RSS

அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ காடாறு மாதம் !? நாடாறு மாதம் !? ][பகுதி 15 ]

02 Jan

adirai news - nijam pageகாடாறு மாதம் !? நாடாறு மாதம் !?
பழங்காலத்தில் விவசாயிகள் தனது வாழ்க்கையை பற்றி கூறும்போது காடாறு மாதம் நாடாறு மாதம் என்பர். அதாவது பணபயிர் எனப்படும் சோளம், கரும்பு போன்ற பயிர் விளைவிக்கும் போது அதனை பாதுகாக்கும் பொருட்டு மரத்தின் மேல் குடில் அமைத்து, மிருகங்கள் விளைநிலத்தை சேதப்படுத்தாமல் பாதுகாப்பர். கதிர் முற்றிய பின்னர் களவு போகாமல் பாது காத்து வருவர். நன்கு விளைந்த பின்னர் அதனை நகருக்குள் கொண்டு வந்து விற்பனை செய்வர். இதற்கு ஆறுமாத அவகாசம் தேவைப்படும் அதனையே நாடாறு மாதம் காடாறு மாதம் என்பர்.

  • ஆனால், நான் கூற வரும் நிகழ்வு வளைகுடாவில் வசித்த நபர் பற்றியது…
    ஆறு மாத காலத்திற்கு மேல் வளைகுடாவில் வசிக்க மாட்டார். ஏதாவது ஒரு அரபியிடம் விசா பெற்று அந்த அரபியிடம் வேலை பார்க்காது வேறு இடத்தில் வேலை செய்து வருபவராக இருந்தார். ஆறுமாதம் வேலைப்பார்த்து கிடைக்கும் பணத்தில் ஊருக்கு போக வர விமான டிக்கெட் எடுப்பது நான்கு மாதம் ஊரில் இருந்து செலவு செய்ய போதுமான பணம் வைத்து கொள்வது.. இப்படியாக பத்து வருடத்தினை கழித்து விட்டார்.

    மனைவி, மக்கள் செல்வ செழிப்பில்லா வாழ்விலேயே வாழ்ந்தனர். கால போக்கில் அவர் வாழ்வில் முதுமையுடன் நோயும் ஒன்று சேர்ந்து கொள்ள வளைகுடா பயணம் தடைபட்டு போனது. முதிய வயதை கழிக்க எந்த வித வசதியும் இல்லாமல் பஞ்ச பராரியாய் கடைவீதியிலும், டீக்கடை வாசலிலும் வருவோர், போவோரிடம் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளபட்டார். மனைவி கசந்த வாழ்க்கைக்கு தள்ளப்பட்டார். பிள்ளைகளும் பாராமுகமாக இருந்திடவே !

    இவாரா !? அவர் !? என்று வியக்கும் நிலைக்கு ஆளானார் !

    மனம் போன போக்கில் போகாமல் மனதை கட்டுப்படுத்தி, உழைத்து வந்த நோக்கினை நிறைவு செய்ய வேண்டும் என்ற நல் நோக்கில் இந்த பதிவை வெளியிடுகிறேன்.

    மனைவி மக்கள் உங்களின் உழைப்பை நம்பி வாழும் காலங்களில் நீங்கள் நன்கு உழைத்து குடும்பத்தினை காப்பாற்றினால் நீங்கள் முதுமையில் நன்கு கவனிக்க படுவீர்கள் என்பது திண்ணம்.
    [ வளைகுடாப்பயணம் தொடரும்… ]

    sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
    அதிரை சித்திக்
    Source : http://nijampage.blogspot.in/2013/10/15.html

    Advertisements
     
  • Tags: ,

    One response to “அதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ காடாறு மாதம் !? நாடாறு மாதம் !? ][பகுதி 15 ]

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: