RSS

கடைசி சீட்டும் சென்ட்ரல் சீட்டும் பின்னே ஞானும்..!!

12 Mar

1560488_383058045171452_510820796_n

ஒருமுறை திருநெல்வேலியிலிருந்து கோவை வருவதற்காக
பஸ்நிலையத்தை அடைந்தபோது இரண்டு கோவைசெல்லும் பஸ்கள் நின்றிருந்தன, ஒன்று புறப்படத் தயாராக இருந்தது,மற்றொன்று இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பும்.
கிளம்பத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறிப்பார்த்தபோது கடைசி வரிசையிலுள்ள நடு இருக்கை மட்டுமே காலியாக இருந்தது.
இரவுப்பயணம் என்பதால் தூக்கித்தூக்கிப் போடுமென்பதாலும், நிம்மதியாக உறங்க முடியாதென்று
கீழே இறங்கப் போனேன்.வாசலில் மறித்த கண்டக்டர் கேட்டார்,
“ ஏன் சார்…உக்காருங்க, வண்டி கெளம்பப்போகுது”
“கடைசி வரிசைலதான் சீட் இருக்கு,சரியா வராது” என்று சொல்லி இறங்க முயன்ற என்னிடம்,
“சார்,உள்ள போங்க சார், மத்தியில சூப்பர் சீட்டு ஒன்னு இருக்கு…
இந்தா நான் வாரேன்” என்றுகூறி வலுக்கட்டாயமாய் என்னை உள்ளே அனுப்பிவிட்டு விசிலூதி வண்டியைக் கிளப்பினார்.

  • நான் உள்ளே வந்து தேடிப்பார்த்தால் மத்தியில்
    ஒரு சீட்டும் இல்லை,
    சரி கண்டக்டர் வந்து யாரையேனும் எழுப்பிவிட்டு நமக்கு சூப்பர் சீட் தருவாராக இருக்குமென்று நம்பிக் காத்துக்கொண்டிருந்தேன்,
    கிட்டத்தட்ட ஆறேழு கிலோமீட்டர் தாண்டியபின் அவர் வந்தார்,
    “சார் இன்னுமா நீங்க உக்காரலை, இதுல உக்காருங்க சார்..” என்று நான் புறக்கணித்த அதே இருக்கையைக் காண்பித்தார்.

    நான் கோபமாக்க் கேட்டேன்” மத்தீல சீட்டு தாரேன்னு சொல்லி இப்ப கடைசீ சீட்டைக் காமிக்கறீங்களே”

    “சார், இது கடைசீ ரோல இருக்கற சென்ட்ரல் சீட்டு சார்…கடைசி சீட்டு வேணாம் சார் உங்களுக்கு.இந்தா மத்தீல இருக்கற இந்த சீட்டுல உக்காருங்க சார்.காலைநீட்டி சொகம்மா ஒறங்கலாம்..” என்றார் சீரியஸாக.

    “நல்லா வெள்ளாடறீங்கய்யா வார்த்தை வெள்ளாட்டு,
    கலைஞரோட தீவிர விசிறியா இருப்பீங்க போலருக்கு. இந்த மத்தீல இருக்கற சூப்பர் சீட்டு எனக்கு வேணாம் ராசா.என்னை சங்கர் நகர்ல இறக்கி விட்டுடு.
    நான் ஆட்டோ புடிச்சுப்போய் அடுத்த பஸ்ல வந்துக்கறேன். ஆட்டோக்கு மட்டும் காசு கொடுத்துடு” என்று ரகளை செய்தபிறகு ஒருவழியாக இன்னொருவரை அந்தப் பின்னிருக்கையில் அமர வைத்துவிட்டு
    என்னை மத்தியில் (அதாவது உண்மையான சென்ட்டர். . ) அமர வைத்தார் அந்த வெவகாரமான கண்டக்டர்.

    # கண்டக்டர் பேச்சைக்கேட்டு பின்பக்கம் சென்ற அப்புராணிக்காக கவலைப்படாமல் இருக்க முடியவில்லை….”ஸாரி சார்,உங்களுக்கு சிரம்ம் கொடுத்துட்டேன் என்று” சொல்ல,
    அவரால் என் முகத்தைக்கூடக் குவித்துப் பார்க்க முடியவில்லை…
    மனுசன் பயங்கர மப்புல “ஙே” என்று விழித்தார்….

    1545112_418309211646335_1932748514_n-நிஷா மன்சூர்
    Nisha Mansur

     
  • Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: