RSS

தோள் கொடுத்த தோழர்கள்…

02 Jan

”ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடையும் போது தேசம் தூக்கத்தில் இருந்தது….
ஆங்கிலப்புத்தாண்டுகள் பிறக்கும்போதோ
தேசம் போதையில் இருக்கிறது…

மது வெறியும், மத வெறியும் மாபெரும் சவால்களாய் நம் முன்னால் இருக்கின்றன…
எதிர்கொள்ள வேண்டிய இளையதலைமுறையோ டாஸ்மாக்கில் தள்ளாடுகிறது…

 • புத்தாண்டு கொண்டாட புட்டியைத் திறக்கும் கூட்டம், புத்தியைத் திறக்கவேண்டும்…
  மயக்கத்தை ஒழித்து ,மனிதம் காக்கும் இயக்கத்தை முடுக்க வேண்டும் என்ற நோக்கில்

  கலை இலக்கிய இரவு 2014 ஐ நடத்தும் பாசமிகு தோழர்களே…”

  எனத் துவங்கி உரையை சுமார் 1மணி நேரம் தொடர்ந்தேன்…

  கலையாமல் அமர்ந்திருந்து கண்ணியம் செய்தார்கள் த.மு.எ.க.ச வின் தோழர்கள்,தோழியர்கள்,மற்றும் கலைஞர்கள்…

  மனித குலத்தைக் கூறுபோடும் குலவெறி,நிறவெறி,மொழிவெறி, உள்ளிட்ட அனைத்து வெறிகளையும் ஒழித்து,
  போதையின் சுவடுகூட இல்லாமல் அழித்து,
  நபிகள் நாயகம் உருவாக்கிய புரட்சிகர சமூக அமைப்பைப் பற்றி பேசியபோது,
  ஆர்வத்தோடு கேட்ட மிகப்பெரிய கூட்டத்தினரில் 99 விழுக்காட்டினர் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள்…

  வடக்கில் பிறந்த கிழக்கு என்ற அம்பேத்கர் குறித்த அருமையான நாடகம் உரைக்கு முன்பு அரங்கேற்றப்பட்டது.

  அரசியல் நிர்ணய அவைக்கு அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட முஸ்லிம்கள் காரணமாக இருந்ததைக் குறிப்பிடதோடு…தந்தை பெரியாரின் களப்பணிகளையும் மறவாது பதிவு செய்தேன்..

  கலை என்பது ஆபாசமும்,வன்முறையும்,அர்த்தமற்ற அபத்தங்களும் அல்ல…
  கலை என்பது சமூக சிந்தனையை உருவாக்கும் கருவி எனக் காட்டிவருகின்றனர் தமுஎகச தோழர்கள்..

  1993ல் திருவாரூர் கலை இரவின் மேடையில் சகோ.பாரதிகிருஷ்ணகுமார் முன்னிலையில் பள்ளிமாணவனாக பாபர் மஸ்ஜித் இடிப்புக்கெதிரான கண்டனக் கவிதையைப் பதிவு செய்தேன்..

  இன்றோ,
  புத்தாண்டு பிறந்ததும் முதல் உரையை எங்கள் மேடையில் ஆற்றுங்கள் என்று பாசமாகக் கேட்டு கௌரவம் செய்தார்கள் தோழர்கள்..

  சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் கருத்துள்ள பாடல்களை தபலாவையும் வாசித்துக் கொண்டே பாடி அசத்திய திருவுடையான், மிக நெகிழ்ந்து பாராட்டியதோடு, ”உங்கள் உரையோடு உறவுடைய ஒரு பாடலைப் பாட உள்ளேன் கேட்டுவிட்டுபோங்கள் “ என்றார்..

  ”கங்கையிலே தண்ணீர்வரலாம்…கண்ணீர் வரலாமா?” என்று தொடங்கும் அந்தப் பாடலை அவர் பாடியது உள்ளங்களை உருக்கும் வகையில் இருந்தது..

  மதவெறி ஃபாசிசத்துக்கெதிராக குரல் கொடுக்கும் வீரர்கள்…
  தோள் கொடுக்கும் தோழர்கள்..

  11839_102682326423182_253403_nHaja Gani ஹாஜா கனி

  Advertisements
   
 • One response to “தோள் கொடுத்த தோழர்கள்…

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: