RSS

மனித நேயமும் நல்லிணக்கமும்

02 Jan

ROSEB017
(விசுவாசிகளே)! மார்க்க வியத்தில் உங்களுடன் எதிர்த்து யுத்தம் புரியாத, உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளிப்படுத்தாதவர்களுக்கு நீங்கள் கருனை காட்டி நன்மை செய்ய வேண்டாமென்றோ, அவர்களுடன் நீங்கள் நிதானமாக நடந்து கொள்ளக் கூடாதென்றோ அல்லாஹ் உங்களை தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிப்பவனாகவே இருக்கிறான். (அல் குர் ஆன்)

கலீபா உமர் (ரழி) அவர்கள் ஜெருஸலத்தைக் கைப்பற்றிய போது அங்கிருந்த மாதா கோயிலின் பாதிரியார், தொழுகை நேரம்வந்த போது கலீபா அவர்களுக்கு உள்ளே சென்று தொழுமாறு வேண்டினார்கள் என்றாலும் கலீபா நான் இதனுள் இன்று தொழுதால் முஸ்லீம்கள் இம் மாதா கோயிலை மஸ்ஜிதாக்கி விடுவார்கள்” என்று எண்ணியவராக மாதா கோயிலின் வெளியே தொழுது மாதா கோயில் பள்ளிவாசல் ஆகக் கூடாது” என்றார்கள்.

  • பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நஜ்ரான் பிரதேத்திலிருந்து வந்த 60 பாதிரியார்களைக் கொண்ட தூதுக்குழு சந்தித்த போது அந்த தூதுக்குழுவினரை பள்ளிவாசலினுள் பிரார்த்தனை செய்ய அனுமதித்தார்கள்.

    சமூக நல்லிணக்கம் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுவதை கவனியுங்கள் மானிடர்களே ” நீங்கள் யாவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவீர். மேலும் நானே உங்கள் யாவருக்கும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவீர். மேலும் நானே உங்கள் யாவருக்கும் ஒரே இறைவன் எனவே என்னையே வணக்குங்கள். (குர்ஆன் )

    மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறுல்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர். (குர்ஆன் 10:19)

    வாழ்த்துங்கள். வாழுங்கள். வாழ விடுங்கள்.

    வாழ்த்துகள மகிழ்வை தருகின்றது
    வாழ்த்துகள வயதை உயர்த்துகின்றது
    வாழ்த்துகள பண்பட வைக்கின்றது
    வாழ்த்துகள் மனித நேயத்தை தருகின்றது
    வாழ்த்துகள் உந்து சக்தியை தருகின்றது
    வாழ்த்துகள் வரவேற்பை தருகின்றது

    இறைவனை வாழ்த்திதான் வேண்டுகின்றோம்
    இல்லங்களில் வாழ்த்திதான் வரவேற்கின்றோம்
    இயலாதவனயும் வாழ்த்தும்போது வாழ்கையை விரும்புகின்றான்

    வாழ்த்துவதில் நாளென்ன! கிழமையன்ன!
    வாழ்த்துவதில் ஜாதியென்ன! மதமென்ன!
    வாழ்த்துபவர் மனிதஇனம் தானே.
    வாழ வழியை காட்டியதுதானே மார்க்கங்கள்
    வாழ்த்துவதற்கு வாழத்தானே வேண்டும்
    வாழ்பவனை வீழ்த்த விரும்புபவன் வாழ்த்த முடியுமா!
    வாழ்த்துவதை வாழ்நாள் வரை தொடரவேண்டும்

    வாழ்த்தும் மனிதரும்
    வாழ்த்தை வரவேற்கும் மனிதரும்
    வையகத்தில் வாழும்வரை
    வையகத்தில் வாழும் மனிதரை வீழ்த்த மனம் வருமோ !
    வாழ்வெல்லாம் வாழ்த்தி வாழ்வோம்
    Anbuden

    Advertisements
     
  • Tags: , ,

    One response to “மனித நேயமும் நல்லிணக்கமும்

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: