RSS

அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ குடும்பத்தை மறந்தவன் !? ][பகுதி 14 ]

10 Dec

masha_Allahமனைவி மக்களை மறந்த தலைவன்…
நான் கூறிவரும் தகவல்கள் 1990 களில் நடந்த நிகழ்வுகள். பொறுப்பற்ற இரு தலைவன் பற்றிய தகவல்கள் படிப்பினைக்காக தருகிறேன்.

குடும்பத்தின் வறுமையை போக்க உள்ளூரில் பொறுப்பில்லா ஒருவரை குடும்பத்தார் வளைகுடா நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆறுவயது பெண் குழந்தையின் தந்தையான அவர் தனது குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

பிள்ளையை பிரிய மனசில்லாமல் பிரிந்து சென்றார். அவர் சென்ற நாட்டை பார்த்து பிரமித்து போனார். உடனே வேலையும் கிடைத்தது. முதல் மாத சம்பளத்தில் .அன்பு மகளுக்கு ஆசையாய் ஒரு கவுன் வாங்கி வந்தார். எப்படி அனுப்புவது என்று புரியாமல் திகைத்தார். பெட்டிக்குள் வைத்துவிட்டு பிறகு அனுப்ப தருணம் பார்த்து கொண்டு இருந்தார்.

 • வேலைக்கு சென்று விட்டு வந்து பிள்ளை ஞாபகம் வரும் போதெல்லாம் பிள்ளையின் உடையை பார்ப்பார். காலம் செல்ல செல்ல… ஊர் ஞாபகம் மறந்து போக…

  கூடாத நட்பு ..வேண்டாத பழக்கம் சேர்ந்து கொள்ள வேலைக்கு செல்லும் நேரத்தை சுருக்கி கொண்டு குடிப்பது, சூது விளையாடுவது என்று நேரத்தை வீணடிக்க வருடங்கள் கரைந்தோடின…

  மகள் வயதுக்கு வந்து விட்டாள். தொடர்பு குறைந்த சூழல் ..அந்த பிள்ளைக்கு நல்ல வரன் வரவே தந்தை வரவை எதிர்பார்த்தனர். எந்த தகவலும் இல்லை விடுப்பில் வருவோரிடம் செய்தி சொல்லி அனுப்பியும் பலனில்லை.

  நல்ல வரனை கைவிட மனமில்லாமல் குடும்பத்தார் அப்பிள்ளைக்கு மணமுடித்து வைத்தனர். காலம் தனது பயணத்தை தொடர்ந்தது ஆறு வருடம் கடந்தது…

  பொறுப்பில்லா அம்மனிதனின் உடல் நிலை நோய் வாய்பட உடன் இருந்தோர் வற்புறுத்தி ஊருக்கு அனுப்பி வைத்தனர். தான் கொண்டு வந்த பொருட்களில் முக்கியமான ஒன்றை எடுத்து வைத்தார். மகளுக்கு வாங்கிய கவுனை காட்டினார். அந்த கவுன் மகளின் மகளுக்கு அதாவது பேத்திக்கு சரியாக இருந்தது.

  கேட்கவே காமெடியாக இருந்தாலும் மிக மோசமான நிகழ்வு என்பேன் ! வாழ்வையும் தொலைத்து எந்த பலனும் இல்லா வாழ்க்கை. பிழைக்க வந்த இடத்தில் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்வை வீணாக்கி நம்பி இருக்கும் குடும்ப மகிழ்வையும் வீணடிக்காதீர் என்பதற்கான பதிவே இது.

  அதே போன்று வேறு ஒரு நிகழ்வை பதிய விரும்புகிறேன்…
  அன்பின் பரிமாற்றத்தின் முக்கிய பங்கு போன் பேசுவதில் உண்டு. நீண்ட காலம் வளைகுடாவில் வசித்து வந்த ஒருவர் தனது மனைவிக்கு போனில் தொடர்பு கொள்கிறார் ஏனோ தெரியவில்லை போனில் வாக்குவாதமாக மாறி போனது.

  அக்காலகட்டம் தொலைபேசி வசதியான வீட்டில் மட்டுமே இருக்கும். கணவனுக்கு போன் பேச பக்கத்து வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டிருந்த பெண் அழுத வண்ணம் ஆவேசமாக தனது வீட்டிற்கு போய் தனது அறைக்குள் சென்று தாழிட்டு தூக்கில் தொங்கி தன்னை மாய்த்து கொண்டார்.

  மனைவியை கோபமாக பேசிய நபருக்கு இது தெரியாது. வளைகுடாவில் கடிதம் வர ஏழு எட்டு நாட்கள் ஆகும். ஆனால் செய்தித்தாள் இரண்டாவது நாளே வந்து விடும். செய்தி தாளில் தனது மனைவி சாவு செய்தி கேட்டு அதிர்ந்து போனார். அவர் ஊருக்கே செல்லவில்லை. மனைவியின் சொந்தம் சும்மா விடாது என்பதால் அந்த முடிவு. வாழ்வை தொலைத்து வீணாகி போனார்…

  வறுமையை போக்க வளைகுடா வரும் அன்பர்களே…
  பணம் ஈட்டுவதில் மட்டுமே குறியாக இருங்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு மேல் தங்கி விடாதீர்கள் ! பணம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அன்பும் முக்கியம் !

  அடுத்த வாரம் நாடாறு மாதம் காடாறு மாதம் !?
  [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]
  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  http://nijampage.blogspot.in/2013/10/14.html

  Advertisements
   
 • 1 Comment

  Posted by on December 10, 2013 in 1

   

  Tags: , , , ,

  One response to “அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ குடும்பத்தை மறந்தவன் !? ][பகுதி 14 ]

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: