RSS

Monthly Archives: February 2014

நெஞ்சோடு அணைச்சா அந்த தேசம் எனக்கு புதுசுதான்

1901616_454122351383903_282539039_nநெஞ்சோடு அணைச்சா
அந்த தேசம் எனக்கு புதுசுதான்
வெம்மையில நனைச்சா
அவ பாசம் யுகம் கடந்த பழசு தான்

ஈ எறும்பு கடிக்காம
பொத்தி வச்ச பெத்தவளே!
தலைக்கோதி எனை எழுப்ப
பூமி வந்த சொத்து அவளே!

 • சுடு தண்ணி சுடுமுன்னு
  அவ கை வச்சு ஊத்திடுவா
  சோப்பு நுரைக் கண் எரிக்குமுன்னு
  பாங்காத்தான் நீர் வார்ப்பா

  பட்டினியா அவ இருந்தும்
  பட்சணங்கள் தந்திருக்கா
  இரா பகல் பார்க்காம
  என்னையும் சுமந்திருக்கா!

  அவ முகம் பார்த்தா
  அங்க விடியும் புது நம்பிக்கை தான்
  அவ முந்தானை முடிச்சுக்குள்ள
  இருக்கும் என் கற்பனை தான்

  1948158_451452364984235_230786492_nGJ தமிழ்செல்வி

  GJ Thamilselvi

  Advertisements
   
 • Tags: , , , ,

  உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

  217942_4409071435328_616324613_n1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

  நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.

  நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.

 • மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

  2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

  மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

  3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

  இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் – அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

  4. பொறாமை கொள்ளாதீர்!

  வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!

  நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

  5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

  உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

  6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

  இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

  7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

  இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

  8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

  தியானம் – உள்மன ஆய்வு – மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

  சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

  9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

  வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

  10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

  “இது என்னால் முடியுமா? முடியாதா?” என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

  முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது – மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

  – வாசகர்: இளைய வைகை
  Source : http://www.archive.inneram.com/2010110811723/10-principles-for-peace-of-mind

   
 • Tags: , , ,

  பார்வை !

  Man Opening Third Eye
  பார்வைகள் பலரகம்
  பார்க்கும் விதம் பலவிதம்
  உள்ளமும் பார்த்திடும்
  உறவினை நேசிக்கும்
  உலகமே பார்த்திடும்
  உயர்ந்து மனம் வென்றிடும்

  அன்னையின் பார்வையில்
  அகிலமே வாழ்ந்திடும்
  தந்தையின் பார்வையே
  தரணியில் புகழ் சேர்க்கும்

 • காமுகன் பார்வையோ
  கன்னியரை மயக்கிடும்
  காதலில் வீழ்ந்து தம்
  வாழ்வினை சிதைத்திடும்

  ஒருதலைப் பார்வையோ
  ஊனத்தின் பார்வையாம்
  இருதலைப் பார்ப்பதே
  இதயத்தில் வாழ்ந்திடும்

  மனைவியின் பார்வையில்
  மகத்துவம் நிறைந்திடும்
  கணவனின் பார்வையே
  காலங்கள் இனித்திடும்

  நல்லதைப் பார்த்திடும்
  நட்பினின் பார்வையில்
  நெருப்பென புகைந்திடும்
  தப்பெனும் பார்வையாம்

  படைத்தவன் பார்வையில்
  படைத்திடும் நற்ச்செயல்
  கிடைத்திடும் நிரந்தரம்
  சுவனத்தின் சுக இன்பம்

  51mmx51mmஅதிரை மெய்சா
  http://nijampage.blogspot.ae/2014/02/blog-post_23.html

   
 • கடல் …

  1922515_600934979985235_953008647_n
  பெருங்கடலுக்கு
  பேராசை எதுவும் கிடையாது !
  சிற்றாசையும் கிடையாது !

  எதுவானாலும்
  ஒதுக்கிவிடும் !
  ———————–
  கடல் …
  அழகாக இருக்கும்
  பிரமிக்க வைக்கும்
  மனதை இழுக்கும்
  கால் நனைக்க ஆசையூட்டும் !

  இறங்கினால்
  கடலோடு ஐக்கியமாகி
  சம்சார சமுத்திரமாக்கும் !

 • ————————————————
  நீந்தத் தெரிய வேண்டும்
  எதிர் நீச்சல் போட வேண்டும்
  சுறாக்களையும்
  திமிங்கலங்களையும்
  எதிர்கொள்ளத் துணிவு வேண்டும் !

  அத்தனைக்குப் பிறகும்
  நீந்திக் கொண்டே
  இருக்க வேண்டும் …

  இது
  பாசப் பெருங்கடல் !
  ————————————————–
  கடல்போல் மனசு !

  தண்ணீர் … தண்ணீர் …
  மண்ணுக்கு அப்பாலும்
  கண்ணுக்கு அப்பாலும் !

  தாகத்திற்கு
  ஒரு வாய் அள்ளிக் குடிக்க
  அருகதையில்லாத
  உப்புத் தண்ணீர் !

  உலோபிகளின்
  செல்வத்தைப்போலவே !
  ——————————————————-

  கடலுக்கும் வெறி வரும்
  ஜாதி வெறியா
  மதவெறியா
  இன வெறியா
  என்று யோசிக்க வேண்டாம்
  அது
  மோடியைப்போல்
  கொலைவெறி !

  சுனாமியாக வந்து
  சூறையாடும் !
  நீதி விசாரணை எதுவும்
  யாரும் கேட்க முடியாது !
  கடலை
  கைது செய்யவும் முடியாது !

  Abu HaashimaAbu Haashima Vaver Abu Haashima Vaver

   
 • ஒரு போகத்துக்கு ஏழு சாலு உழவு !

  644251_384615131609855_933155017_n

  ஒரு போகத்துக்கு ஏழு சாலு உழவு !
  கோடை மழைக்கு ரெண்டுசாலு !

  காணிக்கு இருபது வண்டி எருதள்ளி !
  மடக்கு உழவு இரு சாலு !

  “புல்லு மடக்க” இரு சாலு !
  வெதப்புக்கு ஒரு சாலு ! ஆக,

  காணிக்கு ஏழு சாலும் சேர்த்து ,
  நடந்தது எழுபது மயிலு !

  மறுநா மழைக்கு காத்திருக்கேன் !
  வெதப்போட போயிடுமா ?

  மானம்பாத்து காத்திருக்கேன் !
  மழை வருமான்னு “மானத்தோட” !

   

  Tags: , ,

  ‘வளைகுடா வாழ்க்கை’ [ கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ![பகுதி 15]

  கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு…!
  இரு நண்பர்கள், இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். அதில் ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைய, மற்றவர் தேர்வில் தேர்ச்சி அடைந்து பள்ளி படிப்பை தொடர்ந்தார். தேர்வில் தோல்வி அடைந்தவர் மீண்டும் முயற்சி செய்யாமல் வளைகுடா சென்று விட்டார். சென்றவருக்கு நல்ல வேலை ! ஏதோ ஒரு அலுவலகத்தில் ஆபீஸ் பாய் வேலை நல்ல சம்பளம், மன நிறைவாய் வேலை செய்து வந்தார். இரண்டு வருடம் கடந்து விடுப்பில் ஊர் வந்தார். நல்ல போசாக்கான உணவு குளிரூட்டப்பட்ட குடியிருப்பில் வசித்ததன் விளைவு பார்க்க நல்ல நிறமாக காணப்பட்டார்.

 • பார்ப்போர் எல்லாம் நலம் விசாரிப்பு அவருக்கு நண்பனை காண வேண்டும் என்ற ஆவல் ! நண்பனை கண்டு ஏக சந்தோசம், பள்ளி படிப்பை முடிக்கும் தருவாயில் நண்பன் வளைகுடா சென்று வந்த நண்பனை பார்த்ததும் சந்தோசம் ஒருபுறம், மறுபுறம் நான் எப்போது சம்பாதிக்க ஆரம்பிப்பது என்ற ஏக்கம் !

  மச்சான்… எனக்கு படிக்கவே பிடிக்கவில்லை நானும் உன்னைப்போல
  வளைகுடா வந்து விடுகிறேன் என்றான் படிக்கும் நண்பன் …!

  அடப்பாவி அந்த காரியத்தை மட்டும் செய்து விடாதே ! நான் படும் கஷ்ட்டம் கொஞ்சமல்ல பல பேர் இழி சொல்லுக்கு ஆளாகி வேலை செய்து வருகிறேன். அந்த நிலை உனக்கு வேண்டாம்.

  எப்படியாவது படித்து விடு… இன்னும் மூன்று வருடம் அதன் பின்னர் நானே உனக்கு முயற்ச்சிக்கிறேன் என்றார் நண்பர். நண்பன் சொல் கேட்டு அவரும் கல்லூரி படிப்பை முடித்தார் மறு விடுப்பில் வந்த நண்பர் விசாவுடன் வந்து நண்பரை அழைத்து சென்றார். படிக்காத நண்பன் ஐந்து வருடம் ஈட்டிய பணத்தை ஒரே வருடத்தில் படித்த நண்பர் சம்பாதித்து விட்டார் !

  இன்னும் ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன்…
  காலம் செல்ல செல்ல வேலை வாய்ப்புகளில் படித்தவர்களுக்கிடையே போட்டி நிலவ ஆரம்பித்தது. இது கம்பெனி நிர்வாகிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பட்டதாரியாக இருந்தாலும் உபரியாக என்ன தெரிந்துள்ளாய் என்ற ஒற்றை கேள்வி மூலம் பலரை கழித்து கட்ட ஏதுவாக அமைந்தது. நான் கூற வரும் நிகழ்வும் இது சார்ந்ததே…

  ஒருவருக்கு கல்லூரி படிப்பை முடித்ததும் உடனே கல்யாணமும் ஆனது உல்லாசமாய் ஆறு மாதம் கழிந்தது. உறவினர் மூலம் வளைகுடா பயணத்திற்கு ஏற்பாடானது… வளைகுடா சென்றார் அங்கே படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை எதுவும் இல்லை. வளைகுடாவிற்கு வருவதற்காக செய்த செலவுகள் ஊரில் கடனாக இருப்பதை அறிந்து எதோ ஒரு வேளையில் சேர்ந்தார். பலரிடம் தான் ஒரு பட்டதாரி என்பதை கூறி தகுந்த வேலை தேடினார்.

  ஒருவர் கூறிய அறிவுரை அவர் எதிர்காலத்திற்கு ஏற்றதாய் அமைந்தது. தம்பி இந்த காலத்தில் கல்லூரி படிப்பு ஒரு தகுதிதான். ஆனால் அலுவலக நிர்வாகத்திற்கு கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது மேற்படிப்பு தகுதி வேண்டும் என்றார். தனது தவறை உணர்ந்தார்.

  ஆறு மாதத்தை வீணடித்து விட்டதை தனது மனைவியிடம் கூறி மனம் வருந்தினார். சற்றும் எதிர்பாராத பதில் மனைவியிடமிருந்து வந்தது. உடனே ஊருக்கு வாருங்கள். நீங்கள் விரும்பும் மேற்படிப்பை தொடருங்கள். அதற்கு உண்டான செலவுகளை எனது நகைகளை விற்று சமாளித்து கொள்ளலாம் என்றார்.

  அது போன்றே ஊர் வந்தார்… அக்கறையாய் கல்வி பயின்றார். மீண்டும் வளைகுடா சென்றார். தான் படித்த கல்வி ! செல்வமாய் மாறி பண மழையாய் பொழிந்தது. மனைவி விற்று கொடுத்த நகைக்கு நான்கு மடங்கு நகை அணிவித்து அழகு பார்த்தார்.

  நவீன காலக்கல்வி நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வளர்த்து வருவதால் கல்லூரி படிப்பை முடித்து விட்டோம் என்று இருக்காமல் வேலை பார்த்து கொண்டே பகுதி நேரமாக மேற்படிப்பை படியுங்கள் என் அன்பு நெஞ்சங்களே..! வளைகுடா வாழ்வில் கல்வியின் மகத்துவம் அங்கு சென்றவர்களிடம் கேட்டால் தெரியும்…

  படித்தால் மட்டும் போதாதுங்க !?
  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  http://nijampage.blogspot.in/2013/10/16.html

   
 • Tags:

  காணாமல் போன தெரு விளையாட்டு !?

  imagesமுன்பொரு காலத்தில் நம்நாட்டின் சிற்றூரிலிருந்து பெருநகரம் வரை தெருப்பகுதிகளில் இருக்கும் காலி இடங்களிலும் தெருமுனைகளிலும், சந்துகளிலும், தெருவீதிகளிலும் காலைபொழுதினிலும், மாலை பொழுது இரவு நேரம் வரை இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் படை சூழ கபடி, சில்லு விளையாட்டு, வட்டக் கோடு, கிளித்தட்டு, கோலி விளையாட்டு, லாக்குவிளையாட்டு, கில்லி விளையாட்டு, தொட்டு விளையாட்டு, கண்டுவிளையாட்டு ஒளிந்து விளையாடுதல் {கொக்கரக்கோ} ,கண்ணாமூச்சி விளையாட்டு, பாண்டி விளையாட்டு பம்பரவிளையாட்டு, எறிப்பந்து என இப்படி இன்னும் பல எண்ணிலடங்கா வகைவகையான விளையாட்டுக்கள் ஒவ்வொரு ஊர்ப்பகுதிகளிலும் விதவிதமாக விளையாடிக் கொண்டு இருப்பார்கள். தெரு வீதிகளெல்லாம் விளையாட்டுச் சப்தத்தில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாக கலகலப்பாக இருக்கும். பார்க்க சந்தோசமாக இருக்கும்.

 • இத்தகைய விளையாட்டுக்கள் விளையாடிய காலத்தில் உடல் வலிமையாகவும், மனதிற்கு புத்துணர்வு,உற்ச்சாகம், சுறுறுப்பு என அனைத்திலும் வலிமையுடன் ஆரோக்கியமுடன் இருந்தார்கள். அப்போது சிறுவயதில் நோய்வாய்பட்டு இறப்போர் எண்ணிக்கை அரிதாகவே இருந்தது. முதுமை எய்தியே அதிகமாக மரணிப்பார்கள்.இன்னும் சொல்லப் போனால் நாம் இன்றைய காலத்தில் கேள்விப்படும் புதுப்புதுவகை நோய்களும் அன்று இருந்ததில்லை.. காரணம் கலப்படமற்ற உணவுதானியங்கள் கள்ளம்கபடமற்ற மனசு, மனஉளைச்சல் இல்லா வாழ்க்கை அத்துடன் ஆரோக்கியமான விளையாட்டும் இருந்தன. காசுபணம் அதிகமாக இல்லாவிட்டாலும், இருப்பதைக்கொண்டு சந்தோசமான வாழ்க்கை இப்படி அனைத்தும் அன்று நிரம்பியிருந்தன.. அதனால் தான் நூறு வயதைத்தாண்டியும் ஆரோக்கியத்துடனும்,சுறுசுறுப்புடனும் நீண்ட ஆயுளுடன் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்.

  ஆனால் இன்றைய நிலையோ தலைகீழாக மாறிப் போய்விட்டன. விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியில் நவீனங்கள் தலை தூக்கியதால் நமது உடலுக்கு வலிமையூட்டிய பாராம்பரிய விளையாட்டுக்களும் மலையேறி மறையத் தொடங்கி விட்டன.அன்று நாம் தெரு வீதிகளில் கேட்ட விளையாட்டுச் சப்தம் ஓய்ந்து போய் இன்று வாகனங்கள் பல்கிப்பெருகி வாகனங்களின் இரைச்சல் சப்தம் தான் கேட்கிறது. விளையாட்டுச்சப்தங்கள் விளையாட்டுக்குக்கூட கேட்க முடியாத அளவுக்கு ஓடி ஒளிந்து விட்டன.எங்கு பார்த்தாலும் செல்போன்,ஐ போன், ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு போன் ஒலியும், டி வி சப்தமும், கம்பியூட்டர் மௌசின் சிணுங்களும், டேப்ளேட்டின் கேம் விளையாட்டு இரைச்சலுமாகத்தான் கேட்கிறது.வீட்டுக்குள்ளிருந்தே உலகைப் பார்க்கும் அனைத்து நவீனங்களும் வந்து விட்டன. ஐந்து வயதுப் பிள்ளைக்கு கூடஎல்லா நவீனங்களும் அத்துபடியாகி விட்டது.

  அன்றைய காலத்துப் பழைய விளையாட்டுக்கள் கொஞ்சம்கொஞ்சமாக மறைந்து வருவதால் மனிதருக்குள் இருக்கும் நெருக்கம் கூட தூரமாகிச் சென்று கொண்டிருக்கிறது. வீட்டுக்குள்ளேயே வீடியோ கேம் விளையாடிக் கொண்டு நேரத்தைப் போக்கி விடுகின்றனர். சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய வயதில் சோம்பலாகிப் போய் விடுகின்றனர். வெளியுலகம் துண்டிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து. மன விரக்தியில் தற்க்கொலை போன்ற எண்ணங்கள் தூண்டப்படுவதற்குக் கூட காரணமாக இருக்கிறது.

  தெருவிளையாட்டில் கிடைத்த சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் இப்போதுள்ள இளைஞர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. காரணம் அன்று நாமும் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற நாட்டமும் தன்னம்பிக்கையும்,முயற்ச்சியும் இருந்தது.தெரு விளையாட்டுக்களில் நடத்தப்படும் சிறு சிறு போட்டிகளின் காரணத்தினால் கூட ஆர்வம் ஏற்ப்பட்டு மேலும் தன்னை ஒரு நல்ல விளையாட்டு வீரனாக வளர்த்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மனதினில் உதிக்க வாய்ப்பாக இருந்தன. அதுவே அடித்தளமாக அமைந்து வருங்கால விளையாட்டு வீரனாக உருவாக்க வழிவகுத்தன.
  காலசுழற்ச்சியில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் தெரு விளையாட்டுக்கள் எட்டாக்கனியாகி விட்டதை நினைக்கும் போது ஏக்கமாகத்தான் உள்ளது. அந்த ஒட்டுமொத்த விளையாட்டுக்களையும் விண்ணுயர வளர்ந்திட்ட விஞ்ஞானம் தன் கையிலடக்கி நம்மை வேறு விதத்தில் ஆதிக்கம் செய்யத் துவங்கி விட்டன. .

  இப்படிக் காலாகாலமாக நம் வாழ்வோடு ஒட்டியிருந்து உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் தந்துவிட்டு இப்போது நவீனங்களைக் கண்டதும் ஓடிமறைந்து கொண்டிருக்கும் தெரு விளையாட்டுக்கள் மீண்டும் உயிர்த்தெழுவது எப்போது.!?!?!

  51mmx51mmஅதிரை மெய்சா
  http://nijampage.blogspot.in/2014/02/blog-post_5.html?showComment=1391693961563#c766892038556535583

   
 • Tags: