RSS

டாக்டர் அனுபவங்கள் : டாக்டர் கதை 7:

31 Mar
Sisyphus Aeolus

டாக்டர் கதை – 7

நியாயமாக இந்தத் தலைப்பில் ஒரு டக்கர் காதல் கதைதான் எழுத வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் யோசித்து வைத்திருந்தேன். ஆனால் ஃபேஸ்புக்கில் பார்த்த ஒரு விஷயம்தான் அவசரமாக இந்தக் கதைகளை எழுத வைத்தது. அது என்ன விஷயம் என்று முடிவுரையில் சொல்கிறேன். அதற்கு முன் மூன்று சம்பவங்கள்.

சம்பவம் 1: (நான் பிறக்கும் முன் நடந்தது)

அப்பா குளித்துக் கொண்டிருக்கும்போது வெளியே பெரியம்மா ஓவெனக் கத்தும் சத்தம். அப்பா துண்டைக் கட்டிக் கொண்டு ஓடி வந்து பார்த்தார். பெரியண்ணன் கீழே விழுந்து தலையிலிருந்து ரத்தம். ஈரத்தலையுடன் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு அண்ணனைத் தோளில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார். நான்கு தையல்கள். பாகப்பிரிவினை சமயத்தில் அப்பா சட்டையை அண்ணன் பிடித்த போது, தெருவில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ராசு அண்ணன் சொல்லித்தான் இந்தக்கதையே எனக்குத் தெரியும்.

 • சம்பவம் 2:பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு வயதே நிரம்பியிருந்த அக்கா பையனுக்கு(?!?!) சட்டையைக் கழற்றும்போது காதில் மாட்டியிருந்த கம்மல் இழுத்துவிட்டது. ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டுவதைக் கண்டு அக்கா மயங்கி விழ நான் கம்மலைக் கழற்ற முயன்றேன். திருகாணியைக் காணவில்லை. தொலையவெல்லாமில்லை. கம்மல் இழுத்து காதின் சதைக்கு நடுவே மாட்டிக்கொண்டது திருகாணி. ஆட்டோ பிடித்து கேம்ப் ரோடில் இருக்கும் ஒரு டாக்டரிடம் தூக்கிச் சென்றோம். நம்பினால் நம்புங்கள் மூன்றே வினாடிகளில் அதைக் கழற்றிக் கையில் கொடுத்து விட்டு அடுத்த கேசைப் பார்க்க ஓடிவிட்டார். கின்னஸ் சாதனை புரிபவர்களின் (ஒரு நிமிடத்தில் ஐநூறு முட்டைகள் உடைத்தல் போன்ற வகையறா ) கை ஒரு பரபரப்புடனும், ஸ்டைலுடனும் வேலை செய்யும் இல்லையா அது போல். இடது கையை நீட்டினார், கையில் ஒரு காட்டன் , ரத்தத்தை துடைத்தார், வலதுகையால் ஒரு மேஜிக். டன்!!!

  சம்பவம் 3:

  ஊரிலிருந்து வந்த அம்மாவிடம் விலையுயர்ந்த உலர்திராட்சைகளைக் கொடுத்து விட்டிருந்தார் அப்பா. (கிஸ்மிஸ்). என் பையன் அதைக் கீழே கொட்டி விளையாடிக் கொண்டே தின்று கொண்டிருந்தான். விளையாட்டுப் போக்கில் ஒன்றை மூக்கில் திணித்து விட்டான். உள்ளே போய்விட்டது. ஞாயிறு மாலை ஏழு மணி. நொடியும் தாமதிக்காமல் காரை எடுத்து நகரின் பெரிய தனியார் மருத்துவமனையின் வேளச்சேரி கிளைக்கு ஓடினேன். மருத்துவத்தைப் பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும் பலசரக்கடை ஐட்டத்தைப் பற்றித் தெரியுமில்லையா. ஈரம் பட்டு கிஸ்மிஸ் ஊதிவிடும். மூச்சுத்திணறல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பயலுக்கு வயது இரண்டு என்றாலும் ஒழுங்காகப் பேச வராது. டூட்டியில் ஒரு இளம் டாக்டர்தான் இருந்தார். சமீபத்தில்தான் சேர்ந்திருக்கக்கூடும். டார்ச் அடித்துப் பார்த்துவிட்டு “என்கிட்ட எந்த எக்யூப்மெண்டும் இல்லை. இதை ஈயென்டி டாக்டர்தான் பார்க்க முடியும். முயற்சி செய்து வேணா பார்க்கவா? ” என்றார். எனக்கு ஷாக்கிங்காக இருந்தது. “முயற்சி செய்து பார்க்கவா” என்று கேட்டதன் காரணம் சரியாகப் புரியவில்லை. அது எப்போது புரிந்தது என்பதையும் முடிவுரையில் சொல்கிறேன் .”தாராளமாப் பண்ணுங்க டாக்டர்” என்றேன். படுக்க வைத்து, வளைந்த கத்தரிப்பான் போல் ஒன்று இருக்கும் அல்லவா? அதை வைத்து நொடி நேர மேஜிக். வெளியே எடுத்து விட்டார். எவ்வளவோ வற்புறுத்தியும் ஃபீஸ் வாங்க மறுத்துவிட்டார். பையனிடம் –
  “உன் பேர் என்னடா ?”..
  “ஆநந்….”,
  “என்னது?”
  “ஆனந்த் டாக்டர் ” என்றேன்.
  “அந்தப் பெயரெல்லாம் இப்ப வெக்குராங்களா? ரொம்பப் பழைய பேராச்சே” ..
  “சின்ன வயசில இறந்து போன என்னோட தம்பி பேரு .. உங்க பேரு டாக்டர்?”..

  “ஆனந்த்” !

  (முற்றும்)

  253804_102065686637727_190303041_nSisyphus Aeolus
Advertisements
 
Leave a comment

Posted by on March 31, 2014 in 1

 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: