RSS

‎காயங்கள்‬ ஆறினாலும் வடுக்கள் மறைவதில்லை..!!

06 May

ஒரு கடந்தகால வலியும்,ஒரு கடந்த வருட நினைவும்
ஒரு நிகழ்காலச் சந்திப்பும்…!!

இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு கவிநண்பரிடம்
நெருக்கமான நட்பில் இருந்தேன்,கோவில் நகரத்தில் கவிதைபேசிக் கழிந்த எத்தனையோ இரவுகள்;இலக்கியம் பேசிக் கரைந்த எத்தனையோ பகல்கள்.

ஒருமுறை என் குடிசைக்கும் வந்திருக்கிறார்,
நள்ளிரவு,இல்லை அதிகாலை 3.00மணிக்கு..
அப்போதும்கூட ஆ.மாதவன் கதைகளைப் பற்றி
உரையாடல் நிகழ்ந்ததாய் நினைவு.

  • காலம் அவரை பெருநகரத்தை நோக்கி நகர்த்தியது…1997 என நினைக்கிறேன். தொழிலில் ஏற்பட்ட கடும் நஷ்டத்தின் காரணமாக பெரும் மன உளைச்சலுடன் பெருநகரம் நோக்கி விரைந்த நான் அவரை செல்பேசியில் அழைத்தேன்..BPL நிறுவனம் சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருந்த காலம் அது.இன்கமிங் காலுக்குக்கூட ரூ.8/. வசூலித்ததாக நினைவு….
    மிகுந்த பதட்டத்தோடு என் அழைப்பை எதிர்கொண்ட அவர் கோர்வையாக என்னிடம் பேசவே இல்லை.

    “நிஷா,இது பீக்அவர், நிறைய சார்ஜ் பண்ணுவாங்க நீங்க அப்புறமா கூப்பிடுங்களேன்” என்ற அவரை மறுபடி அழைக்க என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை…இந்த நிமிடம் வரை அவரிடம் எந்தத்தொடர்பும் இல்லை.

    என் இதயநண்பன் இளையசெல்வன்
    (Elaiya Selvan) என்னை ஆதரித்தான்.அவனது எளிய அறையில் ஆறு நண்பர்களுடன் என்னையும் இணைத்துக்கொண்டு கிட்ட்த்தட்ட ஒரு மாதம் என்னை ஆராதித்தான் …மன ஆசுவாசமடைந்த பிறகு
    ஊர்திரும்பிய நான் அடுத்தடுத்த காலகட்டங்களில் இறையருளால் எல்லா உயரங்களையும் அடைந்தேன்….

    நான் எந்த சூழ்நிலையில் அவரை அழைத்தேன் என்று அவருக்குத் தெரியாத போதிலும் அவருடைய புறக்கணிப்பு என்னை மிகவும் காயப்படுத்தியது..
    இன்று முகநூலில் அந்த நண்பரைப் பார்த்தேன் ……!!

    ‪#‎காயங்கள்‬ ஆறினாலும் வடுக்கள் மறைவதில்லை..!!

    10277149_446887678788488_4134850702534781789_n-இது கடந்த 2012 டிசம்பரில் நானிட்ட பதிவு.
    படத்தில் நேற்று காலை எங்கள் வீட்டுக்கு தன் குடும்பத்துடன் வருகைதந்த நண்பன் இளையசெல்வன்.
    நிஷா மன்சூர்
    10171721_443810355762887_237471937607906529_n

     
  • Tags: , , , , ,

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out / Change )

    Twitter picture

    You are commenting using your Twitter account. Log Out / Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out / Change )

    Google+ photo

    You are commenting using your Google+ account. Log Out / Change )

    Connecting to %s

     
    %d bloggers like this: