RSS

ஓ ! மனமே கலங்காதே !?

06 Jan

romantic-love-painting-wallpaperமனிதன் எத்தனையோ பரிணாம வளர்ச்சியைப் பெற்று முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் பகுத்தறிவில் சிலர் பின்தங்கியே இருக்கிறார்கள். இதற்க்குக் காரணம் நமக்குள் இருக்கும் சிந்தனைத் திறனின் குறைபாடேயாகும்.

மனிதமனங்கள் அதில் ஏற்ப்படும் எண்ணங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான சிந்தனையைக் கொண்டு இருக்கும். சிலருக்குப் பிடிக்கும் விஷயம் சிலருக்கு பிடிக்காதிருக்கும். சிலருக்கு நல்லதென தெரியும் விஷயம் சிலருக்கு தீமையெனத் தெரியும்.சிலர் செய்யும் கொடூரகுற்றங்கள் கூட அவர்கள் மனதிற்கு நியாயமாகத் தெரியும். இன்னும் சிலர் தன்னிடத்தில் ஆயிரம் குறைபாடுகள் இருந்தும் அதனை சற்றும் சிந்திக்காதவர்களாய் அடுத்தவர்களைப் பற்றி அவர்களின் குறைபாட்டை பின்னால் பேசி கிண்டலடித்து மகிழ்வார்கள். அது அவர்களின் தரப்பில் சரியெனத் தோன்றும். இப்படி பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆக இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் மனிதமனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருப்பது மட்டுமல்லாது அவரவர்கள் செய்யும் செயல் நடவடிக்கைகள் அவரவர்கள் மனதிற்கு சரியெனத்தோன்றும் நிலைப்பாடே வருகிறது. அப்படியானால் உண்மை நிலைதான் என்ன..???

 • மனிதன் ஆறறிவைக் கொண்டவனாக படைக்கப்பட்டு இருந்தாலும் அதில் மிக முக்கியமானது சிந்தித்துச் செயல்படும் பகுத்தறிவுத்திறனாகும்.இந்தப் பகுத்தறிவில் தான் மனிதன் ஒருவருக் கொருவர் வித்தியாசப்படுகிறார்கள். எப்படியென்றால் பகுத்தறிவைப் பரிபூரணமாக பெறாத மனிதன் அவன் எண்ணங்களில் தோன்றும் செயல் நடவடிக்கைகள் யாவும் அவனைப் பொருத்தமட்டில் சரியெனத்தோன்றும்.ஆகவே அவனைப் பொருத்தமட்டில் நல்லதென நினைத்து செய்வதெல்லாம் சிந்தித்துச் செயல்படும் அறிவை முழுமையாகப் பெற்றவர்களின் பார்வைக்கு அவன் செய்வது தவறு என்பதை உணர முடிகிறது.

  இது மட்டுமல்ல பகுத்தறிவைப் பரிபூரணமாகப் பெறாத இப்படிப்பட்ட குணமுடையோர் எந்த ஒரு செய்தியையும், நிகழ்வுகளையும் மிகைப்படுத்திப் பேசுவார்கள். என்னதான் அவர்களின் தவறை ஆதாரபூர்வமாக சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

  இத்தகையோரிடத்தில் எதிர்த்து வாதடுவதினாலோ தகராறு செய்வதினாலோ எந்தப்பலனும் இருக்காது. மாறாக தவறை உணராதவர்களாகத்தான் பேசுவார்கள்.

  அப்படியானால் இத்தகையோரை திருத்துவது எப்படி..???
  இத்தகையோர் திருந்துவது தான் எப்போது…???

  இந்தக்கேள்விகளுக்கு விடை காண்பது கடினம் என்றாலும் இத்தகைய குணம் உள்ளோர்களது வாழ்வில் ஏற்ப்படும் நிகழ்வகளைப் பொறுத்துத்தான் உள்ளது. தனக்கு ஒரு பாதகச் செயல் அல்லது இழப்புக்கள் அவமானங்கள் ஏற்ப்படும்போது தான் அவர்களின் மனதில் இத்தனை நாளாக சரியெனச் செய்த செயல்களை எல்லாம் தவறு என்பதை உணர்வார்கள். இந்த சந்தர்ப்பம் தான் அவர்களின் பகுத்தறிவை வளர்ச்சிபெற வாய்ப்பாக்கி வைக்கிறது.

  நாம் செய்ய நினைக்கும் காரியங்கள் யாவற்றிலும் பகுத்தறிவை பயன்படுத்தி தீர ஆராய்ந்து செயல்பட்டால் வன்முறை, கொடுஞ்செயல், குடும்பப்பிரச்சனை, பழிவாங்கும் எண்ணம் ஆகியவை முற்றுப்பெற்று. மனிதாபிமானம், மனசாட்சி, நிலை நாட்டப்படும்.

  ஆகவே மனமிருந்தால் மார்க்கமுண்டு எனும் திடகாத்திரமான நம்பிக்கையை தனதுள் வளர்த்துக் கொண்டு எந்த ஒரு சொல்லானாலும், செயலானாலும், நடவடிக்கையானாலும் நாம் சிந்தித்துச் செயல்படும்ஆறாம் அறிவை பயன்படுத்தி அமைதியுடன் யோசித்து நல்லதைச் செய்து நல்லதை யோசித்து நன்மைகள் செய்து.நலமுடன் வாழ முயற்ச்சிப் போமாக..!

  51mmx51mmஅதிரை மெய்சா
  http://nijampage.blogspot.ae/2014/01/blog-post_5.html

  Advertisements
   
 • Tags: ,

  One response to “ஓ ! மனமே கலங்காதே !?

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: