RSS

உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..???

18 Apr

-நிஷா மன்சூர்

எண்பதுகளின் இறுதிவரை வீடுகளிலும் ஹோட்டல்களிலும் உமிக்கரிதான் பல்துலக்கப் பயன்படுத்தப்படும் வஸ்துவாக இருந்தது.
சில கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் கல் உப்பைப் பொடித்து லேசாக எலுமிச்சை பிழிந்து பல்துலக்குவார்கள்,சில இடங்களில் சாம்பலும் புழக்கத்தில் இருந்தது.அப்போதெல்லாம் இவ்வளவு பல்நோய்கள் இருந்ததாக நினைவிலில்லை.

அதன் பிறகுதான் கோபால் பற்பொடி பிரபலமானது,அதன் சுவை மிகச் சுவாரஸ்யமானது.பல்துலக்குவதை விட அப்படியே சாப்பிடுவது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடித்தமான விஷயம்.

 • அதற்குப் பிறகான காலம்,1431 பயோரியா பற்பொடிக்கான காலம்.
  கோபால் பற்பொடி சாமான்யர்களுக்கான வஸ்துவாக ஆகிவிட்ட பிறகு கொஞ்சம் வசதியானவர்கள் பயோரியாவிற்கு மாற ஆரம்பித்தனர்.அதன் காரலான சுவையும் வெண்மையும் ஆரோக்கியமானதென உணரப்பட்டது.

  இதன் பிறகுதான் டூத்பேஸ்ட் புரட்சி ஏற்பட்டது.கோல்கெட் மட்டுமே கோலோச்சிய காலம் அது.அவர்கள் பற்பொடியும் விற்பனை செய்தார்கள்.கூடவே பினாகா சிபாகா போன்ற பசைகளும் பொடிகளும் உலாவந்தன என்றாலும் கோல்கெட்டின் விற்பனையை யாராலும் எட்ட முடியவில்லை. அச்சூழலில் சில உயர்தட்டு கனவான்களின் பாத்ரூம்களீல் புழங்கப்பட்டது க்ளோஸப் டூத்பேஸ்ட். அது ஜெல் என்பதாலும் வண்ணமயமாக அளிக்கப்பட்டதாலும் காலப்போக்கில் பெரும் மார்க்கெட் ஷேரைப் பிடித்தது. சில சுதேசி பிரியர்கள் வீக்கோ வஜ்ரதந்தியையும் உபயோகித்தனர்.அதில் நானும் ஒருவன்.

  உலகமயலாக்களுக்குப் பிறகு குளோசப் பெரும் விளம்பரப் புரட்சியுடனும் சுவாசப்புத்துணர்ச்சி, கவர்ச்சி, காதல் போன்ற சகல யுத்திகளையும் பயன்படுத்தி ஏனைய போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ளி முன்னேறியது.

  டாக்டர்கள் பரிந்துரைக்கும் நம்பர் ஒன் பிராண்ட்களும்
  டாக்டர்கள் ப்ரிஸ்கிரைப் செய்யும் சென்சோடைன் போன்றவைகளும் மிஸ்வாக் பெப்சோடென்ட் நீம் மற்றும் ஹிமாலயா ஓரல்பி பேஸ்ட்களும் பல்கிப்பெருகி பல்லுவெளக்கும் பிஸ்னஸ் ஒரு பெரும் பிஸ்னசாக பரிணமித்திருக்கிறது.

  ‪#‎இப்போ‬ என்னடான்னா,
  உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா..
  உங்க டூத் பேஸ்ட்ல எலுமிச்சை இருக்கான்னு வெளம்பரப்படுத்தறாங்க…..
  யப்பா அய்யன்மார்களா,
  நாங்கெல்லாம் உப்பும் எலுமிச்சையும் போட்டுத்தான் பல்லு வெளக்கிட்டிருந்தோம்,எங்களைக் கெடுத்ததே நீங்கதான்.
  இப்போ எங்க பாரம்பர்யத்தை எங்களுக்கே விக்கறீங்களா…????
  1483187_436958186448104_3561829026564044447_n
  1545112_418309211646335_1932748514_nநிஷா மன்சூர்

  Advertisements
   
 • Tags: , ,

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

   
  %d bloggers like this: