RSS

Monthly Archives: April 2014

நெஞ்சை அடைக்க வைத்து கண்களில் சட்டென கண்ணீரை கசிய வைத்தது

நெஞ்சை அடைக்க வைத்து
கண்களில் சட்டென கண்ணீரை
கசிய வைத்தது
சிறுமி அர்ஷியாவின் முகம் !
தந்தை இறந்துபோன சோகத்தைக்கூட உணரமுடியாத
பச்சைக் குழந்தையின்
பால் வடியும் முகம்
கல் நெஞ்சையும் கரைய வைக்கும் !

ஆறுதல் வார்த்தைகளுக்கு விலையே இல்லாத இதயத்தை பதற வைக்கும் பரிதாபக் காட்சி இது !
சந்தேகமேயில்லை…

 • இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட தாயையும்
  காஷ்மீரியாகப் பிறந்து விட்ட ஒரே பாவத்துக்காக உயிரை பறிகொடுத்த தந்தையையும் இழந்து…
  தினந்தோறும் கதறித் துடிக்கும்
  காஷ்மீர் குழந்தைகளின் படங்களை பார்க்கும் போது ஏற்படும்
  அதே துக்கமும் துயரமும் விரக்தியும் பரிதாபமும்
  அர்ஷியாவின் படத்தைப் பார்க்கும் போதும் ஏற்பட்டது !

  படங்கள் :
  1

  3
  @ பச்சைப் பூ அர்ஷியாவின் மனதை பதற வைக்கும் காட்சி
  @ இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி தந்தையை இழந்து துடிக்கும் சிறு மகளின் கதறல்
  Abu Haashima Vaver
  Abu_Haashima

  Advertisements
   
 • Leave a comment

  Posted by on April 30, 2014 in 1

   

  Tags: , , , , ,

  கொஞ்சம் மழை !

  10268528_630547000357366_6178167643686889974_nகோட்டாறில் இன்றும்
  கொஞ்சும்
  கொஞ்சம் மழை !
  *********************

  மழை மழை ஓடிவா
  மேகமாக உருண்டு வா
  காஞ்சு போன நெலத்துக்கெல்லாம்
  தண்ணீரை கொண்டு வா !

  மலையைத் தாண்டி ஓடிவா
  மரங்கள் மேலே தவழ்ந்து வா
  வரண்டுபோன நாக்கைஎல்லாம்
  தண்ணீரால் நனைக்க வா !

  சூடெல்லாம் விரட்ட வா
  வீடெல்லாம் குளிர வா
  மின்வெட்டால் மயங்கிப் போன மனசுக்குள்ளே
  மழைநீரை கொட்ட வா !

 • ஓட்டு வாங்க பணம் தருவார்
  மறந்தும் கூட தரமாட்டார்
  ஓசி மிக்சி ஓட்டதுக்கு
  ஒடுக்கத்து மின்சாரம் தரமாட்டார் !

  பனை விசிறி வீசி வீசி
  பெத்தும்மா கையும் வீங்கிப் போச்சு
  வேர்வையில நனைஞ்சி நனைஞ்சி
  பெத்தாப்பாக்கும் களச்சு போச்சு !

  குடிக்கதுக்கு தண்ணியில்ல
  குளிக்கதுக்கும் ஆத்துத் தண்ணி இல்ல..
  அம்மா தண்ணி வாங்கதுக்கும்
  அம்புட்டு ரூவா என்கிட்டே இல்லை !

  ஒட்டுக் கேட்டு நீ வரமாட்டே
  ஓட்டு வீட்டுக்கும் நீதான் வருவே
  தண்ணி கேட்டு நீ வரமாட்டே
  தாகம் தீர்க்கவும் நீதான் வருவே !

  படச்சவன் உன்னை அனுப்பி வச்சான்
  பாவிகளையும் ரட்சித்தான்
  வெயிலில் வாடிய எங்களுக்கு
  வான்மழை உன்னை அனுப்பி வச்சான் !

  மழையே மழையே வா வா
  மகிழ்வாய் தண்ணீர் தா தா
  வானில் பந்தல் போட்டு
  தனித்தவன் அருளை ஊட்டு !

  Abu_HaashimaAbu Haashima Vaver

   
 • Leave a comment

  Posted by on April 24, 2014 in 1

   

  Tags:

  வெட்கம் !

  Untitledஅகத்தின் நானமே
  புறத்தில் வெட்கமாய்
  முகத்தில் தோன்றிடும்
  மனத்தில் உதித்திடும்

  வெட்கிக் குனிவது
  வீரப் பண்பல்ல
  வேஷமிடுவது
  நன் நடத்தையுமல்ல

  தர்க்கம் பேசிடும்
  தரத்தில் குறைந்தவர்
  வெட்கம் இழந்து – தம்
  வினையை தேடுவர்

 • வெட்கம் அவசியம்
  விருப்பின் மந்திரம்
  புகழைச் சேர்த்திடும்
  பகையைப் போக்கிடும்

  பெண்மை நானமும்
  பேணிக் காப்பதும்
  நல்ல பண்பென
  நன்மை பயக்குமே

  மனிதப் பிறவிகள்
  மானம் காத்திட
  மேனி மறைப்பதும்
  மேன்மையாய் வெட்கமே

  சொர்க்கம் கிடைத்திட
  சுவிட்சம் அடைந்திட
  படைத்த இறைவனை
  பணிந்து நடந்திடு

  வெட்கமென்பதை
  தூர விலக்கிட
  மதியியை தீட்டி -தம்
  விதியைவென்றிடு

  விடியல் பெற்றிட
  வெற்றி அடைந்திட
  வேண்டப்பட்டதில்
  வெட்கப்பட்டிடு

  51mmx51mmஅதிரை மெய்சா

   
 • Leave a comment

  Posted by on April 24, 2014 in 1

   

  Tags: , ,

  நன்றிப் பெருக்கில் கண்களில் வடியும் கண்ணீரில்.

  Prayer2

  அதிகாலை மழை
  தரும்
  அமைதியில் மனம்
  அதிகாலை சிந்தனையில்
  வரும்
  தூய எண்ணங்கள்
  அதிகாலை பொழுதில்
  வரும்
  இறையோனின் அருள்

  அதிகாலையில் எழுந்திருப்போம் தொழுது இருப்போம்
  ———————————————————-

  ஓய்ந்து போகும்………………………………..

  பருவம் பார்த்து
  நட்டுவைத்த மரமும் – ஓய்ந்து போகும்

  பக்குவமாய் பாடுபட்ட
  நல்ல உழைப்பும் – ஓய்ந்து போகும்

  உரமாய் வளர்ந்த
  உடல் ஆரோக்கியமும் – ஓய்ந்து போகும்

  கார்மேகம் பெய்யும்
  ஆடை மழையும் – ஓய்ந்து போகும்

  கருமி சேர்த்து
  வைத்த செல்வமும் – ஓய்ந்து போகும்

  ஓயாதே என்றும்
  நன்மக்கள் ஈகை குணம் – ஓயாதே.
  ———————————————————-
  இன்றைய ‘படித்தவர்கள்’

  கதிரவனை காயவிட்டு
  இரவுகளை உறங்காமல்விட்டு
  விளைநிலங்களை வித்துவிட்டு
  காடுகளை அழித்துவிட்டு
  குடிநீரை விலைக்கு வாங்கிவிட்டு
  பிட்சாவை சாப்பிட்டுவிட்டு
  கார்பொரேட் முதலாளியை கும்புட்டுவிட்டு
  வாழ்க்கையை கழித்துவிட்டு
  செத்து போய் விடுகின்றனர்.

  —————————————————-
  பேச்சு

  பேச்சு பேச்சாக இருக்க வேண்டும்.
  பூசி மெழுகி பேசும் பேச்சு சரிப்படாது.
  நேர்பட பொருள் புரிய பேச வேண்டும்.
  முடிந்தால் 7 வயது குழந்தையிடம்
  பேசுவதுபோல் பேசிப் பாருங்கள்
  சொல்லுவது யாருக்கும் விளங்கும்.

  பேசும் பார்வைகள்……….

  வீடு திரும்பியதும் ஓடோடி வந்த
  குழந்தையின் கட்டியணைப்பில்

  பயணம் புறப்பட்டு வாசல் தாண்டும்போது
  வேண்டியவர்கள் கண்களில்

  சேர்ந்தே பயணித்து பேருந்தில்
  இருந்து இறங்கும் போதினில்

  நன்றிப் பெருக்கில் கண்களில்
  வடியும் கண்ணீரில்.

  Abdul Kader Sangam
  Abdul Kader Sangam
   
  Leave a comment

  Posted by on April 24, 2014 in 1

   

  Tags: , , , , ,

  முதுமையில் இளமை!

  32மனிதனாக பிறந்த யார்தான் எப்போதும் இளமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள்.

  இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களை இளமையானவராக உணரவும், வெளிக்காட்டி கொள்ளவும் பல வழிகளை ஆர்வமுடன் தேடுகின்றனர்.

  அந்த வழிகள் சத்தான உணவுகளை உண்பதன் மூலம் கிடைக்கின்றன.

 • கொய்யாப்பழம்

  கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புகளும் இதில் காணப்படுகின்றன,

  கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது.

  தோல் வறட்சியை நீக்கி முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

  17

  சால்மன்

  சருமத்தை மிருதுவாக வைக்க பெண்கள் வாரத்திற்கு ஒரு முறை 12 அவுன்ஸ் சால்மன் மீனை உண்ண வேண்டும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது.

  சால்மனில் வைட்டமின் பி12, வைட்டமின் டி ஆகியவை செறிந்துள்ள ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. உடலின் கட்டிகளை குறைக்கிறது. இது நாள்பட்ட நோயின் தீவிரத்தை குறைக்கிறது.மேலும் 50 வயதினை கடந்த பெண்களின் பொதுவான பிரச்சனையான இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது.

  22

  பசுமையான இலை கீரைகள்

  பசலைக்கீரை, கொலார்டூ கீரைகள், ரோமன் லெட்யூஸ் மற்றும் ஸ்விஸ் கேரட் ஆகியவை வைட்டமின் சி, வைட்டமின் கே, போலிக் அமிலம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள பசுமையான காய்கறிகள் ஆகும்.

  க்ரீன் கேரட்டில் உள்ள வைட்டமின் பி இதயத்திற்கும், நினைவாற்றலுக்கும் நல்லது. வைட்டமின் ஏ சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மேலும் எண்ணற்ற பச்சை காய்கறிகளில் கண்டறியப்பட்டுள்ள லுடேயின் பார்வை திறனை பாதுகாக்கிறது. பச்சை காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் முகத்தின் கோடுகளையும், சுருக்கங்களையும் தடுக்கிறது.

  பொதுவாக பச்சை காய்கறிகளில் காணப்படும் லைகோஃபைன், லூடென் மற்றும் பீட்டா கரோட்டீன் சருமத்தின் முதுமைக்கு காரணமான புறஊதாக் கதிர்களை தடுக்கிறது.

  கீரைகளில் காணப்படும் சத்துக்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் முடக்கு வாதம் ஆகிய நோய்க்கு எதிராக போரிடுகிறது. மேலும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது.

  32

  பூண்டு

  பூண்டில் சுவையும், நன்மையும் சம அளவில் கலந்துள்ளன. கல்லீரலின் இயக்கு திறனை அதிகரிக்கவும், நச்சுகளை அகற்றவும் பூண்டு துணை புரிகிறது.செல் சீரழிவினை தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்களை தடுக்கிறது.

  பட்டியலிலுள்ள மற்ற உணவு வகைகளை போலவே பூண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் செறிந்து காணப்படுகிறது. இது அசாதாரண செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. விழிப்புணர்விற்காக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது.
  நன்றி 41
  http://www.thoothuonline.com/archives/55424

   
 • Tags: , ,

  உனக்கு அன்பாலே வாசாப்பு…

  10173706_654668891271143_6127921618431023248_nஎன்னையும் என் பிள்ளைகளையும் ஆட்டிவிக்கும் கொடுமைக்காரி ,
  அன்பால் கொல்லும் அரக்கி ,
  தவறு செய்யவிடா காவல்காரி ,
  அழுவதையே அழித்துவிட்டு ,
  ஆனந்தத்தையே தினிக்கும் திமிரு ,
  ஒருநாளும் பிரிந்துவாழாத
  ஆனவக்காரி ,
  நாங்கள் அனுபவிக்கும் நிலையை இன்னும் ,
  கைக்குள் வைத்திருக்கும்
  சூட்ச்சமக்காரி ,
  உனக்கு அன்பாலே வாசாப்பு ,
  இன்று பிறந்து எங்களை அன்பாலே, அன்பாலே ! இன்னும்
  ,,,,, இன்னும் ,,,, நடத்து உனது ஆட்சியை !

 • 1517823_654493017955397_2054919116494786951_n
  Sathiyananthan Subramaniyan Banumathi

   
 • Tags: , , , ,

  நம்ம கொள்கைக்கு விரோதமா இருக்காம்.

  சார் நம்ம டிவி.,ல பா.ஜ.க.,வுக்கு வாக்களிக்க சொல்லி ஆட் போட்டோம்ல….

  ஆமா அதுக்கென்ன இப்ப?

  130312112924_facebook_304x171_afp_nocreditநம்ம கொள்கைக்கு விரோதமா இருக்காம். ஃபேஸ்புக்ல கிண்டல் பண்றாங்க…

  யோவ்…..கொள்கை வேறு, வியாபாரம் வேறு. இதுகூட புரியாதாமா இவங்களுக்கு?

  இப்ப புரிஞ்சிருக்கும்.

  இப்ப புரிஞ்சிருக்குமா நீ என்ன சொல்றே?

  இருங்க…..விளக்கமா சொல்றேன். மத்திய சென்னைல உங்க தம்பி தயாநிதி மாறன் நிக்கறாப்ளேல்ல?

  ஆமா அதுக்கு என்ன இப்ப?

 • அந்த தொகுதி அண்ணா.தி.மு.க.,வேட்பாளருக்கு ஆதரவா ஒரு விளம்பரம் தயாரிச்சுருக்காங்கலாம் அந்த கட்சிக்காரங்க….அதாவது ரெண்டு தடவை எம்.பி.யா இருந்த உங்க தம்பி எதுவுமே செய்யல…அதனால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள், விஜயகுமாரை எம்.பி.யாக்கி தயாநிதி மாறன் முகத்தில் கரி பூசுங்கன்னு இருக்காம் அந்த விளம்பரம்?

  சரி அதை ஏன் எங்கிட்டே சொல்றே?

  நமக்கு வியாபாரம்தானே முக்கியம்ன்னு பணத்தை வாங்கிட்டு அந்த விளம்பரத்தையும் நம்ம டி.வி.ல ஒளிபரப்ப சொல்லிட்டேன்.

  ஙே…ங்கே….

  ‪#‎விளம்பரத்துவம்‬
  10253863_677364655658012_6407730230165712225_nரஹீம் கஸாலி

   
 • Tags: , ,