RSS

நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள விபூஷிகா எனும் சகோதரி

18 Mar

ஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்டப்பகலில் கிராமத்தவர் முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டாள்.

கவிதைக்கான குறிப்பு : எப்பொழுதும் தனது சகோதரனைக் கேட்டு அழுது ஓலமிட்ட அத் தமிழ் சகோதரி இப்பொழுது கடத்தப்பட்டிருக்கிறாள். காவல்துறைத் தலைமையகம் அறிவித்திருப்பதைப் போல அதனை மனிதாபிமானக் கடத்தலா எனத் தீர்மானிப்பது உங்கள் கையிலிருக்கிறது.

  • நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள
    விபூஷிகா எனும் சகோதரி
    63341_10203341156391284_866522752_n
    1972254_10152687443464202_363262644_nஉலக வரைபடமே இங்கே பார்
    யோசனைகளோடு விம்மியழுது
    உதித்த சூரிய மகள் எங்கேயெனச் சொல்

    அண்ணன்மார் மூவருக்கு இளையவள்
    அன்னையின் விழிகளோ அன்பின் உறைவிடம்
    அதுதான் ஐயாக்களே தமிழனின் பாசம்
    அதுவன்றி வாழ்க்கையே போராட்டம் தங்கையே

    கொடிய கனவொன்றைப் போல
    மூத்தவர்கள் இருவர் மரித்திட
    முப்பொழுதும் பார்த்திருந்த
    இளைய அண்ணனும் கடத்தப்பட
    பனையழகு எல்லாம் அழிந்த பூமியில்
    ஸ்வரம் இழந்த பாடலானாள்
    இரட்சகனைத் தேடியதால் – நரகத்துக்கு
    கொண்டு செல்லப்பட்டுள்ள சகோதரியொருத்தி

    கற்றறிந்த சிலுவைக் குறிகளுக்கு
    சத்தியத்தில் இடமில்லை
    குரலெழுப்பிப் பூத்த மலரொன்று
    சிதைகிறது இரகசியமாக

    அவளுமொரு சிறுமி
    இருந்திருக்கக் கூடும் கனவுகள் ஆயிரம்
    இன்னும் கண்டிருக்கக் கூடும்
    எப்பொழுதாவது ஒரு புன்னகைத் துளியை

    உலகம் ஒரு சிறைக்கூடம்
    நலிந்தவர்கள் மட்டும் சிக்கிக் கொள்ளும் சதி பீடம்
    இன்றும் வலி தந்திருக்கக் கூடும்
    ஒரு கொடியவனின் பார்வை

    வேண்டுமென்றே கடத்தப்பட்டாள் கறுப்புத் திலகமிட்டவள்
    உருவழித்து தீப்பற்றியெரிகிறது எனது இருதயம்
    உருகவில்லையா செவிமடுக்கையில் உம் மனங்கள்

    நரக நதியினின்றும் மீண்டிட
    நீந்திடு விபூஷிகா!

    – கஸுன் மகேந்திர ஹீனடிகல
    தமிழில் –1794671_10152642121194202_849320477_n எம்.ரிஷான் ஷெரீப்,
    இலங்கை
    http://rishantranslations.blogspot.in/2014/03/blog-post.html

     
  • Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: