RSS

‘வளைகுடா வாழ்க்கை’ [ கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ![பகுதி 15]

11 Feb

கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு…!
இரு நண்பர்கள், இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். அதில் ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைய, மற்றவர் தேர்வில் தேர்ச்சி அடைந்து பள்ளி படிப்பை தொடர்ந்தார். தேர்வில் தோல்வி அடைந்தவர் மீண்டும் முயற்சி செய்யாமல் வளைகுடா சென்று விட்டார். சென்றவருக்கு நல்ல வேலை ! ஏதோ ஒரு அலுவலகத்தில் ஆபீஸ் பாய் வேலை நல்ல சம்பளம், மன நிறைவாய் வேலை செய்து வந்தார். இரண்டு வருடம் கடந்து விடுப்பில் ஊர் வந்தார். நல்ல போசாக்கான உணவு குளிரூட்டப்பட்ட குடியிருப்பில் வசித்ததன் விளைவு பார்க்க நல்ல நிறமாக காணப்பட்டார்.

 • பார்ப்போர் எல்லாம் நலம் விசாரிப்பு அவருக்கு நண்பனை காண வேண்டும் என்ற ஆவல் ! நண்பனை கண்டு ஏக சந்தோசம், பள்ளி படிப்பை முடிக்கும் தருவாயில் நண்பன் வளைகுடா சென்று வந்த நண்பனை பார்த்ததும் சந்தோசம் ஒருபுறம், மறுபுறம் நான் எப்போது சம்பாதிக்க ஆரம்பிப்பது என்ற ஏக்கம் !

  மச்சான்… எனக்கு படிக்கவே பிடிக்கவில்லை நானும் உன்னைப்போல
  வளைகுடா வந்து விடுகிறேன் என்றான் படிக்கும் நண்பன் …!

  அடப்பாவி அந்த காரியத்தை மட்டும் செய்து விடாதே ! நான் படும் கஷ்ட்டம் கொஞ்சமல்ல பல பேர் இழி சொல்லுக்கு ஆளாகி வேலை செய்து வருகிறேன். அந்த நிலை உனக்கு வேண்டாம்.

  எப்படியாவது படித்து விடு… இன்னும் மூன்று வருடம் அதன் பின்னர் நானே உனக்கு முயற்ச்சிக்கிறேன் என்றார் நண்பர். நண்பன் சொல் கேட்டு அவரும் கல்லூரி படிப்பை முடித்தார் மறு விடுப்பில் வந்த நண்பர் விசாவுடன் வந்து நண்பரை அழைத்து சென்றார். படிக்காத நண்பன் ஐந்து வருடம் ஈட்டிய பணத்தை ஒரே வருடத்தில் படித்த நண்பர் சம்பாதித்து விட்டார் !

  இன்னும் ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன்…
  காலம் செல்ல செல்ல வேலை வாய்ப்புகளில் படித்தவர்களுக்கிடையே போட்டி நிலவ ஆரம்பித்தது. இது கம்பெனி நிர்வாகிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பட்டதாரியாக இருந்தாலும் உபரியாக என்ன தெரிந்துள்ளாய் என்ற ஒற்றை கேள்வி மூலம் பலரை கழித்து கட்ட ஏதுவாக அமைந்தது. நான் கூற வரும் நிகழ்வும் இது சார்ந்ததே…

  ஒருவருக்கு கல்லூரி படிப்பை முடித்ததும் உடனே கல்யாணமும் ஆனது உல்லாசமாய் ஆறு மாதம் கழிந்தது. உறவினர் மூலம் வளைகுடா பயணத்திற்கு ஏற்பாடானது… வளைகுடா சென்றார் அங்கே படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை எதுவும் இல்லை. வளைகுடாவிற்கு வருவதற்காக செய்த செலவுகள் ஊரில் கடனாக இருப்பதை அறிந்து எதோ ஒரு வேளையில் சேர்ந்தார். பலரிடம் தான் ஒரு பட்டதாரி என்பதை கூறி தகுந்த வேலை தேடினார்.

  ஒருவர் கூறிய அறிவுரை அவர் எதிர்காலத்திற்கு ஏற்றதாய் அமைந்தது. தம்பி இந்த காலத்தில் கல்லூரி படிப்பு ஒரு தகுதிதான். ஆனால் அலுவலக நிர்வாகத்திற்கு கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது மேற்படிப்பு தகுதி வேண்டும் என்றார். தனது தவறை உணர்ந்தார்.

  ஆறு மாதத்தை வீணடித்து விட்டதை தனது மனைவியிடம் கூறி மனம் வருந்தினார். சற்றும் எதிர்பாராத பதில் மனைவியிடமிருந்து வந்தது. உடனே ஊருக்கு வாருங்கள். நீங்கள் விரும்பும் மேற்படிப்பை தொடருங்கள். அதற்கு உண்டான செலவுகளை எனது நகைகளை விற்று சமாளித்து கொள்ளலாம் என்றார்.

  அது போன்றே ஊர் வந்தார்… அக்கறையாய் கல்வி பயின்றார். மீண்டும் வளைகுடா சென்றார். தான் படித்த கல்வி ! செல்வமாய் மாறி பண மழையாய் பொழிந்தது. மனைவி விற்று கொடுத்த நகைக்கு நான்கு மடங்கு நகை அணிவித்து அழகு பார்த்தார்.

  நவீன காலக்கல்வி நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வளர்த்து வருவதால் கல்லூரி படிப்பை முடித்து விட்டோம் என்று இருக்காமல் வேலை பார்த்து கொண்டே பகுதி நேரமாக மேற்படிப்பை படியுங்கள் என் அன்பு நெஞ்சங்களே..! வளைகுடா வாழ்வில் கல்வியின் மகத்துவம் அங்கு சென்றவர்களிடம் கேட்டால் தெரியும்…

  படித்தால் மட்டும் போதாதுங்க !?
  sitthik‘பத்திரிக்கைத்துறை நிபுணர்’
  அதிரை சித்திக்
  http://nijampage.blogspot.in/2013/10/16.html

  Advertisements
   
 • Tags:

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: