RSS

“நான் பேசுறதையெல்லாம் உங்க பத்திரிகையிலே போடுவாங்களா?”

16 Mar

1979511_10203500846668822_422849366_nகாங்கிரஸ் தலைவர்களில் வாழப்பாடி ராமமூர்த்திக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இருவருக்கும் ஒருமாதிரியான ‘திராவிடத்தன்மை’ இருப்பதாக நான் கருதுவது ஒரு காரணமாக இருக்கலாம். எப்போது போன் அடித்தாலும் நாலு ரிங் போவதற்குள் எடுத்துப் பேசுவார். போனை எடுக்கமுடியாத சந்தர்ப்பத்தில் இருந்தால், சிறிது நேரம் கழித்து அவரே தொடர்பு கொள்வார்.

….

“நான் பேசுறதையெல்லாம் உங்க பத்திரிகையிலே போடுவாங்களா?”

“நிச்சயமா போடுவாங்க சார். ஆசிரியரேதான் உங்க கிட்டே பேச சொன்னாரு”

“மாலன் எனக்கு நல்ல நண்பர். நட்பாலே சொல்லியிருப்பாரு. ஆனா பத்திரிகையை தயாரிப்பாங்களே.. என்ன சொல்வாங்க.. இஷ்யூ இன்சார்ஜ்.. அவங்க என்னை புறக்கணிக்க மாட்டாங்களே?”

“எங்க பத்திரிகைக்கு அப்படியெல்லாம் எந்த பாகுபாடும் கிடையாதுங்க சார். நிச்சயமா இது அடுத்த வாரம் பப்ளிஷ் ஆகும்”

 • “குணசேகரன் நம்ம ஆளுதான். நல்லவருதான். என்னவோ தெரியலை. அன்னிக்கு ரொம்ப டென்ஷன் பண்ணிட்டாரு”

  “சார். அவரு டிவி. நாங்க பத்திரிகை”

  “ரெண்டுத்துக்கும் ஒரே பேருதானே.. ஒரே ஓனர்தானே?”

  இப்படியாக நம்மை ரிலாக்ஸ் செய்துவிட்டுதான் பேச ஆரம்பிப்பார். சென்னை ராமாவரத்தில் இருக்கும் அவரது வீடு அமைதியான சூழலில் இருக்கும். வரவேற்பறையில் அவரை சந்திக்க நிறைய பேர் காத்திருப்பார்கள். ஆனாலும் பத்திரிகையாளர்களுக்குதான் முக்கியத்துவம் தந்து முதலில் சந்திப்பார். இப்போது நிறைய அரசியல் தலைவர்கள் டிவி கேமிரா இருந்தால்தான் சந்திக்க விரும்புகிறார்கள். ஆனால் இளங்கோவனுக்கு அச்சுப்பத்திரிகை – டிவி சேனல் பாகுபாடு கொஞ்சமும் இல்லை.

  அவரது குரலுக்கு கொஞ்சம் அதிகாரமான ஆளுமைத்தன்மை உண்டு. நிறுத்தி நிதானமாகப் பேசுவார். முதல் வாக்கியத்துக்கும், அடுத்த வாக்கியத்துக்கும் நிறைய இடைவெளி இருக்கும் (பத்திரிகையாளர்கள் குறிப்பு எடுத்துக்கொள்ள போதுமான அவகாசம் அது. கலைஞர் பேசும்போது இதே பாணியை காணலாம்)

  கேப்டன் ரமணாவுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை ‘மன்னிப்பு’ என்றால், ஈ.வி.கே.எஸ்.ஸுக்கு உலகத்திலேயே பிடிக்காத இரண்டு பெயர்கள் என்றால் ‘கருணாநிதி’, ‘ஜெயலலிதா’ என்பதாக இருக்குமென்று எனக்கு தோன்றும்.

  எதைப்பற்றி பேசவேண்டும் என்று கேட்டுவிட்டு, மேடையில் பேசுவதைப் போல பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாகப் பேசுவார். “நான் பேசி முடிச்சதுக்கப்புறம், எதுவாவது சந்தேகம் இருந்தா கேளுங்க. இடையிலே குறுக்கிட்டா தொடர்ச்சி இருக்காது” என்பார்.

  “பெரியார் எனக்கு தாத்தாதான். ஆனா அவரைதான் நாங்க சமூகத்துக்கு தத்து கொடுத்துட்டோமே? உங்களுக்கு அவரைப் பத்தி என்ன தெரியுமோ, அதேதான் எனக்கும் அவரைப்பத்தி தெரியும்”

  …..

  போனவாரம் பேசினேன்.

  “சார், காங்கிரஸ் தமிழகத்துக்கு இழைத்திருக்கிற பத்து துரோகங்கள்னு முதல்வர் பட்டியலிட்டிருக்காங்களே?”

  “நாளைக்கு வீட்டுக்கு வாங்க சொல்றேன்”

  …..

  வழக்கம்போல கண்ணை மூடிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

  “நான் சொல்லுறது கொஞ்சம் கடுமையா இருக்கும். அப்படியே போடுறது உங்களுக்கு சங்கடம். துரோகத்தின் இன்னொரு பெயர் ஜெயலலிதா” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் இடைவெளி விட்டார்.

  “கவலைப்படாதீங்க. உங்களுக்கு சிரமம் இல்லாம கொஞ்சம் கடுமையை குறைச்சிக்கறேன்”

  பேசி முடித்ததுமே, “அப்படியொண்ணும் ரொம்ப கடுமையா வந்துடலை இல்லை?”
  yuvakrishnaYuva Krishna

  Advertisements
   
 • Tags: , , ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / Change )

  Connecting to %s

   
  %d bloggers like this: