tags: ,

  தாய்தந்தை வேலியாய் தன்வாழ்வை சீர்படுத்தும்

  thank-you1வேலி

  தாரமே வேலியாய்
  தற்க் காத்திடும் மந்திரம்
  தாய்தந்தை வேலியாய்
  தன்வாழ்வை சீர்படுத்தும்

  பயிரையும் காத்திடும்
  உயிரையும் காத்திடும்
  பாரினில் வாழவே
  பாதுகாப்பது வேலியே

 • மானத்தை காப்பது
  மனமெனும் வேலியே
  மதியுணர வைப்பது
  அளவெனும் வேலியாய்

  வேலியை அமைத்த பின்
  மாளிகை கட்டினால்
  நாளொரு பொழுதெல்லாம்
  நலமுடன் விடியுமே

  வேலியில்லா யாதுமே
  வீதியில் துகில் பாடும்
  வீண்பழி சுமப்பதும்
  வேலியின் சாபமே

  மாளிகை யானாலும்
  மண் குடிலானாலும்
  வேலியே காவலாய்
  வீரமாய் நின்றிடும்

  வேலியே பயிரையும்
  மேய்ந்திடும் காலமாம்
  நாளிகை பொழுதினில்
  நடந்திடும் கொடுஞ்செயல்

  மாற்றங்கள் வாழ்வினில்
  ஏற்றமாய் மகிழ்விக்கும்
  மனத்தினின் வேலியே
  ஏணியாய் உயர்த்திடும்

  மனிதரில் புனிதரை
  கனிதரும் மரத்தினை
  அறிந்திடல் சிறந்ததே
  அரவணைக்கும் வேலியாய்

  அன்பெனும் வேலியை
  அகிலமும் அறியுமே
  பண்பெனும் பாதையில்
  பயணித்தால் இலாபமே

  வேலியை அமைத்திடு
  எல்லைகள் வகுத்திடு
  வீரனாய் வாழ்ந்திடு
  வாழ்வினில் சிறந்திடு

  51mmx51mmஅதிரை மெய்சா

  குறிப்பு : இந்தக் கவிதை கடந்த இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ…

  http://nijampage.blogspot.ae/2013/12/blog-post_22.html

   
 • பிரசவத்தை எளிதாக்க புது கருவி

  1424344_653704711346528_172303920_nபிரசவத்தை எளிதாக்க புது கருவி! அர்ஜென்டினா நபர் சாதனை

  அர்ஜென்டினாவை சேர்ந்த நபர் ஒருவர், பிரசவத்தை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
  அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன்.

  இவர் பிரசவ முறையை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

 • அதாவது பிளாஸ்டிக் பையை பயன்படுத்தி குழந்தையை மிக எளிதான முறையில் வெளியே எடுப்பது.

  இந்த புதிய கருவியை பற்றி ஜோர்ஜ், தனது நண்பருடன் சேர்ந்து மகப்பேறு மருத்துவரை சந்தித்து விளக்கியுள்ளார்.

  அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்க உதவினார்.

  இதனை தொடர்ந்து யூடியூப்பில் இணையத்தளத்தில் சோதனையை வெளியிட்டதுடன், மிகச் சிறந்த மருத்துவரான மரியோ மரியால்டியை சந்தித்து பேச வைத்தார்.

  இதுகுறித்து டாக்டர் மரியோ கூறுகையில், மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.

  அவற்றில் ஒன்று பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது.

  இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

  சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும்.

  ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது.

  இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும்.

  இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது.

  இதன்மூலம் சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும்.

  இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக் கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும்.

  இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.

  இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகப் பிரசவம் நடந்துள்ளது.

  இதனால் அறுவை சிகிச்சைகள் குறையும், இந்த முறையை இந்தியா, சீனா மற்றும் தெற்கு ஆப்ரிக்காவில் பயன்படுத்த உள்ளோம்.

  இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும்.

  இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து இந்த கருவியை தயாரிக்க உள்ளது.
  ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

  இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது.

  Source : http://kulasaisulthan.wordpress.com/2013/11/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/#more-6630

   
 • நாம் காதலிக்கிறோம்

  நம்மைவிட்டு
  ஓடிக்கொண்டிருக்கும் நதியை
  நாம் காதலிக்கிறோம்
  காலடியில் கிடக்கும் குளம்
  நம் முகத்தைப் பிரதிபளித்துக்கொண்டிக்கிறது

  ஓடிவந்த வேகத்திலேயே
  திரும்பிப்போய்விடும் அலைகளை
  நாம் காதலிக்கிறோம்
  காலடியில் கிடக்கும் மணல்வெளி
  நம் சுவடுகள் ஏந்திக்கிடக்கிறது

 • கண்களுக்கு எட்டி
  கைகளுக்கு என்றுமே எட்டாத
  உச்சிவான வெண்ணிலவை
  நாம் காதலிக்கிறோம்
  சூழ்ந்திருக்கும் இரவு நம் நித்திரையைத்
  தாலாட்டிக்கொண்டிருக்கிறது

  நம்மைக் காதலிக்காத ஜீவனோடு
  நாம் காலமெல்லாம்
  கனவுகளில் வாழ்வதும்
  நாம் காதலிக்கும் ஒரு ஜீவன்
  நம்மைவிட்டுத் தொலைதூரம் கிடப்பதும்தான்
  நாம் காணும் வாழ்க்கை என்றால்
  அதில் துக்கம் தவிர
  வேறென்ன இருக்க முடியும்

  காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

  kavithaiஅன்புடன் புகாரி
  163084_181057961919385_7644604_n

   
 • Tags: , , , , , ,

  கிறிஸ்மஸ் தாத்தா – ஒரு பின்னணி.

  indexதுருக்கி நாட்டின் மிரா நகரில் நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ ஆயராக (பிஷப்) வாழ்ந்தவர் தான் புனித நிக்கோலஸ். மனித நேயத்தின் சின்னமாக விளங்கிய நிக்கோலஸ் தேவையானவர்களுக்கு உதவுவதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். சிறுவயதில் வறுமையில் வாடிய நிக்கோலஸ் புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் உணவு உண்டு மற்ற நாட்களில் பட்டினியில் உழன்றிருக்கிறார்.

  வறுமையின் வீரியத்தையும், ஏழைகளின் துயரையும் நேரடியாகச் சந்தித்த அனுபவம் அவரை மனித நேயவாதியாக மாற்றியது. அவருடைய வாழ்க்கையில் குழந்தைகளை அவர் அபரிமிதமாக நேசித்தார். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் யாருக்கும் தெரியாமல் பரிசுகளை வைப்பதை மிக வும் ஆனந்தத்துடன் செய்து வந்தார்.

 • அவர் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்ட விதமே சுவாரஸ்யமானது. துருக்கியின் மிரா நகரில் ஆயராக இருந்தவர் இறந்து போக மற்ற ஆயர்கள் எல்லாம் ஒன்று கூடி புதிதாக யாரை அந்தப் பகுதியின் ஆயராக நியமிப்பது என்று ஆலோசிக்கக் கூடினார்கள். அப்போது அங்குள்ள ஆயர்களில் ஞானம் நிறைதவராக காணப்பட்ட ஒருவர், தான் இரவில் காட்சி ஒன்றைக் கண்டதாகவும் அதன்படி ஆலயத்தில் முதலில் நுழையும் நிக்கோலஸ் என்னும் பெயருடைய நபரே அடுத்த ஆயராகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று அந்த காட்சியில் தெரிந்ததாகவும் சொன்னார்.

  ஆயர்கள் அவருடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டு செபித்தினர். மறுநாள் காலையில் முதன் முதலாக ஆலயத்தில் நுழையும் நிக்கோலஸ் என்னும் நபருக்காக அனைத்து ஆயர்களும் காத்திருந்தார்கள். நிமிடங்கள் கரைந்தன, மணிகள் கடந்தன , ஒரு இளைஞன் ஆலயத்தில் நுழைந்தான். காத்திருந்த ஆயர்கள் அவனுடைய பெயரைக் கேட்க, நிக்கோலஸ் என்றான் அவன். ஆயர்கள் ஆனந்தித்தனர் அந்த இளைஞனையே கடவுள் சுட்டிக்காட்டிய புதிய ஆயரென ஏற்றுக் கொண்டனர்.

  குருவிக்குக் கூடு கட்டிக் கொடுக்க வேண்டுமென்றால் கூட தோப்புக்கே தோரணம் கட்டி அறிவிக்கும் இன்றைய சூழலிலிருந்து முற்றிலும் விலகி பணி செய்தார் நிக்கோலஸ். அவர் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் அவர்களையும் அறியாமலேயே உதவிகள் செய்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

  உதவி செய்வது கடவுளைத் தவிர யாருக்கும் தெரியக் கூடாது. ஏன் வலது கை தரும் தானம் இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்பது தான் விவிலியம் தரும் போதனை. அந்த போதனையின் படி வாழ்ந்த புனித நிக்கோலஸ், ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று இரவு நேரத்தில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குத் தேவையானதை வைத்து விட்டு வந்துவிடுவார்.

  அழுகையின் போர்வை போர்த்தித் தூங்கும் அந்த ஏழைகள் குதூகலப் பகலைச் சந்திக்க அந்த மனிதநேய மனிதர் செய்த செயலின் தொடர்ச்சி தான் இன்று கிறிஸ்மஸ் தாத்தாவாக வளர்ந்து நிற்கிறது.

  கிறிஸ்து பிறப்பு விழா இன்று ஒரு வர்த்தகப் பெருவிழாவாக உருமாறி இருக்கும் சூழலிலும், பரிசுகள் வழங்குவதையும், வாழ்த்துக்கள் வழங்குவதையும் தன்னகத்தே கொண்டிருப்பதால் அதன் அர்த்தம் நீர்த்துப் போகாமல் இருக்கிறது. இயேசு பிறந்தபோது மூன்று ஞானிகள் அவரைத் தேடி வந்து பரிசுகள் வழங்கியதையே இந்த பரிசு வழங்குதலின் மையமாகப் பார்க்கிறது கிறிஸ்தவம்.
  மேலை நாடுகளில் கிறிஸ்மஸ் மரத்தைச் சுற்றியும், கிறிஸ்மஸ் காலுறைகளுக்கு உள்ளேயும் பரிசுகளை மறைத்து வைத்து விடியற்காலையில் குழந்தைகளிடம் கிறிஸ்மஸ் தாத்தா இரவில் வந்து வைத்துவிட்டுப் போனதாகச் சொல்லி குதூகலிக்கும் குழந்தைகளின் மகிழ்ச்சியின் ஒளியில் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றனர்.

  புனித நிக்கோலஸைப் பற்றி பல வியப்பூட்டும் கதைகள் உலவுகின்றன. கி.பி 311 ல் மிரா நகரம் வறுமையில் தவித்தது. அப்போது அலெக்சாந்திரியாவிற்குச் சென்று கொண்டிருந்த உணவுக் கப்பல்கள் அங்குள்ள துறைமுகத்தை வந்தடைந்தன. புனித நிக்கோலஸ் சரக்கு கப்பல் பணியாளர்களிடம் சென்று மக்களுக்காக உணவு கேட்டார். அவர்களோ சரியாக எடையிடப்பட்ட உணவுகள் மட்டுமே கைவசம் உள்ளன, இதிலிருந்து ஏதேனும் எடுத்தால் அலெக்சாந்திரியா மன்னனின் கோபத்துக்கு தாங்கள் ஆளாக நேரிடும் என பயந்தனர்.

  நிக்கோலஸ் அவர்களிடம், ‘கடவுளின் பெயரால் சொல்கிறேன் யாருக்கும் எதுவும் குறைவு படாது’ என்று சொல்லி தானிய மூட்டைகளை எல்லாம் இறக்கி நகரில் வினியோகித்தார். சரக்கு கப்பல் பயணிகள் மிகுந்த அச்சத்துடன் அலெக்சாந்திரியா பயணமானார்கள். அங்கு சென்று தானியக் கிடங்கைப் பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள். காலியாக்கப்பட்ட தானியக் கிடங்கு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

  புனித நிக்கோலஸ் பற்றிய செய்திகள் சுமார் பதினொன்றாம் நூற்றாண்டில் தான் ரஷ்ய நாட்டில் நுழைந்தது. அவரை மக்கள் உதவியாளன் என்றே அன்புடன் அழைத்தனர்.

  1087ல் புனித நிக்கோலஸின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் துருக்கியிலிருந்து அகற்றப்பட்டது. அவை இத்தாலியிலுள்ள பேரி நகருக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஐரோப்பாவில் புனித நிக்கோலஸ் பெயர் நுழைவதற்கு அது காரணமாயிற்று. துருக்கியிலிருந்து அழிந்து போகாமல் காப்பாற்றப்பட்ட அவருடைய பொருட்களைப் பாதுகாக்கும் விதமாய் பேரி நகரில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. குழந்தைகள், கடலில் பயணம் செய்வோர், மீனவர் போன்றோரின் பாதுகாவலராக இவர் கத்தோலிக்கத் திருச்சபையினரால் புகழப்படுகிறார்.

  மார்டின் லூத்தர் கிங் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக பதினாறாம் நூற்றாண்டில் கிளர்ச்சி ஏற்படுத்தி புராட்டஸ்டண்ட் மதத்தை நிறுவியபின் புனிதர்களின் பெயர்களும், அவர்களுடைய புகழும் பெருமையும் பெருமளவுக்கு குறைந்து போயின. புனிதர்களின் சிலைகள் நொறுக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் களேபரமாய்க் கிடந்த அந்த அலையிலும் பெயர் இழக்காமல் கம்பீரமாய் நின்று நிக்கோலஸ் வெல்வதற்கு அவருடைய மனித நேயப் பணிகளே காரணம்.

  டிசம்பர் ஆறாம் தியதி தான் புனித நிக்கோலஸ் தினமாகக் கொண்டாடப் பட்டு வந்தது. அன்றைய தினம் வீடுகளின் புகை போக்கி வழியாக கிறிஸ்மஸ் தாத்தா வந்து பரிசுகளைத் தந்து செல்லும் தினத்தைக் கொண்டாடுவது பதினான்காம் நூற்றாண்டுகளில் இருந்த வழக்கம். இன்றும் ஐரோப்பாவின் பல இடங்களில் புனித நிக்கோலஸ் நினைவு விழா டிசம்பர் ஐந்தாம் தியதி இரவு தான் நடக்கிறது. பரிசுகள் வழங்கும் தினமாக அந்த நாளை அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

  ஸிண்டர் கிளாஸ் என்னும் டச் வார்த்தையின் அமெரிக்க வடிவமே சேண்டா கிளாஸ். அமெரிக்காவிற்கு வந்து குடியேறிய மக்களிடமிருந்து இந்த கிறிஸ்மஸ் தாத்தா வழக்கம் அமெரிக்காவிற்குள் குடியேறியிருக்க வேண்டும்.

  பதினெட்டாம் நூற்றாண்டுவரை நினைவுகளின் இடுக்குகளிலிருந்து நிகழ்வுகளுக்கு வருடம் தோறும் வந்து கொண்டிருந்த இந்த நினைவு விழா அதன் பின் வியாபார வட்டாரத்துக்குள் விழுந்தபின் தான் பிரபலமடைந்தது. பரிசுகள் வழங்குவதும், வாழ்த்து அட்டைகள் பரிமாறுவதும், பொம்மைகள் தயாரிப்பதும் என கிறிஸ்மஸ் தாத்தாவும் பிரபலமடையத் துவங்கினார்.

  1822ல் வெளியான ‘ எ விசிட் ஃப்ரம் செயிண்ட் நிக்கோலஸ்’ என்ற பாடல் ( எ நைட் பிஃபோர் கிறிஸ்மஸ் ) கிறிஸ்மஸ் தாத்தாவைப் பற்றி விளக்குகிறது. அவர் பைப் புகைத்தபடி வருவார், ஒரு பெரிய பையில் குழந்தைகளுக்காக பொம்மைகள் சுமந்து வருவார், மூக்கு செர்ரி பழம் போலவும், கன்னங்கள் ரோஜா பூ போலவும் ஜொலிக்கும், வெண்தாடி மிருதுவான பனியைப் போல அலையும் என்றெல்லாம் விவரிக்கும் இந்த பாடல் உலகப் புகழ் பெற்றதாகி விட்டது. இந்தப் பாடலே கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவத்தை ஒரு பொதுவான சித்தரிப்புக்கு இட்டுச் சென்றது.

  கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு குதிரை பூட்டிய விசேஷ வண்டி ஒன்று உண்டு. நெதர்லாது, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் கிறிஸ்மஸ் தாத்தா வெள்ளைக் குதிரையில் வருகிறார். பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் கழுதை மேல் அமர்ந்து வருகிறார். நவீன யுகத்தில் சமீபத்தில் ஹெலிகாப்டரில் தாத்தா வந்திறங்கியது புதுமைச் செய்தி.

  இத்தாலியில் பிஃபானா என்னும் கிறிஸ்மஸ் பாட்டி இருந்திருக்கிறார். இப்போதைய கிறிஸ்மஸ் தாத்தாவைப் போலவே குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்.

  கிறிஸ்மஸ் தாத்தா இன்றைய கொண்டாட்ட விழாக்களில் ஒரு கோமாளியாகவோ, குழந்தைகளுக்குச் சிரிப்பூட்டும் ஒரு நபராகவோ, சாக்லேட் வழங்குபவராகவோ தான் இருக்கிறார். அவருடைய வாழ்வு அப்படிப்பட்டதல்ல, வாழ்வின் வெற்றிடங்களை மனிதநேயம் கொண்டு நிரப்புவதே அவருடைய பணியாக இருந்திருக்கிறது.

  1464661_684281804936176_625307943_nநமக்குத் தெரிந்தவர்களுக்கோ, நண்பர்களுக்கோ , உறவினர்களுக்கோ பரிசுகள் வழங்குவது விழாவையோ, புனித நிக்கோலஸின் நினைவையோ அர்த்தப்படுத்தாது. யாரும் நினைக்காத ஏழைகளையும், நிராகரிக்கப்பட்டவர்களையும் பரிசு கொடுத்து அரவணைப்பதே விழாவை அர்த்தப்படுத்தும். விழா நாயகன் இயேசுவே சொல்கிறார் ‘உங்களை அன்பு செய்பவர்களையே நீங்களும் அன்பு செய்தால் அதனால் எந்த பயனும் இல்லை.

  நன்றி : களஞ்சியம் இதழ்

  aசேவியர்.

   
 • 1 Comment

  Posted by on December 18, 2013 in 1

   

  Tags:

  அன்பு _ கவிஞர் கண்ணதாசன்

  imagesதுன்பம் செய்யும் பகைவரைக் கூடத்

  தொழுதிட வைப்பது அன்பு

  சுயநலம் நிறைந்த மனிதர் மனதை

  சுத்தம் செய்வது அன்பு

  கல்லாலடித்த எதிரியைக் கூடக்

  காத்தார் நபிகள் நாயகம்,– அந்தக்

  கருணைத் தெய்வம் காட்டிய வழியில்

  நடந்தது மனிதர் தாயகம்.

 • கால்கள் ஒடிந்த ஆட்டை எடுத்துத்

  தோளில் வைத்தார் புத்தர்பிரான் –அன்பு

  கனிந்த இதயம் காலம் கடந்து

  கலந்து நிற்குது பூமியெல்லாம்

  வெடிக்கும் பீரங்கிப் படைகளைக் கொண்டு

  வெள்ளையர் வந்தார் நாட்டினுள்ளே-அன்பில்

  விளங்கிய காந்தி சிரிப்பினில் அவரை

  விரட்டி விட்டாரே வெளியினிலே

  வலது கன்னத்தில் உன்னையடித்தால்

  இடது கன்னத்தை காட்டிவிடு-உன்னை

  வஞ்சம் தீர்க்க வருபவன் கையில்

  அன்பென்னும் விலங்கைப் பூட்டிவிடு

  ஆயிரம் கோர்ட்டில் தீரா வழக்கும்

  அன்பினில் தீர்ந்து விடும்-எதிர்த்து

  அடிப்பதை மறந்து அணைக்கத் தெரிந்தால்

  குழப்பம் தெளிந்து விடும்

  செல்வம் படைத்தவர் இறந்தால் அவரைத்

  தெருவும் மறந்துவிடும்-அன்பைச்

  சேர்த்து வளர்த்தவர் இறந்தால் இவர் பேர்

  சிலையாய் வளர்ந்து விடும்

  மனதை திறந்து வைத்துவிடு

  மயக்கம் இருந்தால் எடுத்து விடு

  அன்பை அதிலே நிரப்பிவிடு

  ஆயுள் முழுதும் நீந்திவிடு

  1376597_584901651547189_743675054_nதகவல் தந்தவர்:
  கனியூர் இஸ்மாயில் நாஜி
  kaniyur ismail najee

 •