RSS

பிறப்பு முதல் இறப்பு வரை எல்லோரையும் சார்ந்து வாழும் மக்கள் நாம்.

02 Jan

ROSEB017மாற்றுமத கலாச்சாரங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் நாமும்
நம் சமுதாயமும் எப்படியெல்லாம் வசப்பட்டுக் கிடக்கின்றோம்
என்பதை சிந்தித்தால் நம் பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இருக்காது.

முதலில் நாம் அணியும் ஆடைகள் முஸ்லிம் கலாச்சாரத்தின்படி இல்லை. நமது ஆடைகள் என்ன என்பதே நமக்குத் தெரியாது. நாம் போடுவது ஆங்கில பேண்டும் சர்டும் . கேட்டால் அது நமது வசதிக்கு என்று சொல்வோம் .

நாம் பேசும் மொழி இஸ்லாமிய மொழி இல்லை. குர் ஆனின் மொழி அரபி. நாம் ஆங்கிலம். சமயத்தில் தமிழ். கேட்டால் நம்மை
படிக்காத முட்டாள் என்பார்கள்.

நாம் உண்ணும் உணவு இஸ்லாமிய உணவு இல்லை. பேரீத்தங்கனியும்
குபுசும் கஹ்வாவும் கிடையாது. பிராய்லர் சிக்கன். மேலை நாட்டவன்
கண்டு பிடிச்ச உணவு அது .மீன் கிறிஸ்தவர்கள் பிடித்து வருவது.

 • அமெரிக்க யூத தயாரிப்புகளான பெப்சியும் கோலாவும் அதைச் சார்ந்த எண்ணற்ற பானங்களும் குடிக்காத ஆணும் பெண்ணும் நம்மிடம் இல்லை. கேட்டால் இதெல்லாம் தப்பில்லை என்று பதில் வரும் .

  நாம் பல்தேய்க்கும் பேஸ்ட்டும் பிரஷ்ஷும் நம்முடையதில்லை.
  அது மேலை நாட்டுக்காரனுக்கு உரியது. நம்முடையது மிஸ்வாக்.
  இனிக்க இனிக்க ஹதீஸ் சொல்லும் அன்பர்களின் பளிச்சிடும் பற்கள்
  கோல்கேட் பற்பசை கொண்டு துலக்கப்பட்டவை. கேட்டால் ” போப்பா ” என்று பற்களைக் காட்டி சிரிப்பார்கள்.

  குளிக்கும் போது நம் மேனியில் புரளும் சோப்புகள் நம்முடையவை
  அல்ல. அதுவும் மேலைநாட்டுக்காரன் தந்தது. உங்கள் மேனி எழிலுக்கு
  லக்ஸ் என்பதை நாம் மணக்க மணக்க சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
  கேட்டால்… இதெல்லாம் தப்பில்லை என்று சொல்வார்கள்.

  முகத்துக்கும் கழுத்துக்கும் பூசும் வாசனைப் பவுடர். யார்ட்லிதான்
  வேணும்னு கேப்பாங்க. நம்மது இல்ல அது.
  பாய்சன் , எஸ்டி ன்னு உயர்தர சென்ட் வகைகள் பீச்சிகிட்டு போனாத்தான் மணக்கும். அதுவும் நம்முடையது அல்ல.

  குழந்தைகளுக்கு போடும் ஜான்சன் சோப்பு ஜான்சன் கிரீம் ஜான்சன் பவுடர் போன்றவை இஸ்ரேல் தயாரிப்பு. அதைத்தான் போடணும் என்பது கட்டாயம். கேட்டால் குழந்தைக்கு போடுரதைப் போயி…ன்னு நம்மை எதிரியை பார்ப்பதுபோல் பார்ப்பாங்க.

  சரி போகட்டும் விடுங்க…
  விதவிதமா ஐ போன் , ஆப்பிள் , சோனி, சாம்சங் கைப்பேசிகள் பயன்
  படுத்தலாமா ? அதை யார் கண்டு பிடிச்சா ? லேப்டாப், கம்ப்யூட்டர் உபயோகிக்கலாமா ? எல்.சி.டி ., எல்.ஈ.டி. டிவி பார்க்கலாமா ? அதுவெல்லாம் யார் தயாரிப்பு ? கேட்டால் விஞ்சானம் னு சொல்வாங்க.

  கார் பைக்கு எல்லாமும் அப்படித்தான்.
  சரி வெளிநாட்டுக்கு போறாங்களே விமானத்திலே…அதிலே ஏறலாமா ?
  கேட்டா இதுக்கும் மார்க்கத்துக்கும் சம்பந்தமில்லேன்னு சொல்வாங்க.

  மருந்து இருக்கே மருந்து. அதுவும் நெஞ்சுவலி, கிட்னி நோய்களுக்கெல்லாம் வெளிநாட்டு மருந்து வந்தாத்தான் குணமாகும்.
  யூதனும் நஸ்ரானியும் கண்டு பிடிச்சது.
  யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா ?

  அட …குழந்தை பிறக்குதே .. எங்கே? அவங்க ஆஸ்பத்திரியிலதானே ?
  ” நீ அச்சப்படாதே … நான் உன்னோடு இருக்கிறேன் ” ன்னு கர்த்தர் சொல்ற படத்துலதான குழந்தை கண் முழிக்கணும் ?
  மேரி டாக்டரும் ஸ்டெல்லா நர்சும்தானே பிள்ளைப்பேறு பார்க்கணும் ?
  சரியான்னு கேட்டா அடிக்கவே வருவாங்க .

  வீடு கட்டணும்லா..? யாரு கட்டுவா ? அவங்கதான் வரணும் . அவங்க கட்டின வீட்டிலேதான் நமக்கு சுகமா தூக்கம் வரும்.

  விடுங்க… செத்துப்போறோம் .. குழி தோண்ட ஆள் கிடையாது. பச்சமாலும் எசக்கிமாடனும்தான் வந்து தோண்டனும். அந்த குழியிலே போயி படுக்கலாமா ?
  அப்படிப் படுத்தா கேள்வி கணக்கு எப்படி இருக்கும் ? யாருக்கும் தெரியாது.

  இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை எல்லோரையும் சார்ந்து வாழும் மக்கள் நாம்.
  இதில் பெரிய வீராப்பாக நான் புத்தாண்டு வாழ்த்து சொல்ல மாட்டேன்
  என்று சொல்வதெல்லாம் ” நான் பல் தேய்க்க மாட்டேன் ” ன்னு சொல்றது மாதிரிதான்.
  Abu_Haashima
  Abu Haashima Vaver

  Advertisements
   
 • One response to “பிறப்பு முதல் இறப்பு வரை எல்லோரையும் சார்ந்து வாழும் மக்கள் நாம்.

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: