RSS

ஓட்டு கேட்பதில் ஆதாயம் உள்ள ஒவ்வொருவரும் ஓயாமல் ஓடி ஓடி வேட்டையை நடத்துகிறார்கள்..

02 Apr

ஓட்டு வேட்டை தீவிரமாக நடை பெறுகிறது, ஓட்டு கேட்பதில் ஆதாயம் உள்ள ஒவ்வொருவரும் ஓயாமல் ஓடி ஓடி வேட்டையை நடத்துகிறார்கள்..

ஊடகங்கள் அரசியல்வாதியின் சாதனைகளையும் ஊழல்களையும் பட்டியல் போட்டு கொண்டு இருக்கின்றன. ஒரு கட்சியின் சாதனையை அதே கட்சியின் பொதுகூட்டங்களின் வாயிலாகவும் ஊழல்களை எதிர் கட்சியின் கூட்டங்களின் வாயிலாகவும் அறியமுடியும்.

இங்கு நான் எழுத போவது கட்சிகளின் துரோகத்தையோ ஊழல்களையோ அல்ல, மாறாக நமக்கு நாமே செய்துகொள்ளும் துரோகத்தை.. அது என்ன சுய துரோகம்? புகை, குடி, நேரத்திற்கு உண்ணாமை, கோபம், பெருமை, சந்தேகம், தொடர்ந்து தீயவைகளயே பார்த்தலும் கேட்டலும் மட்டும் நமக்கு நாமே செய்யும் தீமை அல்ல, சரியான நபரை பதவியில் அமர்தாததும் தவறான தகுதி அற்றவரை பதவியில் உட்கார வைத்தாலும் ஆகும்.

  • ஆட்சியில் இருப்பவரை தேர்ந்தெடுப்பது என்பது நம் உடலையும் நம் வீட்டையும் பார்த்து கொள்ளும் அளவை விட பலமடங்கு சிரத்தை எடுத்து கொள்ளுதல் என்பது அவசியமான ஒன்று.

    ஓட்டு என்பது பிரம்மாஸ்திரம், அதை வீணாக்குதலும் பணத்திற்கு விரயமாக்குதலும் யானை தன் தலையில் மண்ணை இடுவது போல் ஆகும்.

    என் தாயார் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டி இட்ட பொழுது ஏறக்குறைய ஒரு மாதமாய் ஒவ்வொரு வீடாய் சென்று தெரிந்தவர் அனைவரையும் சந்தித்து பேசினார். ஆனால் படு தோல்வியை சந்தித்தார்.. நாங்கள் எதிர் பார்த்த நெருங்கிய நண்பர்கள் என்று இருந்தவர், கட்சியை சார்ந்தவர்கள் எவரும் எங்களுக்கு வாக்கு அளித்து இருக்கவில்லை.
    காரணங்கள்
    1) அவர் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை,
    2) போதை பானம் கேட்ட என் நண்பர்களுக்கு முடியாது என்றார்
    3) அவர் புது கட்சியின் சார்பில் நின்றது. (சாதி கட்சி என்பதால் கட்சியின் மீது பெரிதாக மதிப்பு என்று எதுவும் எனக்கில்லை)

    ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் ஒருவன் எப்படி தன் கடமையை ஒழுங்காக செய்ய முடியும் என்ற அடிப்பதை அறிவு இல்லாத மக்கள் இவர்கள். அல்லது எப்படியோ போகட்டும் நமக்கு இப்பொழுது குடிக்கவோ இல்லை ஒரு நாள் கேளிக்கைக்கு பணம் கிடைத்தால் போதும் என்பவர்கள் இவர்கள்.

    பிறகு எப்படி நல்ல எதிர் காலத்தை வரும் சந்ததிகளுக்கு நாம் விட்டு செல்லமுடியும்.. எதிர் காலத்தை விட்டுவிடுவோம், இன்று என்ன நடக்கிறது? இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகள் என்று முடித்து விடலாம் என்று எண்ணிவிடாதீர்கள் சகோதரர்களே..

    பல நல்ல திட்டங்களை வைத்து இருந்தார் என் தாயார், முன்னோடி கிராமமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோள் அவருக்கு… மேலும் கட்சியின் நிறுவனர் அந்த திட்டங்களை நிறைவேற்ற நிதி உதவி செய்வதாக வாக்களித்து இருந்தார். அவை அனைத்தும் வீணாய் போனது.. மக்களின் சுயநலமான சிந்தனையும் யோசித்து தேர்ந்தெடுக்காத போக்கும் அவைகள் நிறைவேற்ற முடியாமல் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது எங்கள் கிராமம்..

    எந்த கட்சிக்கு ஓட்டுபோட வேண்டும் என்று நாம் சொல்லவில்லை, ஓட்டு போடும் காரண காரியத்தை அறிந்து அதற்கு யார் பொருத்தமானவர் என்பதை அறிந்து வாக்கு அளியுங்கள்..
    Sakthi T VelSakthi T Vel

     
  • Tags: , ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: